முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்தியா-சீனா இடையே நாளை பேச்சுவார்த்தை

ஞாயிற்றுக்கிழமை, 15 ஜனவரி 2012      உலகம்
Image Unavailable

 

புதுடெல்லி,ஜன.15 - இந்தியா-சீனா இடையே  நாளை புதுடெல்லியில் பேச்சுவார்த்தை நாளை முதல் 2 நாட்கள் நடைபெற உள்ளது. பேச்சுவார்த்தை 2 நாட்களுக்கு நடக்கிறது. இது 15-வது சுற்றுப்பேச்சுவார்த்தையாகும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியா-சீனா இடையே பல்வேறு பிரச்சினைகள் குறித்து பேச்சுவார்த்தை கடந்த நவம்பர் மாதம் நடைபெறவிருந்தது. புத்தமதத் தலைவரும் திபெத் நாட்டின் உரிமைக்காக போராடி வருபவருமான தலாய்லாமா டெல்லியில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். இதற்கு சீனா எதிர்ப்பு தெரிவித்தது. சீனாவின் இந்த எதிர்ப்பை இந்தியா நிராகரித்துவிட்டது. இந்தியா ஒரு ஜனநாயக நாடாகும். இங்கு யாரும் பேச்சு சுதந்திரம் பறிக்கப்படமாட்டாது என்று இந்திய தெரிவித்துவிட்டது. இதனையொட்டி கடந்த நவம்பர் மாதம் இருநாடுகளுக்கிடையே நடைபெறவிருந்த பேச்சுவார்த்தை ஒத்திவைக்கப்பட்டது. இதற்கிடையில் இருநாடுகளிடையே பேச்சுவார்த்தை நாளை நடைபெறுகிறது என்று மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் நேற்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய பிரதிநிதிகளுக்கு தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கர மேனன் தலைமை தாங்குகிறார். சீனா பிரதிநிதிகளுக்கு அந்த நாட்டு தூதர் தாய் பிங்குவா தலைமை தாங்குகிறார். இந்த பேச்சுவார்த்தையின்போது இருநாடுகளிடையே உள்ள எல்லைப்பிரச்சினை மற்றும் இருநாடுகளுக்கும் நன்மைவிளைவுவிக்கும் வகையில் உள்ள பிரச்சினைகள், சர்வதேச பிரச்சினைகள் குறித்து விவாதிக்கப்படும் என்று அந்த செய்திகுறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்