முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கேன்சர் உள்பட பல்வேறு நோய்களை கட்டுப்படுத்தும் சுரிநாம்செர்ரி விளைச்சல்

வியாழக்கிழமை, 14 ஜூன் 2018      திண்டுக்கல்
Image Unavailable

ஒட்டன்சத்திரம்.-  திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் வட்டம், பால்கடை பிரிவில் கேன்சர் உள்பட பல்வேறு நோய்களை கட்டுப்படுத்தும் சுரிநாம்செர்ரி விளைச்சல் தொடங்கியுள்ளது. பால்கடை பிரிவில் விவசாயி ஒருவர் மேட்டுப்பாhளையம் நாற்றுப்பண்னை வாங்கி நடவு செய்துள்ளார். இதன் தாவறவியல் பெயர் யூஜினியா யுனிப்ளோரா என்பதாகும். பல்வேறு நாடுகளில் பிடாங்கா, சுரிநாம்செர்ரி, பிரேசிலியன்செர்ரி போன்ற பல்வேறு பொதுப் பெயர்களில் அழைக்கப்படுகிறது சுரிநாம்செர்ரியின் தாயாகம் தென்னஅமெரிக்காவின் கிழக்கு கடற்கரை பகுதியாகும். அங்கிருந்து, பிரேசில்,  அர்ஜட்டினா, உருகுவே ஆகிய நாடுகளிலும் இவை வளர்க்கப்படுகிறது. சுரிநாம்செர்ரி பொதுவாக பூச்சித் தாக்குதலை தாங்கும் தன்மையுடையது. எளிதாக வளரக்கூடியது. அதிகளவில் எதிர்ப்புசக்தி கொண்ட பழங்களை கொடுக்ககூடியதாகும். இவை மேற்குஇந்தியதீவுகளில் ஹைதி என்ற இடத்தில் அதிகளவில் வளர்க்கப்படுகிறது. சுரிநாம்செர்ரியை பூந்தோட்டத்தில் வளர்க்கப் பயன்படுத்துவார்கள். பெருமுடா போன்ற நாடுகளில் அழங்காரத்திற்காகவும் பயன்படுத்தப்படுகிறது. சுரிநாம்செரி சிறிய மரமாக வளரக்கூடிய ஒரு வகை பெரியபுதர் தாவரம். இவை 8 மீட்டர் உயரம் வரை வளரக்கூடியது. இதன் பழங்கள் ஆரம்பத்தில் பச்சை நிறத்திலும். பின்பு ஆரஞ்சு உள்பட பல்வேறு நிறங்களில் பலங்கள் காணப்படும் இதன் பழங்கள் இனிப்பு மற்றும் புளிப்பு சுவைகளில் காணப்படும். இப்பழங்களிலிருந்து ஜாம் மற்றும் ஜெல்லி தயாரிக்கப்படுகிறது. இப்பழங்களில் விட்டமின் சி, விட்டமின் ஏ, விட்டமின் தயாமின் பி1, ரிப்போபிளவின் பி2, நியாசின் பி3, கால்சியம், இரும்பு, மெக்னீசியம், பொட்டாசியம், சோடியம் ஆகிய சத்துக்கள் உள்ளன.  இப்பழங்கள் மருத்துவதுறையில் அதிகளவு பயன்படுத்தப்பட்டு வருகிறது. இப்பழங்களை சாப்பிடுவதன் மூலம் இரத்தக்கொதிப்பு, கேன்சர், சர்க்கரை நோய், வலி நிவாரணி வைரஸ் எதிர்ப்பு, பூஞ்சான் தடுப்பு ஆகியவற்றில் சிறந்த நிவாரணியாகவும்,  பயன்படுத்தப்படுகிறது. இப்பழங்களை தொடர்ந்து சாப்பிடுவதன் மூலம் இந்நோய்கள் கட்டுப்படுத்தப்படுவதாக சித்த மருத்துவர்கள் கூறுகின்றனர். இன்றும் தென்அமெரிக்காவில் அதிக உடல்வலி, வயிற்று வலிக்கு செரிநாம்செர்ரி மருந்தாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து