அமெரிக்காவின் மேரிலேண்ட் மாநிலத்தில் உள்ள பால்டிமோர் நகரை சேர்ந்தவர் கிறிஸ்டின் வாக்னர் என்ற பெண் பீட்சாவின் மேல் உள்ள விருப்பத்தால், அதை திருமணம் செய்ய முடிவு செய்துள்ளார். அதன்படி திருமண கோலத்தில் ஆடையை உடுத்திக்கொண்டு, பீட்சாவுக்கும் டை கட்டி மாப்பிள்ளை போன்று அலங்கரித்துள்ளார். இதன் பின்னர் பீட்சாவுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை பேஸ்புக்கில் பதிவேற்றி, எனக்கு திருமணம் நடந்துவிட்டது, ஆண்களே என்னை மன்னித்துவிடுங்கள் என கூறியுள்ளார். இதனைப்பார்த்த புகைப்படக் கலைஞர் ஒருவர் போட்டோ ஷீட் ஒன்றினையும் நடத்தியுள்ளார். இந்த புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலாக பரவி வருகிறது.இது போல் ரஷ்யாவைச் சேர்ந்த ஒரு பெண் கடந்த 2015 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.
சில சுவாரிஸ்யமான தகவல்கள்
சுற்றுச்சூழலுக்கு மிகவும் உயிர் நாடி மரங்களும் தாவரங்களும். அவற்றை மனிதன் நாள்தோறும் அழித்து வருகிறான். இதனால் கொடிய நோய்களால் அழிந்தும் வருகிறான். உலகம் முழுவதும் சுமார் 3.04 டிரில்லியன் மரங்கள் இருப்பதாக கணிக்கப்பட்டுள்ளது. இருந்த போதிலும் அவற்றில் சுமார் 27 ஆயிரம் மரங்கள் வெட்டி சாய்க்கப்படுகின்றன. அதுவும் எதற்காக, கழிவறை காகிதம் தயாரிப்பதற்காக. அவ்வாறு பார்த்தால் ஆண்டுக்கு 9.8 மில்லியன் மரங்கள் வெட்டப்படுகின்றன. தோராயமாக ஒரு மறுசுழற்சி கொண்ட காகிதத்தில் அச்சடிக்கப்படும் நியூ யார்க் டைம்ஸ் மூலமாக 75 ஆயிரம் மரங்களை காப்பாற்ற முடியும் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.
நம்மில் ஒரு சிலர் கை மற்றும் கால்களில் 6 விரல்களுடன் பிறப்பது வழக்கம். ஒரு சில குழந்தைகள் இரட்டையர்களாக ஒட்டியும் ஒட்டாமலும் பிறப்பதும் உண்டு. ஆனால் மனித தோன்றிய பிறகு பரிணாம வளர்ச்சியில் மாற்றம் ஏற்பட்டு வாலில்லா விலங்கினமாகவே பிறக்கிறோம். ஆனால் தற்போது மருத்துவ அதிசயமாக பிரேசில் நாட்டில் உள்ள தம்பதிக்கு குழந்தை ஒன்று வாலுடன் பிறந்துள்ளது. சுமார் 12 செமீ நீளம் கொண்ட அந்த வாலின் இறுதியில் சிறிய அளவிலான தசைப் பந்து போன்ற அமைப்பும் இருந்துள்ளது. குழந்தையின்பிரசவம் இயல்பாக இருந்த போதிலும் இந்த வால் உருவானது என்பது மருத்துவ துறைக்கு மிகவும் வியப்பான ஒன்றாகவே பார்க்கப்படுகிறது. முழுமையான பரிசோதனைக்கு பிறகு அந்த வால் உடலின் நரம்பு மண்டலம் மற்றும் இதர அவயங்களுடன் தொடர்பு கொண்டிருக்கவில்லை என்று உறுதி செய்யப்பட்ட பிறகு அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்டுள்ளது. இது குறித்து மருத்துவ விஞ்ஞான கட்டுரை ஒன்றும் Journal of Pediatric Surgery Case Reports இதழிலும் வெளியிடப்பட்டுள்ளது. இந்த சம்பவம் மருத்துவ உலகை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
இந்தோனேஷியா சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள சவுதி மன்னர் சல்மானுக்காக, சொகுசு கார் உட்பட இவருக்கு தேவையான 460 டன் சாதனங்கள் சவுதியில் இருந்து கொண்டு வரப்பட்டுள்ளன. இவர் விமானத்தில் இருந்து இறங்க, தங்கத்தால் ஆன நகரும் படிகட்டு பயன்படுத்தப்பட்டதுதான் ஆச்சரியத்தின் உச்சகட்டம்.
துபாயில் ‘டெடிபியர்’ பொம்மைக்கு சிகிச்சை அளிக்க தனி மருத்துவமனை தொடங்கப்பட்டுள்ளது. உடல் நலக் குறைவால் அவதிப்படும் குழந்தைகள் மற்றும் சிறுவர், சிறுமிகள் ஆஸ்பத்திரிக்கு வந்து டாக்டர்களிடம் சிகிச்சை மேற்கொள்ள அச்சப்படுகின்றனர். அவர்களின் பயத்தை போக்க பொம்மைகளுக்கு சிகிச்சை அளிக்கும் புதுமையான திட்டம் ஒன்றை துபாய் அரசு நடைமுறைபடுத்தியுள்ளது.
