ராஜாக்கள், மந்திரிகள், தளபதிகள் போன்றோர் அணியும் கிரீடம் அல்லது தலை கவசங்களை நாம் திரைப்படங்களிலும், அருங்காட்சியகங்களிலும் நாம் பார்த்திருப்போம். வடமேற்கு ஐரோப்பாவில் 8 முதல் 11 நூற்றாண்டு வரையிலும் பல பகுதிகளில் தாக்குதல் நடத்தி குடியேறிய வைக்கிங் எனப்படும் ஒருவகை கூட்டத்தினரின் கால கட்டத்தில் உருவானதாக கருதப்பட்டு வந்தது. ஆனால் அண்மைய ஆய்வுகள் இதில் புதிய வெளிச்சத்தை பாய்ச்சியுள்ளன. ஐரோப்பாவில் காணப்பட்ட ெகாம்பு வைத்த கிரீடங்கள் அல்லது தலை கவசங்கள் அதற்கும் சுமார் 2 ஆயிரம் ஆண்டுகளுக்கும் முந்தையவையாக இருக்கலாம் என்கின்றனர் ஆய்வாளர்கள். பித்தளை கால கட்டம் என வர்ணிக்கப்படும் கிமு 3300 கால கட்டமாக இருக்கலாம் என தெரியவந்துள்ளது. 1942 இல் கோபன்ஹேகனில் இது தொடர்பான தடயங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
சில சுவாரிஸ்யமான தகவல்கள்
கொல்கத்தாவிலிருந்து லண்டனுக்கு பேருந்து சேவை இயக்கப்பட்டது என்றால் நம்ப முடிகிறதா.. ஆனால் அதுதான் உண்மை. அதுதான் அன்றைய நாளில் உலகின் மிக நீளமான பேருந்து சேவையாகவும் காணப்பட்டது. 1957 இல் தொடங்கப்பட்ட அந்த பேருந்து சேவைக்கு "ஆல்பர்ட்" என்றும் பெயரிடப்பட்டது. இந்த பேருந்தானது இங்கிலாந்து, பெல்ஜியம், மேற்கு ஜெர்மனி, ஆஸ்திரியா, யூகோஸ்லாவியா, பல்கேரியா, துருக்கி, ஈரான், ஆப்கானிஸ்தான், மேற்கு பாகிஸ்தான், இந்தியா ஆகிய 11 நாடுகள் வழியாக 32,669 கி.மீ தூரம் பயணம் செய்து லண்டனிலிருந்து கொல்கத்தாவை அடையும் வகையில் இயக்கப்பட்டது. அப்போது பயணக் கட்டணம் ரூ.8 ஆயிரம். 1976 வரை இந்த சேவை செயல்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. ஆசியாவையும் ஐரோப்பியாவை இணைக்கும் வகையில் செயல்பட்ட அந்த பேருந்து சேவை ஒரு வரலாற்று ஆச்சரியம் தானே...
மனிதர்களை அவர்களின் முகங்களை பார்த்தால் வாழ்நாள் முழுவதும் மறக்காமல் நினைவில் வைத்துக் கொள்ளும் பறவை எது தெரியுமா.. கேட்டால் ஆச்சரியப்படுவீர்கள்.. அது வேறு எதுவும் இல்லை... நாம் அன்றாடம் பார்க்கும் காகம் தான் அது. அது மனிதர்களின் முகத்தை ஒரு முறை பார்த்து விட்டால் தனது வாழ் நாள் முழுவதும் மறக்காமல் அடையாளம் காணும் திறன் கொண்டதாக கூறப்படுகிறது. ஆனால் நம்மால் ஒரு காகத்தை ஒரு முறை பார்த்து விட்டு மீண்டும் நம் முன்னால் வந்தால் நம்மால் அடையாளம் காண முடியுமா.. நிச்சயம் முடியாது. அதே போல தன்னுடன் நட்பாக பழகும் மனிதர்களுக்காக அவை பரிசு பொருள்களை கொண்டு வந்து கொடுக்கும் பழக்கத்தையும் கொண்டிருக்கின்றனவாம். என்ன ஓர் ஆச்சரியம் பாருங்கள்.
சுவிட்சர்லாந்தில், ஆல்ப்ஸ் மலைக்காற்றைப் பாட்டிலில் அடைத்து, விற்பனை செய்து வருகிறார் ஜான் கிரீன் என்பவர். அரை லிட்டர் முதல் 3 லிட்டர் பாட்டில்களில் விற்பனைச் செய்யப்படுகிறது. இந்தக்காற்றின் ஒரு லிட்டர் பாட்டிலின் விலை 167 டாலர். இந்திய மதிப்பில் ரூ.11163 ஆகும்.
