முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தெற்காசியா சிலம்பம் போட்டியில் அருப்புக்கோட்டை பள்ளி மாணவர்கள் ஆறு பதக்கங்கள் பெற்றுச் சாதனை

ஞாயிற்றுக்கிழமை, 8 அக்டோபர் 2017      விருதுநகர்
Image Unavailable

அரு;புக்கோட்டை-- இலங்கையில் நடைபெற்ற தெற்காசிய சிலம்பம் போட்டியில் அருப்புக்கோட்டை பள்ளி மாணவர்கள் தங்கம், வெள்ளி, வெண்கலம் 6 பதக்கங்கள் பெற்று சாதணை பெற்றுள்ளனர்.
 தெற்காசிய சிலம்புப் போட்டி இந்தியா, இலங்கை, பாக்கிஸ்தான், பூட்டான், வங்காலதேசம் உள்பட எட்டு நாடுகள் பங்கேற்கும் தெற்காசிய சிலம்புப்போட்டி இலங்கையில் கடந்த 2ம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது.  இந்த போட்டியில் அருப்புக்கோட்டை நெசவாளர் காலனி நகராட்சி உயர்நிலைப்பள்ளியைச் சேர்ந்த மாணவர் கருப்பசாமி நோபல் மெட்ரிக்குலேசன் பள்ளியைச் சேர்ந்த மாணவர் சுரேந்தர்ராஜ்  எஸ்.பி.கே. இன்டர்நே~னல் பள்ளியை சேர்ந்த மாணவர் பிரஜன் ஆகியோர் இலங்கையில் நடைபெற்ற தெற்காசிய சிலம்பப்போட்டியில் கலந்த கொண்டனர்.  இதில் சுரேந்தர்ராஜ் 55 - 65 கிலோ எடை பிரிவில் தங்கப்பதக்கமும் கருப்பசாமி சிலம்பம் போட்டியில் இரண்டு வெள்ளிப் பதகக்மும் பிரஜன் ஒருவெள்ளியும் இரண்டு வெண்கலப் பதக்கம் பெற்று சாதனை படைத்துள்ளனர்.  வெற்றிபெற்ற மாணவர்களை பியூச்சர் பிட்னஸ் இந்தியா சிலம்பப்ள்ளி பயிற்சி ஆசிரியர் தாமரைச்செல்வன் மற்றும் சகமாணவர்கள் பாராட்டினர் அருப்புக்;கோட்டை 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து