முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

சில சுவாரிஸ்யமான தகவல்கள்

பூனை விரும்பிகளுக்கான சிறப்பு புத்தக மையம்

புத்தகப் பிரியர்களுக்கு என விதவிதமான புத்தகக் கடைகள், நூலகங்கள் உலகெங்கிலும் உள்ள நாடுகளில் உள்ளன. ஆனால் பூனை பிரியர்களுக்கான வித்தியாசமான புத்தக கடை எங்காவது உள்ளதா என்றால் ஆம் என்று தான் சொல்ல வேண்டும். அதன் பெயர் Mon Chat Pitre. பிரான்ஸ் நாட்டில் உள்ளAix-en-Provence என்ற மாகாணத்தில் தொடங்கப்பட்டுள்ள புதிய புத்தக கடைதான் பூனை பிரியர்களுக்கான வித்தியாசமான புக் ஸ்டோர் ஆகும். இங்கு விதவிதமான புத்தகங்கள் மட்டுமின்றி விதவிதமான பூனைகளுடன் கொஞ்சியபடி புத்தகங்களை பார்வையிடவும், படிக்கவும் வசதி செய்யப்பட்டுள்ளது. மேலும் கடை முழுவதும் பூனைகள் ஓடியாடி விளையாடுவதற்கு ஏற்ற வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த பத்திரிக்கையாளர் தம்பதிகளான Solène Chavanne மற்றும் Jean-Philippe Doux ஆகியோர்தான் இக்கடைக்கு உரிமையாளர்கள். அங்கு பூனைகளை கொஞ்சியபடி பார்வையாளர்கள் புத்தகங்களை பார்வையிடலாம் என்பது பூனை விரும்பிகளை உற்சாகம் கொள்ள செய்துள்ளது. எப்படி ஒரு வித்தியாசமான யோசனை பாருங்கள்..

பழமையான தொழில் பல் மருத்துவம்

உலகின் பழமையான தொழில்களில் பல் மருத்துவமும் ஒன்று என்பது தெரிய வந்துள்ளது. ஒரு ஆய்வின் போது கிடைத்த மண்டையோட்டில் சுமார் 9 ஆயிரம் முதல் 10 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே பல்லில் துளையிட்டது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதே போல இத்தாலியில் உள்ள போலோக்னா பல்கலை கழகம் மேற்கொண்ட மற்றொரு ஆய்வில் சுமார் 14 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே, அதாவது வரலாற்று காலத்துக்கு முன்பே ஒரு சொத்தை பல்லை கருவிகளால் அகற்றிய தடயம் கண்டறியப்பட்டுள்ளது.

மாறிய கோவில்

12-ம் நூற்றாண்டில் , 2-ம் சூரியவர்மனால் கட்டப்பட்ட அங்கோர் வாட்டை ஆரம்பத்தில் ஓர் விஷ்ணு தள வழிப்பாட்டு கோவிலாக இருந்தது. பின் 14 - 15-ம் நூற்றாண்டுகளில், புத்த மத துறவிகளால் கையகப்படுத்தப்பட்டு கூடுதலான புத்த சிலைகளும், கலைநய வேலைப்பாடுகளும் சேர்க்கப்பட்டு புத்த கோவிலாக மாற்றப்பட்டது.

பழக்க வழக்கம்

ஆரம்பத்தில் கை குலுக்கும் நோக்கம் என்ன வென்றால் கையில் எந்த ஆயுதமும் இல்லை மற்றும் சமாதானத்தின் சைகை என்று கூறப்படுகிறது.நவீன காலத்தில், கைகுலுக்குவது வாழ்த்துக்களில் இருந்து நன்றி தெரிவிக்கும் செயல் வரை வெளிப்படுத்தும் செயலாக இருக்கிறது. நியூஜெர்ஸி முன்னாள் மேயர், ஜோசப் லாசராவ், 1977 ல், ஒரே நாளில் 11,000 கை குலுக்கி கின்னஸ் சாதனை படைத்துள்ளார்.

கல்லீரல் பாதிப்பு

மாரடைப்பு, புற்றுநோய் போல கல்லீரல் பாதிப்பும் ஆயுட்காலத்தை குறைத்துவிடுமாம். உடலில் உள்ள நச்சுக்களையும், கழிவுகளையும் பிரித்தெடுத்து சிறுநீரகத்திற்கு அனுப்பும் முக்கிய பணியை கல்லீரல் மேற்கொள்கிறது. சிறுநீரகத்தை போல கல்லீரலும் 2 பாகங்களாக பிரிக்கப்பட்டு அதன் நடுவில் பித்தநீர் பை அமைந்திருக்கும். கல்லீரல் பாதிப்புக்குள்ளானால் செரிமான கோளாறு பிரச்சினைகள் ஏற்பட்டுவிடும். கல்லீரல் பாதிப்பை தடுக்க கீரை, பூண்டை உணவில் எடுத்து கொள்ள வேண்டும். தேன் கல்லீரலில் உருவாக்கும் பாக்டீரியாக்களை அழிக்க துணைபுரியும். தேங்காய் எண்ணெய் கல்லீரலில் ஏற்படும் பாதிப்புகளையும் கட்டுப்படுத்தும். கிரீன் டீ பருகி வருவதும் கல்லீரலின் சீரான இயக்கத்திற்கு துணை புரியும். தர்பூசணி, ஸ்ட்ராபெர்ரி பழங்களையும் சாப்பிட்டு வரலாம். அதிலிருக்கும் தாதுக்கள் கல்லீரலுக்கு நலம் சேர்க்கும்.

பண்டைய காலத்தில் முகம் பார்க்கும் கண்ணாடி எது தெரியுமா?

இன்றைக்கு பெரும்பாலான பொருள்கள் கண்ணாடியால் செய்யப்படுகின்றன. ஆனால் பண்டைய காலத்தில் முகம் பார்ப்பதற்கு கண்ணாடியாக விளங்கியது எது தெரியுமா.. ஒரு அடர் வண்ணம் கொண்ட பாத்திரத்தில் மிகவும் அசையாத வகையில் நிரப்பப்பட்ட நீரிலேயே அக்கால மக்கள் தங்கள் முகங்களை பார்க்க பயன்படுத்தி வந்தனர். இதுவே முதன் முதலில் கண்ணாடியாக பயன்பட்ட பொருளாகும். இன்றைக்கும் பழைய கோயில்களில் நாம் கண்ணா.டி கிணறு என்பதை கேள்விப்பட்டிருப்போம் அல்லவா.. அதேப் போலத்தான்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 4 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 4 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 5 months 4 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 4 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 7 months 4 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 7 months 4 weeks ago