முகப்பரு வருவதை விட வந்தபின் அது விட்டுச் செல்லும் தழும்புகள் முக அழகையே பாழ்படுத்தும். தழும்புகள் வேறு எளிதில் போகாது. முகப்பரு என்றில்லாமல் சருமத்தில் காயங்களால் உண்டாகும் தழும்பை போக்குவது சற்று கடினம். அவ்வாறு உருவாகும் தழும்புகள் மறைய, காய்ந்த அரச மர பழுப்பு இலைகளை சேகரித்து எரித்து கரியாக்கி தூள் செய்துகொள்ளுங்கள். இதனுடன் தேங்காய் எண்ணைய் கலந்து, இரவில் தழும்பு உள்ள இடங்களில் தடவி வந்தால் தழும்புகள் படிப்படியாக மறையும்.
சில சுவாரிஸ்யமான தகவல்கள்
இதயத்திற்கு வலுசேர்க்கும் மாதுளை எளிதில் ஜீரணமாகும் பழம். இதன் தோல், இலை, பூ, காய், வேர், விதை போன்ற அனைத்திலும் மருத்துவ குணங்கள் நிறைந்திருக்கின்றன. உடலில் ஏற்படும் சோர்வு நீங்கவும், உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்தவும், ஈரலின் செயல்பாட்டிற்கும் ஏற்றதாக இது இருக்கிறது. ஈரலில் வைட்டமின் ஏ-யை சேகரிக்கும் ஆற்றல் அதிகரிக்கும்.
உலக அதிசயங்களில் எகிப்து நாட்டில் உள்ள பிரமிடும் அதில் வைக்கப்பட்டுள்ள மம்மிகளும் மக்களை எப்போதும் வியப்பில் ஆழ்த்தி வருபவை. மம்மிக்களை ஆய்வு செய்யும்போது பல்வேறு சவால்களையும் எதிர்கொள்ள வேண்டியுள்ளது. குறிப்பாக 3500 ஆண்டுகளுக்கு முன்பே உடலை பதப்படுத்தும் தொழில்நுட்பத்தை எகிப்தியர்கள் எவ்வாறு கண்டடைந்தனர் என்பது விளங்காத மர்மமாகவே உள்ளது. இதனால் மம்மிக்களை ஆய்வு செய்யும் போது அவற்றை திறப்பதால் பாதுகாக்கப்பட்ட உடல்கள் தற்போது பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே மம்மிக்களை திறக்காமலேயே அவற்றை டிஜிட்டல் தொழில் நுட்ப முறையில் ஆய்வு செய்யும் பணிகளை விஞ்ஞானிகள் மேற்கொண்டு வருகின்றனர். இதையடுத்து பிரமிடிலிருந்து கடந்த 1881 ஆம் ஆண்டு கண்டெடுக்கப்பட்ட அமேன்ஹோடெப் என்ற மன்னரின் மம்மியை டிஜிட்டல் முறையில் ஆய்வு செய்யப்பட்டது. அதில் பல்வேறு அதிசய தகவல்கள் வெளியாகின. அவர் இறக்கும் போது அவருக்கு வயது 35. சுமார் 5 அடி உயரம் கொண்ட அந்த மன்னரின் பற்கள் மிகவும் ஆரோக்கியமாக இருந்துள்ளன. உடலை சுற்றியிருந்த துணிக்குள் மன்னருக்கு தங்கத்தாலான ஆடையும் அணிவிக்கப்பட்டிருந்தது. உடலில் காயங்கள் இல்லாததால் அவரது மரணம் எவ்வாறு நிகழ்ந்தது என்பது குறித்து தெரியவில்லை. இவர் கிமு 1525 முதல் 1504 வரை 21 ஆண்டுகள் ஆட்சி செய்துள்ளார். இதனால் இவர் மிகவும் இள வயதிலேயே முடி சூடி இருக்கலாம். இன்றைக்கு மருத்துவம் தொழில் மிகப் பெரிய அளவில் வளர்ந்துள்ள போதிலும் 3 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே உடலை பதப்படுத்தும் தொழில் நுட்பத்தை எகிப்தியர்கள் எவ்வாறு தெரிந்து வைத்துள்ளனர் என்பது புரியாத மர்மமாகவே உள்ளது.
