முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சபரிமலையில் காணாமல் போகும் குழந்தைகளை கண்டறிய ‘ரேடியோ டேக்’ வசதி

திங்கட்கிழமை, 11 டிசம்பர் 2017      ஆன்மிகம்
Image Unavailable

சபரிமலை, சபரிமலைக்கு வரும் குழந்தைகள் காணாமல் போனால் அவர்களைக் கண்டுபிடிப்பதற்கு ஏதுவாக, ரேடியோ டேக் முறையை காவல் துறை அறிமுகம் செய்துள்ளது. 

கேரளாவில் உள்ள புகழ்பெற்ற அய்யப்பன் கோயிலில் வருடாந்திர மண்டல பூஜை மற்றும் மகரவிளக்கு திருவிழா நடைபெற்று வருகிறது. இந்நிலையில், மாநில போலீஸாரும் வோடபோன் நிறுவனமும் இணைந்து ‘ரேடியோ ப்ரீக்வென்சி ஐடென்டிபிகேஷன் டேகை(ஆர்.எப்.ஐ.டி)’அறிமுகம் செய்துள்ளன.

இதன்படி சபரிமலைக்கு 14 வயதுக்குட்பட்ட குழந்தைகளை அழைத்துச் செல்பவர்கள் பம்பையில் உள்ள காவல் துறை அலுவலகத்தை அணுகி ஆர்.எப்.ஐ.டி டேக் பெற்றுக் கொள்ள வேண்டும். இதை குழந்தைகளின் கழுத்தில் மாட்டி தொங்கவிட வேண்டும். இதன்மூலம், போலீஸார், கட்டுப்பாட்டு அறையிலிருந்தபடி சபரிமலைக்கு சென்று பம்பைக்கு திரும்பி வரும்வரை அவர்கள் எங்கு இருக்கிறார்கள் என்பதை சுலபமாக கண்டுபிடிக்க முடியும். இதனால் குழந்தைகள் காணாமல் போனால் அவர்களை சுலபமாக கண்டுபிடித்து பெற்றோரிடம் ஒப்படைக்க முடியும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து