ஜப்பான் நாட்டை சார்ந்த 81 வது பாட்டி மசாக்கோ வகாமியா, வயது முதிர்ந்தவர்களுக்கான ஐபோன் செயலியை ஓன்றை வடிவமைத்துள்ளார். இந்த ஆப் முதியவர்கள் விளையாடும் மாதிரியாக உருவாக்கப்பட்டுள்ளது. ஹினாடன் என்ற பெயரிடப்பட்டுள்ள அந்த ஆப் ஜப்பான் நாட்டின் பாரம்பரிய பொம்மை திருவிழாவான ஹினமட்சுரி என்ற திருவிழாவை அடிப்படையாக கொண்டது. இதில் குறிப்பிட்ட ஆடையணிந்த பொம்மைகளை ஹினமட்சுரி திருவிழாவில் வைக்கப்படும் வரிசையில் நிரப்பினால் வெற்றியடைவீர்கள். இந்த ஆப்பை உருவாக்கிய இவர், ஓய்வு பெற்ற வங்கியாளர். மேலும் தனது 60வது வயதில் கணினி பயிற்சியை தொடங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்2 months 5 days ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்2 months 1 week ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.3 months 13 hours ago |
-
வங்கக்கடலில் புயல் உருவானது
29 Nov 2024சென்னை, வங்கக்கடலில் புயல் உருவானதாக தெரிவித்துள்ள சென்னை வானிலை ஆய்வு மையம், இன்று 7 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுத்துள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 29-11-2024.
29 Nov 2024 -
சென்னைக்கு தென்கிழக்கே 300 கி.மீ. தொலைவில் புயல்
29 Nov 2024சென்னை : தென்மேற்கு வங்கக்கடலில் உருவான ஃபென்ஜால் புயல் சென்னைக்கு தென்கிழக்கே 300 கிமீ தொலைவில் நிலைகொண்டுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
சவரன் ரூ.57 ஆயிரத்தை தாண்டியது தங்கம் விலை நகை பிரியர்கள் அதிர்ச்சி
29 Nov 2024சென்னை:
-
சென்னையில் புயலை எதிர்கொள்ள 28 ஆயிரம் பணியாளர்கள் தயார் : மேயர் பிரியா தகவல்
29 Nov 2024சென்னை : பென்ஜால் புயலை எதிர்கொள்ள சென்னை மாநகராட்சி தயார் நிலையில் உள்ளதாக பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் பிரியா தெரிவித்தார்.
-
அரபிக்கடலில் 500 கிலோ போதை பொருள் சிக்கியது
29 Nov 2024 -
வலைப்பயிற்சியில் தீவிரம்: ஆஸி.க்கு எதிரான 2-வது டெஸ்ட்டில் ஷுப்மன் கில் விளையாடுவாரா?
29 Nov 2024மும்பை : காயத்திலிருந்து குணமடைந்து வரும் ஷுப்மன் கில் வலைப் பயிற்சியில் ஈடுபட்டுள்ளார்.
-
கல்வித்துறை சார்ந்த வழக்குகளில் அரசுக்கு ரூ. 1,100 கோடி இழப்பு: சென்னை ஐகோர்ட் கண்டனம்
29 Nov 2024சென்னை, அரசு வழக்கறிஞர்களின் தவறான செயல்பாடுகளால் கல்வித்துறை சார்ந்த வழக்குகளில் ரூ.1,100 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக ஐகோர்ட்டு கண்டனம் தெரிவித்துள்ளது.
-
வாக்குச்சீட்டு முறையில் தேர்தல் நடத்த வேண்டும் : லல்லு பிரசாத் யாதவ் வலியுறுத்தல்
29 Nov 2024சென்னை : நாட்டில் தேர்தல்கள் வாக்குசீட்டு முறையில் நடத்தப்பட வேண்டும் என்று ராஷ்ட்ரிய ஜனதா தளக் கட்சியின் தலைவர் லல்லு பிரசாத் யாதவ் கூறியுள்ளார்.
-
இந்தோனேசியாவில் நிலச்சரிவு: பலி எண்ணிக்கை 27 ஆக உயர்வு
29 Nov 2024ஜகார்த்தா, இந்தோனேசியாவின் சுமத்ரா தீவில் மழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி இதுவரை 27 பேர் உயிரிழந்துள்ளனர்.
-
மழைக்காலங்களில் மக்கள் கடைப்பிடிக்க வேண்டியவை: தமிழக மின்சாரத்துறை அறிவுறுத்தல்
29 Nov 2024சென்னை, மழைக் காலங்களில் மக்கள் கடைப்பிடிக்க வேண்டியவை குறித்து மின்சாரத் துறை அறிவுறுத்தல் வழங்கியுள்ளது.