முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திண்டுக்கல் வந்த முதல்வர் பழனிச்சாமிக்கு அமைச்சர் சீனிவாசன், கலெக்டர் வரவேற்பு

வியாழக்கிழமை, 7 செப்டம்பர் 2017      திண்டுக்கல்
Image Unavailable

திண்டுக்கல், - திண்டுக்கல் வந்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அமைச்சர் திண்டுக்கல் சி.சீனிவாசன், கலெக்டர் வினய் ஆகியோர் வரவேற்பு அளித்தனர்.
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகிலுள்ள கப்பலூரில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள மதுரை காமராஜர் பல்கலைக்கழக உறுப்பு கலை மற்றும் அறிவியல் கல்லூரியை திறந்து வைக்க முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வருகை தந்தார். சேலத்தில் இருந்து கார் மூலம் வரும் வழியில் திண்டுக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகம் பகுதியில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு வரவேற்பு பந்தல் அமைக்கப்பட்டிருந்தது. அங்கு வந்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அமைச்சர் திண்டுக்கல் சி.சீனிவாசன், கலெக்டர் வினய் ஆகியோர் சால்வை அணித்தும், மலர் கொத்து கொடுத்தும் வரவேற்றனர். பின்பு போலீசாரின் அணிவகுப்பு மரியாதையும் அளிக்கப்பட்டது. அதனை முதல்வர் பழனிச்சாமி ஏற்றுக்கொண்டார்.
நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் நத்தம் இரா.விசுவநாதன், மாவட்ட செயலாளர் மருதராஜ், டாக்டர் பரமசிவம் எம்.எல்.ஏ. மற்றும் அ.தி.மு.க. நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து