மூட்டு வலியால் அவதிப்படும் முதியவர்களுக்கு மறுவாழ்வு அளிக்கும் வகையில், ரோபோ கால் ஒன்று ஜப்பானில் உருவாக்கப்பட்டுள்ளது. டொயட்டோ மோட்டார் நிறுவனம் உருவாக்கியுள்ள வெல்வாக்ஸ் என்ற இந்த ரோபோ, பக்கவாதம், மூட்டு வலியால் தவிக்கும் நோயாளிகள் எளிதில் நடப்பதற்கு ஏற்றார் போல் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த ரோபோ காலுடன், ஒரு டிரெட்மில், ஒரு கண்காணிக்கும் கருவியும் வழங்கப்படுகிறது. இந்த ரோபோ, வயதானவர்களுக்கு டிரெட்மில்லில் நடைப்பயிற்சி வழங்குகிறது. யாருடைய உதவியும் இல்லாமல், வயதானவர்கள் மற்றும் கால் பிரச்னையால் பாதிக்கப்பட்டவர்கள் தனியாக நடப்பதற்கு இந்த ரோபோ கால் உதவும். இந்த ரோபோ கால், முதற்கட்டமாக வாடகைக்கு விடப்படுகிறது. மாத வாடகைத் தொகை, 2 லட்சம் ரூபாயாம்.
நீண்ட நாட்களாக பல் ஈறு பிரச்சனை உள்வர்களுக்கு மாரடைப்பு அதிகமாக ஏற்படுகிறது எனவும், சாதாரன ஈறு பிரச்சனை உள்வர்களுக்கு இதயக்கோளாறுகள் ஏற்படும் ஆபாயம் உள்ளது என்றும், மருத்துவ நிபுணர்கள் கூறுகிறார்கள். எனவே, இப்பிரச்சனையில் இருந்து விடுபட தினமும் இருமுறை பல்துலக்க வேண்டுமாம்.
கனடாவை சேர்ந்த மெலிஸ்சா என்ற பெண்ணுக்கு ஏற்பட்ட திடீர் உடல் நலக்குறைவை அடுத்து அவரை பரிசோதித்த டாக்டர்கள் நோய் பாதித்த நுரையீரலை அகற்றி விட்டு தானமாக பெற்று மாற்று நுரையீரல் பொருத்த முடிவு செய்தனர். இதற்கிடையே உடல் உறுப்புகள் செயல் இழப்பதை தடுக்கவும், அவரின் உயிரை காப்பாற்றவும் 2 நுரையீரல்களும் அகற்றப்பட்டு, சிறிய செயற்கை நுரையீரல் பெனாய்ட்டின் இதயத்துடன் பொருத்தப்பட்டது. நுரையீரல்கள் இன்றி செயற்கை நுரையீரலுடன் 6 நாட்கள் உயிர் வாழ்ந்தார். அதன் பின்னர் அவருக்கு நுரையீரல் தானமாக கிடைத்ததை அடுத்து பொருத்தப்பட்டன. தற்போது உடல் நலத்துடன் இருக்கும் அவர், உலகிலேயே நுரையீரல் இன்றி 6 நாட்கள் உயிர் வாழ்ந்த முதல் மனிதர் ஆவார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 month 2 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 month 3 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.2 months 2 weeks ago |
-
சபரிமலையில் மண்டல கால பூஜைக்காக ஐயப்பன் கோவில் நடை இன்று திறக்கப்படுகிறது
14 Nov 2024திருவனந்தபுரம், மண்டல கால பூஜைகளுக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை இன்று மாலை திறக்கப்படுகிறது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 14-11-2024.
14 Nov 2024 -
தகுதியுள்ள அனைவருக்கும் மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படும்: தூத்துக்குடியில் துணை முதல்வர் உதயநிதி பேச்சு
14 Nov 2024தூத்துக்குடி, தகுதியுள்ள அனைத்து மகளிருக்கும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படும் என்று துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதிபட தெரிவித்தார்.
