முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வான்வழி தாக்குதலில் பலி எண்ணிக்கை உயர்வு பொதுமக்கள் படுகொலையை நிறுத்தும்படி சிரியா அரசிடம் ஜெர்மன் அதிபர் வலியுறுத்தல்

வெள்ளிக்கிழமை, 23 பெப்ரவரி 2018      உலகம்
Image Unavailable

முனிஸ்: சிரியாவில் கிளர்ச்சியாளர்கள் பகுதியில் அரசுப் படைகள் தொடர்ந்து நடத்தி வரும் தாக்குதலில் வியாழக்கிழமை மேலும் 13 பேர் உயிரிழந்த நிலையில், 'பொதுமக்கள் படுகொலை'யை முடிவுக்குக் கொண்டு வரும்படி ஜெர்மனி அதிபர் ஏஞ்சலா மெர்கெல் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து அவர் வியாழக்கிழமை கூறியதாவது:
குழந்தைகள் உள்ளிட்ட பொதுமக்களைக் கொல்வது, மருத்துவமனகளைத் தாக்கி அழிப்பது என சிரியா படைகள் மேற்கொள்ளும் நடவடிக்கைகள் அனைத்தும் பொதுமக்கள் படுகொலைக்கு ஒப்பானதாகும்.

அத்தகைய படுகொலை கடும் கண்டனத்துக்குரியது; உடனடியாக நிறுத்தப்பட வேண்டியது என்றார் அவர்.
சிரியா தலைநகர் டமாஸ்கஸின் புறநகர் பகுதியான கிழக்கு கெளட்டா பகுதி, கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் இருந்து வருகிறது.

ரஷிய வான்வழித் தாக்குதல்களின் உதவியுடன் சிரியாவில் இஸ்லாமிய தேச (ஐ.எஸ்.) பயங்கரவாதிகள், அல்காய்தா தொடர்பு பயங்கரவாதிகள் வசமுள்ள பகுதிகளில் தாக்குதல் நிகழ்த்தி அந்தப் பகுதிகளை மீட்டு வரும் அதிபர் அல்-அஸாத் தலைமையிலான ராணுவமும், அரசுப் படையினரும், டமாஸ்கஸ் நகரில் கிளர்ச்சியாளர்கள் வசமிருக்கும் கணிசமான பகுதியான கிழக்கு கெளட்டா பகுதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் விமானத் தாக்குதல் நிகழ்த்தி வருகின்றன. மேலும், ஹெலிகாப்டர்கள் மூலம் பேரல் குண்டுத் தாக்குதல்களும், ஏவுகணை மற்றும் எறிகணைத் தாக்குல்களும் தீவிரமாக நிகழ்த்தப்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது.

இந்தத் தாக்குதல்களில் வியாழக்கிழமை மட்டும் 13 பேர் உயிரிழந்ததாகவும், இதன் மூலம் கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் நிகழ்த்தப்பட்டு வரும் தாக்குதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 335-ஆக உயர்ந்திருப்பதாகவும் சிரியா மனித உரிமைகள் கண்காணிப்பு அமைப்பு தெரிவித்தது.

சிரியா அமைதி ஒப்பந்தத்தின் கீழ் பயங்கரவாதிகள் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகள் தவிர, கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டில் உள்ள பகுதியில் போர் நிறுத்தம் செய்வதாக ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளது.

எனினும், இந்த ஒப்பந்தத்தில் இடம் பெறாத அல்-காய்தாவுடன் தொடர்புடைய ஒரு பயங்கரவாத அமைப்பும் இந்தப் பகுதியில் ஒரு சிறு பிரிவில் இயங்கி வருவதைக் காரணம் காட்டி ரஷியா மற்றும் சிரியா படையினர் இந்தப் பகுதியில் தாக்குதல் நிகழ்த்துவதாகக் கூறப்படுகிறது.

4 லட்சம் பேர் வசித்து வரும் கிழக்கு கெளட்டா பகுதியில் கடந்த 2013-ஆம் ஆண்டு முதல் அரசுப் படைகள் முற்றுகையிட்டுள்ளதால் அந்தப் பகுதி மக்களின் நிலை குறித்து கவலை தெரிவிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில், தற்போது அங்கு ரஷியாவும், சிரியா படையினரும் நிகழ்த்தி வரும் கடுமையான தாக்குதலுக்கு ஏற்கெனவே அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து