முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருவண்ணாமலை மாவட்டத்தில் டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது: அமைச்சர் சேவூர் இராமச்சந்திரன் பேட்டி

சனிக்கிழமை, 7 அக்டோபர் 2017      திருவண்ணாமலை
Image Unavailable

திருவண்ணாமலை மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக தமிழக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் எஸ்.இராமச்சந்திரன் கூறினார். திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியரகத்தில் அனைத்து அரசு துறை மூலமாக செயல்படுத்தப்படும் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்த மாவட்ட அளவிலான ஆய்வு கூட்டம் அமைச்சர் சேவூர் எஸ்.இராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்றது.

ஆய்வு கூட்டம்

ஆட்சியர் கே.எஸ்.கந்தசாமி முன்னிலை வகித்தார். கூட்டத்தில் சட்டமன்ற உறுப்பினர்கள் வி.பன்னீர்செல்வம், மு.பெ.கிரி, கே.வி.சேகரன், தூசி கே.மோகன், அம்பேத்குமார், டிஆர்ஒ பொ.ரத்தினசாமி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் க.லோகநாயகி, மாவட்ட பழங்குடியினர் நல திட்ட அலுவலர் ப.சுப்பரமணியன், கோட்டாட்சியர் உமாமகேஸ்வரி உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். அதனைத் தொடர்ந்து அமைச்சர் சேவூர் எஸ்.இராமச்சந்திரன், செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் திருவண்ணாமலை மாவட்டத்தில் 50க்கும் மேற்பட்ட அரசு துறைகளின் சார்பில் நடைபெறும் வளர்ச்சி திட்ட பணிகளின் முன்னேற்றம் குறித்து ஆய்வு நடத்தினோம். பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு தெரிவித்திருக்கிறோம்.

மேலும் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இந்த மாவட்டத்தில் டெங்கு பாதிப்பு கட்டுக்குள் உள்ளது. காய்ச்சலால் பாதிக்கப்பட்டு அனுமதிக்கப்படும் நபர்களுக்கு அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சுகாதார துறையில் மஸ்தூர் பணியாளர்களின் எண்ணிக்கை அதிகரிதிருக்கிறோம். நகராட்சிகள், பேரூராட்சிகள் மற்றும் கிராம ஊராட்சிகளில் கொசு மருந்து அடிப்பதற்கு தற்போது 48 கருவிகள் உள்ளன. கூடுதலாக 120 கருவிகள் ஓரிரு நாட்களில் வழங்கப்படும் என்றார். அதனை தொடர்ந்து ஆட்சியர் செய்தியாளர்களுக்கு அளித்தபேட்டியில் காய்ச்சல்

பாதிப்பு தெரிந்ததும் உடனடியாக அரசு மருத்துவனைக்கு வந்து சிகிச்சை பெறுவது அவசியம். அப்போதுதான் நோயின் தீவிரம் அறிந்து முறையான சிகிச்சை அளிக்கமுடியும். கொசு ஒழிப்பு பணிக்காக சுகாதார துறைக்கு தேவையான நிதி ஒதுக்கியிருக்கிறோம். பணிகளை மேற்கொள்ள எந்தவித முன்னனுமதிக்காகவும் காத்திருக்காமல் உரிய நடவடிக்கைகள் எடுக்க சுகாதார துறைக்கு அறிவுறுத்தி இருக்கிறோம். அங்கன்வாடி பணியாளர்கள் இன்னும் ஒரு வாரத்தில் நேர்முக தேர்வில் தேர்வானவர்களுக்கு நியமன ஆணை வழங்கப்படும். அனைத்து மக்களின் கோரிக்கைக்கு ஏற்ப விரைவில் புதிய பேருந்து நிலையம் அமைக்கப்படும் என்றார்.

 

 

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து