-
குடிநீர் கட்டணங்களுக்கு பசுமை வரி: கர்நாடக அரசு புதிய திட்டம்
14 Nov 2024பெங்களூரூ, ஆறுகளை பாதுகாக்கும் நடவடிக்கையாக குடிநீர் கட்டணங்களுடன் பசுமை வரியை விதிக்க கர்நாடக வனத்துறை முடிவு செய்துள்ளது.
-
ம.தி.மு.க. பொது செயலாளர் வைகோ சென்னை அப்பல்லோவில் அனுமதி
14 Nov 2024சென்னை, ம.தி.மு.க., பொதுச்செயலாளர் வைகோ சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
-
ஜெயங்கொண்டம் அருகே ரூ.1000 கோடி மதிப்பில் காலணி உற்பத்தி தொழிற்சாலை: முதல்வர் ஸ்டாலின் இன்று அடிக்கல் நாட்டுகிறார்
14 Nov 2024திருச்சி, ஜெயங்கொண்டம் அருகே உள்ள மகிமைபுரத்தில் 130 ஏக்கர் பரப்பளவில் செயல்பட்டு வரும் சிப்காட் தொழில் வளாகத்தில், தைவான் நாட்டை சேர்ந்த டீன் ஷூஸ் குழுமம் ரூ.1,000 கோட
-
அரசு மருத்துவமனைகளில் நோயாளிகளுடன் வருபவர்களுக்கு டேக் அறிமுகப்படுத்த முடிவு: அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்
14 Nov 2024சென்னை, நோயாளிகளுடன் வருபவர்களுக்கு சிவப்பு, மஞ்சள், பச்சை, நீல வண்ண டேக் அறிமுகப்படுத்தப்படும் என்று மருத்துவத்துறை மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரம
-
ஹிஸ்புல்லா நடத்திய தாக்குதலில் 6 இஸ்ரேல் ராணுவ வீரர்கள் பலி
14 Nov 2024பெய்ரூட், ஹிஸ்புல்லா தாக்குதலில் இஸ்ரேல் ராணுவத்தைச் சேர்ந்த 6 பேர் உயிரிழந்தனர்.
-
குழந்தைகள் தினத்தை முன்னிட்டு அமைச்சர் அன்பில் மகேஷ் வாழ்த்து
14 Nov 2024சென்னை, நாளைய உலகின் சிற்பிகளாகிய குழந்தைகள் அனைவருக்கும் குழந்தைகள் தின வாழ்த்துகள் என தமிழக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் வாழ்த்து தெரிவித்துள்ளார். 
-
இளங்கலை படிப்பை முன்கூட்டியே முடிக்கும் புதிய முறை வரும் கல்வி ஆண்டில் அமல்: யு.ஜி.சி.
14 Nov 2024சென்னை, இளங்கலை பட்டப்படிப்பை முன்கூட்டியே படித்து முடிக்கும் புதிய முறை வரும் கல்வி ஆண்டில் அமல்படுத்தப்படும் என யு.சி.ஜி.
-
ஷிப்ட் முறை தேர்வு அறிவிப்புக்கு எதிர்ப்பு: உ.பி. அரசு பணியாளர் தேர்வாணையத்துக்கு எதிராக தொடரும் மாணவர்கள் போராட்டம்:
14 Nov 2024லக்னோ, ஷிப்ட் முறை தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து உத்தரப்பிரதேசத்தில் அரசு பணியாளர் தேர்வாணையத்துக்கு மாணவர்களின் போராட்டம் 4-வது நாளாக தொடர்கிறது.
-
தமிழகத்தில் 7 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்
14 Nov 2024சென்னை, தமிழகத்தில் 7 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
-
ஜாமின் மனு தள்ளுபடி எதிரொலி: நடிகை கஸ்தூரியை பிடிக்க 2 தனிப்படைகள் அமைப்பு
14 Nov 2024சென்னை, மதுரை ஐகோர்ட் கிளையில் ஜாமின் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில் தலைமறைவாக உள்ள நடிகை கஸ்தூரியை பிடிக்க 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது.
-
மருத்துவர் சுப்பையா கொலை வழக்கு: தமிழக அரசின் மேல் முறையீட்டு மனுவை ஏற்றது சுப்ரீம் கோர்ட்டு
14 Nov 2024புது டெல்லி, மருத்துவர் சுப்பையா கொலை வழக்கில் தமிழக அரசின் மேல் முறையீட்டு மனுவை சுப்ரீம் கோர்ட்டு விசாரணைக்கு ஏற்றுக்கொண்டது.
