எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மதுரை,ஜன.- 18 - உலகப் புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் 500 -க்கும் மேற்பட்ட காளைகள் சீறிப் பாய்ந்தன. அடக்க முயன்ற வீரர்களை தூக்கி வீசி பந்தாடியது. தமிழர்களின் வீரவிளையாட்டுகளில் ஜல்லிக்கட்டு புகழ்பெற்றது. ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் பண்டிகையையொட்டி இந்த ஜல்லிக்கட்டு நடத்தப்படுகிறது. இந்த ஆண்டு தை முதல் தினத்தன்று கடந்த 15- ம்தேதி அவனியாபுரத்திலும் 16 -ம் தேதி பாலமேட்டிலும் ஜல்லிக்கட்டுகள் நடத்தப்பட்டன. உலகப் புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு நேற்று காலை தொடங்கியது. உச்சநீதிமன்றத்தின் வழிகாட்டுதல்படியும், மாவட்ட நிர்வாகம் மற்றும் விலங்குகள் நல வாரியத்தின் நேரடி கண்காணிப்பிலும் அலங்காநல்லூர் கோட்டை முனிசாமி திடல் முன்பு ஜல்லிக்கட்டு தொடங்கியது. மதுரை, தஞ்சாவூர், திருச்சி, புதுக்கோட்டை, தேனி உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து 559 காளைகள் ஜல்லிக்கட்டில் கலந்து கொண்டன. அதுபோல மாடுகளை பிடிக்க 500 -க்கும் மேற்பட்ட இளைஞர்களும் கலந்து கொண்டனர். அனைத்து காளைகளும் கால்நடை டாக்டர்களின் தீவிர பரிசோதனைக்கு பிறகு அனுமதிக்கப்பட்டன. அதுபோல மாடுபிடி வீரர்களுக்கும் டாக்டர்கள் உடல் பரிசோதனை நடத்திய பின்னர் அனுமதிக்கப்பட்டனர். முதலில் சாமி மாடு அவிழ்த்து விடப்பட்டது. அதனை வீரர்கள் யாரும் பிடிக்கவில்லை. அதன் பின்னர் முரட்டுக்காளைகள் சீவிய கொம்புகளுடனும் மணிமாலையுடனும் வாடிவாசல் வழியாக ஒன்றன்பின் ஒன்றாக அவிழ்த்து விடப்பட்டன.
மாடுபிடி வீரர்கள் பாய்ந்து சென்று காளைகளை அடக்க முயன்றனர். சில காளைகளின் உயர்ந்த திமில்களை பிடித்து வீர இளைஞர்கள் அடக்கினார்கள். அவர்களுக்கு உடனடியாக பரிசுகள் வழங்கப்பட்டன. சில காளைகள் பிடிக்க வந்த இளைஞர்களை தூக்கி பந்தாடிச் சொன்றன. வாடிவாசல் முன்பு மாடுகளுக்கும், மாடுபிடி வீரர்களுக்கும் காயம் ஏதும் ஏற்படாமல் இருக்க தென்னைநார்கள் பரப்பப்பட்டு இருந்தது. சுமார் 600 மீட்டர் நீளத்திற்கு 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது ஒரு அடுக்கு இரும்பு கம்பி தடுப்பு வேலி அமைக்கப்பட்டு இருந்தது.
ஜல்லிக்கட்டு விளையாட்டை காண பார்வையாளர்கள் அமர கேலரிகள் அமைக்கப்பட்டு இருந்தன. இந்த ஆண்டு பார்வையாளர்களிடம் இருந்து கட்டணம் வசூலிக்கப்படவில்லை. இலவசமாக கேலரியில் இருக்க அனுமதிக்கப்பட்டனர். இதனை தொடர்ந்து பார்வையாளர்கள் அதிகாலை முதலே கேலரியில் இருக்க போட்டி போட்டு இடம் பிடித்தனர். ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் ஜல்லிக்கட்டு விளையாட்டை கண்டு ரசித்தனர்.
சீறிவந்த காளைகளை பிடித்த மூவேந்தன், ரஞ்சித் உள்பட 10 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் அலங்காநல்லூர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சிறந்த மாடுபிடி வீரர்களுக்கும், அடக்க முடியாத காளைகளின் உரிமையாளர்களுக்கும் தங்ககாசுகள், கட்டில் பீரோ, செல்போன், சுவர் கடிகாரம், அண்டா, சைக்கிள், அயன் பாக்ஸ், குத்து விளக்குகள், புத்தாடைகள் பரிசாக வழங்கப்பட்டன.
