முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

12.3 லட்சம் ஊழியர்களுக்கு போனஸ் - ரயிவ்வே துறை அறிவிப்பு

புதன்கிழமை, 20 செப்டம்பர் 2017      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி : பண்டிகை காலத்தையொட்டி ரயில்வே துறை ஊழியர்களுக்கு 78 நாட்கள் சம்பள போனஸை ரயில்வே துறை அறிவித்துள்ளது. ரயில்வே துறையின் இந்த போனஸ் அறிவிப்பால் 12.3 லட்சம் ஊழியர்கள் பயனடைவார்கள்.

போனஸ் தொகை ரூ.18,000 முதல் ரூ.19000 வரையாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த முடிவு மத்திய அமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப்பட்டுள்ளது. ரயில்வே அமைச்சகம், வெளியிட்டுள்ள ட்விட் ஒன்றில் "12.3 லட்சம் ரயில்வே ஊழியர்களுக்கு போனஸ் வழங்கப்படுகிறது. தசரா பூஜை விடுமுறை நாட்களுக்கு முன்பு ஊழியர்களின் குடும்பங்களுக்கு புன்னகையை பரிசளிக்கிறோம்" என கூறப்பட்டுள்ளது. இதுதவிர ரயில்வேயின் அடிமட்ட ஊழியர்களுக்கும் 78 நாட்கள் சம்பளம் போனசாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ரயில்வேயின் உற்பத்தித்திறன் மற்றும் செயல்திறனை மேம்படுத்துவதற்காக பணியாளர்களுக்கு போனஸ் அளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

திருவிழா கால கூட்ட நெரிசலை சமாளிக்க, சுமார் 4,000 சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன. கூடுதலாக 9,500 கோச்கள் சேர்க்கப்பட உள்ளன. சில ரயில் நிலையங்களில் இந்த காலக்கட்டத்தில் பிளாட்பாரம் டிக்கெட் விற்பனை செய்யப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த சிறப்பு ரயில்களில் பயணிக்க விரும்புவோர் 30 சதவீதம் கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து