முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

32-வது தமிழ்நாடு ஜுனியர் தடகளப் போட்டிகளை தமிழ்நாடு காவல்துறை முன்னாள் தலைவர் தேவாரம் துவக்கி வைத்தார்

சனிக்கிழமை, 2 செப்டம்பர் 2017      மதுரை
Image Unavailable

மதுரை.-மதுரை ரேஸ்கோர்ஸ் டாக்டர் எம்.ஜி.ஆர். விளையாட்டு மைதானத்தில் 32வது தமிழ்நாடு ஜுனியர் தடகளப் போட்டிகளை தமிழ்நாடு காவல்துறை முன்னாள் தலைவர் தேவாரம்,இ.கா.ப., அவர்கள் தலைமையில், மாவட்ட ஆட்சித்தலைவர்  கொ.வீர ராகவ ராவ்,இ.ஆ.ப., அவர்கள் முன்னிலையில்  கூட்டுறவுத்துறை அமைச்சர்  செல்லூர்.கே.ராஜு,  செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர்   கடம்பூர் சே.ராஜு,  வருவாய்த்துறை அமைச்சர்  ஆர்.பி.உதயகுமார் ஆகியோர்  துவக்கி வைத்தனர்.
  இந்த போட்டியில் 20 வயதுக்குட்பட்ட ஆண் இளையோருக்கான 10,000 மீட்டர் நடைப்போட்டி, 18 வயதுக்குட்பட்ட ஆண் இளையோருக்கான 10,000 மீட்டர் நடைப்போட்டி, 20 வயதுக்குட்பட்ட பெண் இளையோருக்கான 10,000 மீட்டர் நடைப்போட்டி, 16 வயதுக்குட்பட்ட ஆண் இளையோருக்கான 5,000 மீட்டர் நடைப்போட்டி, 18 வயதுக்குட்பட்ட பெண் இளையோருக்கான 5,000 மீட்டர் நடைப்போட்டி, 16 வயதுக்குட்பட்ட ஆண் இளையோருக்கான 3,000 மீட்டர் நடைப்போட்டி, 16 வயதுக்குட்பட்ட பெண்கள் நீளம் தாண்டுதல், 16 வயதுக்குட்பட்ட பெண்கள் கோல் ஊண்றிதாண்டுதல், 16 வயதுக்குட்பட்ட ஆண்கள் நீளம் தாண்டுதல், 16 வயதுக்குட்பட்ட ஆண்கள் கோல் ஊண்றிதாண்டுதல், 20 வயதுக்குட்பட்ட ஆண்கள் 100 மீட்டர் தடை தாண்டும் ஓட்டம், ஆண்கள் மற்றும் பெண்களுக்கான குண்டு எறிதல், தட்டு எறிதல் ஆகிய போட்டிகள் நடைபெற்றது.
  இப்போட்டிகளில் வெற்றிபெற்ற வீரர், வீராங்கனைகளுக்கு தங்கம், வெள்ளி, வெங்கலம் ஆகிய பதக்கங்களும், சான்றிதழ்களும் வழங்கப்பட்டது. இந்த போட்டிகளில் 3,250க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர்.   

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து