முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தீவிரவாதத்துக்கு எதிரான நடவடிக்கை: சிரியா அதிபர் ஆசாத்துக்கு புடின் பாராட்டு

செவ்வாய்க்கிழமை, 21 நவம்பர் 2017      உலகம்
Image Unavailable

மாஸ்கோ: தீவிரவாதத்துக்கு எதிராக சிறப்பான நடவடிக்கை எடுத்ததாக சிரியா அதிபர் பஷார் அல் ஆசாத்துக்கு ரஷ்ய அதிபர் புடின் பாராட்டு தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து ரஷ்ய அதிபர் புடின் வெளியிட்ட அறிக்கையில், சிரியாவில் பயங்கரவாதத்துக்கு எதிராக அந்நாட்டு அதிபர் பஷார் அல் ஆசாத் சிறப்பான நடவடிக்கைகளை எடுத்து வருவதற்கு என்னுடைய பாராட்டுகள். அவருடைய நடவடிக்கைகள் சிரியாவில் நல்ல பலனைத் தந்துள்ளன. சிரியாவில் விரைவில் தீவிரவாதம் அழிக்கப்படும்” என்று கூறப்பட்டுள்ளது.

சிரியா அதிபர் ஆசாத்துடனான சந்திப்புக்குப் பிறகு ரஷ்ய அதிபர் புடின் அமெரிக்கா அதிபருடன் தொலைபேசி வாயிலாக உரையாட இருக்கிறார் என்று ரஷ்ய ஊடகங்கள் செய்தி வெளியிடுள்ளன.

சிரிய போர்
சிரியாவில் ஷியா பிரிவைச் சேர்ந்த அதிபர் ஆசாத்துக்கும் சன்னி பிரிவைச் சேர்ந்த கிளர்ச்சிப் படைகளுக்கும் இடையே 6 ஆண்டுகளுக்கும் மேலாக உள்நாட்டுப் போர் நடைபெற்று வந்தது.

அலெப்போ நகரை தலைமையிடமாகக் கொண்டு கிளர்ச்சிப் படைகள் செயல்பட்டு வந்தன. அந்த நகரின் மீது போரைத் தீவிரப்படுத்திய அரசுப் படைகள் ரஷ்யாவின் உதவியுடன் கிளர்ச்சியாளர்கள் வசம் இருந்த பெரும்பாலான பகுதிகளைக் கைப்பற்றியுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து