முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அயோத்தி நிலத்தை பங்கிட்டு கொள்ள மத்திய அமைச்சர் புதிய யோசனை

வெள்ளிக்கிழமை, 2 மார்ச் 2018      இந்தியா
Image Unavailable

புது டெல்லி, அயோத்தி விவகாரத்தில் பிரச்சினைக்குரிய நிலத்தை பங்கிட்டுக்கொள்வது குறித்து மத்திய சமூகநீதித் துறை அமைச்சர் ராமதாஸ் அதாவாலே புதிய யோசனை தெரிவித்துள்ளார்.

அயோத்தியில் பாபர் மசூதி இடிக்கப்பட்ட இடத்தின் நிலம் யாருக்கு சொந்தம் என்ற வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இந்த விவகாரத்தில் வாழும்கலை அமைப்பின் நிறுவனரான ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர் சமரசப் பேச்சுவார்த்தைக்கு முயன்று வருகிறார். இவரைத் தொடர்ந்து மத்திய இணை அமைச்சர் ராமதாஸ் அதாவாலேவும் சமரச தீர்வு குறித்து பேசியுள்ளார்.

அயோத்தியில் 65 ஏக்கரில் இந்துக்களுக்கு 40 முதல் 45 ஏக்கர் வரை கோயில் கட்ட அளிக்கப்பட வேண்டும். மீதம் உள்ள நிலத்தில் முஸ்லிம்கள் மசூதி கட்டிக்கொள்ளலாம். விருப்பம் இல்லை எனில் முஸ்லிம்களுக்காக மருத்துவமனை அல்லது பல்கலைக்கழகம் அமைக்கலாம். இந்து - முஸ்லிம் தரப்பினர் ஒன்றாக அமர்ந்து அதன் மீது ஒரு நல்ல முடிவு எடுக்க வேண்டும். - மத்திய அமைச்சர் ராமதாஸ் அதாவாலே

இதுகுறித்து லக்னோவில் அதாவாலே கூறும்போது,

65 ஏக்கர் நிலத்தில் இந்துக்களுக்கு 40 முதல் 45 ஏக்கர் வரை கோயில் கட்ட அளிக்கப்பட வேண்டும். மீதம் உள்ள நிலத்தில் முஸ்லிம்கள் மசூதி கட்டிக்கொள்ளலாம். விருப்பம் இல்லை எனில் முஸ்லிம்களுக்காக மருத்துவமனை அல்லது பல்கலைக்கழகம் அமைக்கலாம். சமூகத்திற்கு பயன்தரும் வகையில் இந்து - முஸ்லிம் தரப்பினர் ஒன்றாக அமர்ந்து அதன் மீது ஒரு நல்ல முடிவு எடுக்க வேண்டும் என்றார்.
இந்து - முஸ்லிம் இரு தரப்பினரும் அயோத்தி விவகாரத்தில் அமைதியை விரும்புவதால் தாம் இந்த யோசனையை கூறியதாக தெரிவித்த அதாவாலே, இது குறித்து உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத்தையும் சந்திக்க இருப்பதாக கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து