பால் 87 சதவீதம் நிறமற்ற நீரைக் கொண்டிருந்தாலும் வெள்ளை நிறத்தில்தான் காணப்படுகிறது. இது ஏன் தெரியுமா.. பாலில் புரதம், கொழுப்பு மற்றும் வைட்டமின்கள் உள்ளன. பாலில் உள்ள புரதங்களின் முக்கிய வகைகளில் ஒன்று கேசின்கள் ஆகும். அவை கால்சியம் மற்றும் பாஸ்பேட்டுடன் சிறிய கொத்தாக சேர்ந்து மைக்கேல்ஸ் எனப்படும் சிறிய துகள்களை உருவாக்குகின்றன. இந்த சிறிய துகள்களைத ஒளி தாக்கும்போது அது ஒளி விலகல் ஏற்பட்டு அதை சிதறச் செய்கிறது. பால் அனைத்து ஒளி அலைநீளங்களையும் பிரதிபலிக்கிறது. எதையும் உறிஞ்சாது. இதனால் பால் வெள்ளை நிறமாக தோன்றுகிறது. எல்லா பாலும் வெள்ளை நிறத்தில் இருப்பதில்லை. பீட்டா கரோட்டின் போன்ற கரோட்டினாய்டுகள் காரணமாக பாலில் உள்ள கொழுப்பு மூலக்கூறுகள் காரணமாக சில வேளைகளில் மஞ்சள் நிறத்தையும் பிரதிபலிக்கும்.
செவ்வாயில் மனிதர்கள் உயிர்வாழ்வதற்கான சாத்தியக்கூறுகள் குறித்த ஆய்வை, நாசா விஞ்ஞானிகள் மேற்கொற்கொண்டு வரும் நிலையில், தற்போது செவ்வாய் கிரகத்தில் மது பாட்டில் இருப்பது போன்ற ஒரு புகைப்படத்தை நாசா வெளியிட்டுள்ளது. இந்த மது பாட்டில் புகைப்படம், கடந்த 2007-ம் ஆண்டு பதிவு செய்யப்பட்டதாம்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்2 months 5 days ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்2 months 1 week ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.3 months 19 hours ago |
-
வங்கக்கடலில் புயல் உருவானது
29 Nov 2024சென்னை, வங்கக்கடலில் புயல் உருவானதாக தெரிவித்துள்ள சென்னை வானிலை ஆய்வு மையம், இன்று 7 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுத்துள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 29-11-2024.
29 Nov 2024 -
சவரன் ரூ.57 ஆயிரத்தை தாண்டியது தங்கம் விலை நகை பிரியர்கள் அதிர்ச்சி
29 Nov 2024சென்னை:
-
சென்னைக்கு தென்கிழக்கே 300 கி.மீ. தொலைவில் புயல்
29 Nov 2024சென்னை : தென்மேற்கு வங்கக்கடலில் உருவான ஃபென்ஜால் புயல் சென்னைக்கு தென்கிழக்கே 300 கிமீ தொலைவில் நிலைகொண்டுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
சென்னையில் புயலை எதிர்கொள்ள 28 ஆயிரம் பணியாளர்கள் தயார் : மேயர் பிரியா தகவல்
29 Nov 2024சென்னை : பென்ஜால் புயலை எதிர்கொள்ள சென்னை மாநகராட்சி தயார் நிலையில் உள்ளதாக பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் பிரியா தெரிவித்தார்.
-
அரபிக்கடலில் 500 கிலோ போதை பொருள் சிக்கியது
29 Nov 2024 -
வலைப்பயிற்சியில் தீவிரம்: ஆஸி.க்கு எதிரான 2-வது டெஸ்ட்டில் ஷுப்மன் கில் விளையாடுவாரா?
29 Nov 2024மும்பை : காயத்திலிருந்து குணமடைந்து வரும் ஷுப்மன் கில் வலைப் பயிற்சியில் ஈடுபட்டுள்ளார்.
-
இந்தோனேசியாவில் நிலச்சரிவு: பலி எண்ணிக்கை 27 ஆக உயர்வு
29 Nov 2024ஜகார்த்தா, இந்தோனேசியாவின் சுமத்ரா தீவில் மழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி இதுவரை 27 பேர் உயிரிழந்துள்ளனர்.
-
வாக்குச்சீட்டு முறையில் தேர்தல் நடத்த வேண்டும் : லல்லு பிரசாத் யாதவ் வலியுறுத்தல்
29 Nov 2024சென்னை : நாட்டில் தேர்தல்கள் வாக்குசீட்டு முறையில் நடத்தப்பட வேண்டும் என்று ராஷ்ட்ரிய ஜனதா தளக் கட்சியின் தலைவர் லல்லு பிரசாத் யாதவ் கூறியுள்ளார்.
-
கல்வித்துறை சார்ந்த வழக்குகளில் அரசுக்கு ரூ. 1,100 கோடி இழப்பு: சென்னை ஐகோர்ட் கண்டனம்
29 Nov 2024சென்னை, அரசு வழக்கறிஞர்களின் தவறான செயல்பாடுகளால் கல்வித்துறை சார்ந்த வழக்குகளில் ரூ.1,100 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக ஐகோர்ட்டு கண்டனம் தெரிவித்துள்ளது.
-
மழைக்காலங்களில் மக்கள் கடைப்பிடிக்க வேண்டியவை: தமிழக மின்சாரத்துறை அறிவுறுத்தல்
29 Nov 2024சென்னை, மழைக் காலங்களில் மக்கள் கடைப்பிடிக்க வேண்டியவை குறித்து மின்சாரத் துறை அறிவுறுத்தல் வழங்கியுள்ளது.
-
சிறுபான்மையினரை பாதுகாக்க வேண்டும்: வங்காளதேசத்திற்கு இந்தியா வலியுறுத்தல்
29 Nov 2024புதுடெல்லி, சிறுபான்மையினரை பாதுகாக்கும் பொறுப்பை வங்காளதேச அரசு நிறைவேற்ற வேண்டும் என இந்தியா வலியுறுத்தியுள்ளது.