முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கர்நாடக அமைச்சர் வீடு உட்பட 11 இடங்களில் வருமான வரி சோதனை: சித்தராமையா கண்டனம்

புதன்கிழமை, 25 ஏப்ரல் 2018      இந்தியா
Image Unavailable

பெங்களூரு, கர்நாடகாவில் சட்டசபை தேர்தல் நெருங்கும் வேளையில் அம்மாநில‌ பொதுப் பணித்துறை அமைச்சர் மகாதேவப்பாவின் வீடு உட்பட 11 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் நேற்று சோதனை நடத்தினர்.

கர்நாடக மாநிலத்தில் வருகிற மே 12-ம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது. தேர்தலுக்கு இன்னும் 18 நாட்களே உள்ள நிலையில் மைசூருவில் உள்ள‌ கர்நாடக பொதுப்பணித்துறை அமைச்சர் மகாதேவப்பாவின் வீடு மற்றும் அலுவலகத்தில் நேற்று காலை வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். 30-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் அவரது வீடு, அலுவலகம் உள்ளிட்ட 4 இட‌ங்களில் தீவிர சோதனை மேற்கொண்டனர்.

இதே போல பெங்களூரு மற்றும் மைசூருவில் உள்ள 10 ஒப்பந்ததாரர்களின் வீடு மற்றும் அலுவலகங்களில் சோதனை நடத்தினர். இதில் கணக்கில் வராத ரூ.55 லட்சம் ரொக்கப் பணமும், ரூ.16 கோடி மதிப்பிலான ஆவணங்களும் சிக்கியதாகத் தெரிகிறது. ஒரே நாளில் 11 பேரின் வீடு மற்றும் அலுவலகங்களில் வருமான வரி சோதனை நடத்தப்பட்டுள்ளதால் அம்மாநில அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இது தொடர்பாக முதல்வர் சித்தராமையா கூறுகையில்,

மோடி தலைமையிலான மத்திய அரசு வருமான வரித்துறையை தவறாகப் பயன்படுத்துகிறது. தேர்தல் நெருங்கும் நிலையில் காங்கிரசாரின் வீடுகளை குறிவைத்து வருமான வரி சோதனை நடத்தப்படுகிறது. ஏன் பா.ஜ.க தலைவர்களின் வீடுகளில் சோதனை நடத்தப்படுவதில்லை. இது காங்கிரசை ஒடுக்க திட்டமிடப்பட்ட‌ சதி. வரித்துறை மூல‌ம் கர்நாடகாவில் காங்கிரஸ் வெற்றியைத் தடுக்க பா.ஜ.க‌. முயற்சிப்பது அம்பலமாகியுள்ளது. இந்த மிரட்டலுக்கு நாங்கள் அஞ்சமாட்டோம் என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து