-
பா.ஜ.க.வுடன் கூட்டணி இல்லை: எடப்பாடி பழனிசாமி திட்டவட்டம்
14 Nov 2024கிருஷ்ணகிரி, நான் கூட்டணிக்கு வருமாறு வேண்டுகோள் விடுப்பது மற்ற கட்சிகளுக்கு தான். பா.ஜ.க.
-
திருச்சி ஸ்ரீரங்கம் கோவிலில் வைகுண்ட ஏகாதசி பந்தல்கால் நடும் நிகழ்ச்சி: ஜனவரி 10-ல் சொர்க்கவாசல் திறப்பு
14 Nov 2024திருச்சி, திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு ஆயிரங்கால் மண்டபம் அருகே பந்தல் கால் நடும் நிகழ்ச்சி நேற்று காலை நடைபெற்றது.
-
பிரதமர் மோடிக்கு உயரிய தேசிய விருது: டொமினிகா அரசு அறிவிப்பு
14 Nov 2024புது டெல்லி, காமன்வெல்த் ஆப் டொமினிகா தனது உயரிய தேசிய விருதான டொமினிகா விருதை பிரதமர் நரேந்திர மோடிக்கு வழங்குவதாக அறிவித்துள்ளது.
-
144 தடை உத்தரவு மீறல் வழக்கு: இம்ரான் கானை விடுதலை செய்து இஸ்லாமாபாத் கோர்ட் உத்தரவு
14 Nov 2024இஸ்லாமாபாத், 144 தடை உத்தரவு விதிமீறல் வழக்கில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் உள்ளிட்ட அனைவரையும் விடுதலை செய்து மாவட்ட அமர்வு நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டார்.
-
குழந்தைகள் தினம்: முதல்வர் மு.க. ஸ்டாலின் வாழ்த்து
14 Nov 2024சென்னை, குழந்தைகள் தினத்தையொட்டி முதல்வர் மு.க. ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
-
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, திருத்தம் செய்ய திருத்தம் செய்ய சிறப்பு முகாம்
14 Nov 2024சென்னை: வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, திருத்தம் செய்ய 4 நாட்கள் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது.
-
தங்கம் விலை தொடர் சரிவு: சவரனுக்கு ரூ.880 குறைந்தது
14 Nov 2024சென்னை: தங்கம் விலை நேற்றும் சவரனுக்கு ரூ.880 குறைந்து விற்பனையானது.
-
தூத்துக்குடி வட்டாட்சியர் அலுவலகத்தில் துணை முதல்வர் உதயநிதி திடீர் ஆய்வு
14 Nov 2024தூத்துக்குடி: தூத்துக்குடி வட்டாட்சியர் அலுவலகத்தில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நேற்று திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
-
அமெரிக்க உளவுத்துறை இயக்குனராக துளசி கபார்டை நியமித்தார் டிரம்ப்
14 Nov 2024வாஷிங்டன், அமெரிக்க உளவுத்துறை இயக்குனராக முன்னாள் எம்.பி. துளசி கபார்டை நியமனம் செய்துள்ளார் டிரம்ப்.
-
பெண்களின் திருமண வயது 21 ஆக உயர்த்தப்படுமா? பார்லி. நிலைக்குழு 22-ம் தேதி ஆலோசனை
14 Nov 2024புது டெல்லி, டெல்லியில் வரும் 22-ம் தேதி கூடவுள்ள பாராளுமன்ற நிலைக்குழு கூட்டத்தில் பெண்களின் திருமண வயதை 21-ஆக உயர்த்துவது பற்றி ஆலோசிக்கப்படுகிறது.
-
தமிழகம் முழுவதும் அரசு மருத்துவமனைகளில் கூடுதல் பாதுகாப்பு வழங்க டி.ஜி.பி. உத்தரவு
14 Nov 2024சென்னை: தமிழகம் முழுவதும் அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் கூடுதல் போலீஸ் பாதுகாப்பு வழங்க தமிழக டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார்.