முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காவிரி மேலாண்மை ஆணையத்திற்கு 12-ம் தேதிக்குள் பெயர்களை பரிந்துரைக்க வேண்டும் கர்நாடக அரசுக்கு மத்திய அரசு 'கெடு'

சனிக்கிழமை, 9 ஜூன் 2018      இந்தியா
Image Unavailable

புது டெல்லி: வரும் 12-ம் தேதிக்குள் மத்திய நீர்வளத்துறையிடம் காவிரி மேலாண்மை ஆணைய உறுப்பினர்  பட்டியலை சமர்ப்பிக்க மத்திய அரசு, கர்நாடகாவுக்கு உத்தரவிட்டுள்ளது.

காவிரி மேலாண்மை ஆணையத்திற்கு தமிழகம் உட்பட 4 மாநிலங்களிலும் உறுப்பினர்களை நியமிப்பது தொடர்பான பெயர் பட்டியலை அனுப்பி வைக்கும்படி மத்திய அரசு கடிதம் அனுப்பியிருந்தது. இதன்படி, காவிரி மேலாண்மை ஆணையத்துக்கு தலைவர் ஒருவரும், 2 முழுநேர உறுப்பினர்களும், 6 பகுதிநேர உறுப்பினர்களும் நியமிக்கப்பட உள்ளனர்.

இதில் தலைவரையும், 2 முழுநேர உறுப்பினர்கள் மற்றும் 2 பகுதிநேர உறுப்பினர்களையும் மத்திய அரசு நியமிக்கும். மீதம் உள்ள 4 பகுதி நேர உறுப்பினர்களை தமிழ்நாடு, கர்நாடகம், கேரளா மற்றும் புதுச்சேரி ஆகிய மாநிலங்கள் தலா ஒருவர் வீதம் பரிந்துரைக்க வேண்டும்.

இதன்படி, தமிழகம் சார்பில் எஸ்.கே.பிரபாகர், செந்தில்குமார் ஆகிய 2 பிரதிநிதிகரளையும் நியமிக்க தமிழக அரசு பரிந்துரை செய்திருந்தது. இந்நிலையில் கர்நாடகா சார்பில் எந்த பிரதிநிதிகளும் இதுவரை நியமிக்கப்படவில்லை. ஏற்கனவே தமிழகம், கேரளா, புதுச்சேரி மாநிலங்கள் உறுப்பினர் பட்டியலை சமர்ப்பித்துள்ளன.

கர்நாடகா காலம் தாழ்த்துவதால் வரும் 12-ம் தேதிக்குள் மத்திய நீர்வளத்துறையிடம் காவிரி மேலாண்மை ஆணைய உறுப்பினர்களின் பட்டியலை சமர்ப்பிக்க மத்திய அரசு, கர்நாடகாவுக்கு உத்தரவிட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து