முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஐ.மு. கூட்டணியில் இருந்து விலக சரத்பவார் முடிவு

செவ்வாய்க்கிழமை, 7 பெப்ரவரி 2012      இந்தியா
Image Unavailable

 

புதுடெல்லி, பிப்.7 - வருகிற 2014 ம் ஆண்டு நடைபெற இருக்கும் பாராளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் இருந்து விலக திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் முடிவு செய்துள்ளன. தற்போது காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் திரிணாமுல் காங்கிரஸ், தி.மு.க., தேசியவாத காங்கிரஸ் ஆகிய கட்சிகள் முக்கிய அங்கம் வகிக்கின்றன. இந்த கட்சிகளின் உதவியால்தான் 205 உறுப்பினர்களை மட்டுமே கொண்ட காங்கிரஸ் ஆட்சி நீடித்து வருகிறது. இந்நிலையில் கடந்த சில மாதங்களாகவே இந்த கட்சிகளுடன் காங்கிரஸ் கட்சி சுமூகமான உறவை கொண்டிருக்கவில்லை. பல்வேறு பிரச்சனைகள் காரணமாக இந்த கூட்டணி கட்சிகள் காங்கிரஸ் கட்சியுடன் மோதல் போக்கை கடைப்பிடித்து வருகின்றன. குறிப்பாக மம்தா பானர்ஜி காங்கிரஸ் தலைவர்களுடன் நேரடியாகவே மோதல் போக்கை கடைப்பிடித்து வருகிறார். தமது மாநிலமான மேற்கு வங்கம் மத்திய அரசால் புறக்கணிக்கப்படுகிறது என்றும் சிறப்பு நிதி எதுவும் மேற்கு வங்கத்திற்கு வழங்கப்படவில்லை என்றும் அவர் கடுமையாக குற்றம் சாட்டி வருகிறார். இத்தகைய மோதல் போக்கையே சரத்பவாரும் கடைப்பிடித்து வருகிறார். தி.மு.க.வும் ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் காங்கிரஸின் அணுகுமுறையால் அப்செட் ஆகியுள்ளது. இதனால் 2014 இல் இரு கட்சிகளுக்கும் இடையே உறவு நீடிக்குமா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. 

தேசியவாத காங்கிரஸ் ஏற்கனவே காங்கிரசிடம் இருந்து விலகிச் செல்ல துவங்கியுள்ளது. 2014 இல் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் இடையே கூட்டணி ஏற்படுவது சந்தேகம்தான் என்று இரு கட்சிகளின் தலைவர்களும் வெளிப்படையாக பேசிவருகிறார்கள். முக்கிய கூட்டணி கட்சிகளின் விலகல் காங்கிரசுக்கு அதிக பலவீனத்தை ஏற்படுத்தும் என்று அரசியல் நோக்கர்கள் கணித்துள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்