போலீஸ் சூப்பிரண்டு அஸ்ரா கார்க் தலைமையில் 1000-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். ஜல்லிக்கட்டையொட்டி டாக்டர்கள் குழுவினருடன் ஆம்புலன்சுகள், தீயணைப்பு வாகனங்கள் தயார் நிலையில் நிறுத்தப்பட்டு இருந்தன.
இந்த விழாவில் கலெக்டர் சகாயம், எம்.எல்.ஏ.க்கள் கருப்பையா, ஆர்.சாமி, முத்துராமலிங்கம், தமிழரசன், ராமசாமி, வீரவிளையாட்டுக்குழு தலைவர் ராஜசேகரன், அலங்காநல்லூர் யூனியன் தலைவர் கீதாரவிச்சந்திரன், துணைத்தலைவர் முத்துமாரிபாண்டியன், பேரூராட்சித் தலைவர் கீதா பாலாஜி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்2 months 1 week ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்2 months 2 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.3 months 4 days ago |
-
ரேஷன் கார்டுக்கு 2 ஆயிரம் ரூபாய் நிவாரண நிதி: முதல்வர் ஸ்டாலின்
03 Dec 2024சென்னை, ஃபெஞ்சல் புயல் பாதித்த விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் ரேஷன் கார்டுக்கு ரூ.2 ஆயிரம் நிவாரண நிதி வழங்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின
-
காய்ச்சல்: மருத்துவமனையில் ஏக்நாத் ஷிண்டே அனுமதி
03 Dec 2024 -
விழுப்புரத்தில் அமைச்சர் பொன்முடி : மீது சேறு வீசப்பட்டதாக புகார்
03 Dec 2024விழுப்புரம்: விழுப்புரத்தில் அமைச்சர் பொன்முடி மீது சேறு வீசப்பட்டதாக கூறப்படும் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
-
25 மணி நேர கவுண்ட்டவுன் தொடக்கம்: பி.எஸ்.எல்.வி. சி-59 ராக்கெட் இன்று விண்ணில் பாய்கிறது
03 Dec 2024சென்னை, பி.எஸ்.எல்.வி. சி-59 ராக்கெட்டுக்கான 25 மணி நேர கவுண்ட்டவுன் தொடங்கிய நிலையில் ஐரோப்பிய விண்வெளி நிறுவனத்தின் செயற்கைகோளுடன் இன்று விண்ணில் பாய்கிறது.
-
நேரில் சென்று நிவாரணம் வழங்காதது ஏன்? த.வெ.க. தலைவர் விஜய் விளக்கம்
03 Dec 2024சென்னை, நேரில் சென்றால் நெரிசல் ஏற்படும் என்று பாதிக்கப்பட்ட இடங்களுக்கு சென்று நிவாரணம் வழங்காதது குறித்து த.வெ.க. தலைவரும், நடிகருமான விஜய் விளக்கமளித்துள்ளார்.
-
ரஷ்ய அதிபர் புடின் இந்தியா வருகிறார்
03 Dec 2024ப
-
4 மாவட்ட வெள்ள பாதிப்புகள் குறித்து அமைச்சர்கள், அதிகாரிகளுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை
03 Dec 2024சென்னை, வெள்ள பாதிப்புகள் குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் அமைச்சர்கள், அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
-
ஆஸி. வாரியத்திற்கு புதிய தலைவர்
03 Dec 2024ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்தின் தற்போதைய தலைமை நிர்வாக அதிகாரியான நிக் ஹாக்லியின் பதவிக்காலம் 2025 மார்ச் மாதத்துடன் நிறைவடைய உள்ளது.
-
ஃபெஞ்சல் புயல் பாதிப்பு: நியாயமான இழப்பீடு வழங்க ஓ.பன்னீர் செல்வம் கோரிக்கை
03 Dec 2024சென்னை, ஃபெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நியாயமான இழப்பீட்டினை வழங்க வேண்டும் என்று ஓ.பன்னீர் செல்வம் கோரிக்கை விடுத்துள்ளார்.
-
தமிழகத்திற்கு மத்திய குழுவை விரைவில் அனுப்ப வேண்டும்: பிரதமர் மோடியிடம் முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்
03 Dec 2024புதுடெல்லி, புயல் சேதங்கள் குறித்த விரிவான மதிப்பீட்டை மேற்கொள்ள தமிழகத்திற்கு மத்திய குழுவை விரைவில் அனுப்பிட வேண்டும் என்று பிரதமரிடம் தொலைபேசியில் பேசியபோது வல
-
புயல் நிவாரண நிதியை உடனே வழங்க பார்லி.யில் வைகோ வலியுறுத்தல்
03 Dec 2024புதுடெல்லி : தமிழகத்திற்கு புயல் நிவாரண நிதியை உடனே வழங்க வேண்டும் என்று பாராளுமன்றத்தில் வைகோ வலியுறுத்தியுள்ளார்.