முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

சில சுவாரிஸ்யமான தகவல்கள்

பெயர்களுக்கு தடை

சீனாவின் ஜிங்ஜியாங் மாகாணத்தில் குழந்தைகளுக்கு ஜிகாத், சதாம், இஸ்லாம், குர்ரான், மெக்கா, இமாம், ஹஜ், மதினா போன்ற பெயர்கள் வைக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. மீறி அத்தகைய பெயர்களை வைத்தால் அந்தக் குழந்தைகளுக்கு கல்வி உள்ளிட்ட அரசு சலுகைகள் மறுக்கப்படும் என அரசு எச்சரித்துள்ளது.

புகைக்கு பதிலாக நீரை வெளியேற்றும் கார்

பொதுவாக கார் உள்ளிட்ட மோட்டார் வாகனங்கள் என்றாலே புகையை கக்கிக் கொண்டு செல்லும் என்பது நாம் அனைவருக்கும் தெரியும். ஆனால் நீரை வெளிவிடும் கார் வந்துள்ளது தெரியுமா.. இந்தியாவில் ஹைட்ரஜனை எரிபொருளாகப் பயன்படுத்தும் முதல் காரை டொயோட்டா நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. இது டொயோட்டாவின் இந்த மிராய் வகைக் கார்கள் ஒரு முறை சார்ஜ் செய்தால் 646 கிலோமீட்டர் வரை செல்லும் திறன்கொண்டவை. பெட்ரோல், டீசல் கார்களுக்குச் சிறந்த மாற்றாக விளங்கும் இந்தக் காரில் அதிக அழுத்தத்தைத் தாங்கும் ஹைட்ரஜன் எரிபொருள் டேங்கும், மின்மோட்டாரும் உள்ளன. ஹைட்ரஜனை நீராகவும் ஆக்சிஜனாகவும் மாற்றுவதன் மூலம் கார் ஓடுவதற்கான ஆற்றல் கிடைக்கிறது. இந்தக் காரில் உள்ள எஞ்சின் புகையை வெளியிடுவதற்குப் பதில் நீரை வெளியிடும் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆயுள் கூடும்

தினமும் காபி குடித்தால் நீண்ட நாட்கள் உயிர் வாழ முடியும் என புதிய ஆய்வில் தெரிய வந்துள்ளது. 2 லட்சத்து 15 ஆயிரம் பேரிடம் இது குறித்து மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் காபி குடிப்பவர்களுக்கு உயிர் கொல்லி நோய்களான இருதய நோய், புற்று நோய், கல்லீரல் நோய், பக்கவாதம் மற்றும் நீரிழிவு உள்ளிட்ட நோய்களின் தாக்கம் மிகவும் குறைவு என கண்டறியப்பட்டுள்ளது.

கலிலியோவின் கைவிரல்

நவீன அறிவியலில் கலிலியோவுக்கு முக்கியமான இடம் உண்டு. வானியலின் தந்தை என்று போற்றப்படுபவர். சூரியன்தான் பூமியை சுற்றி வருகிறது என நெடுங்காலமாக நம்பப்பட்டு வந்த நிலையில், பூமிதான் சூரியனை சுற்றுகிறது என்பது உள்பட சூரிய மண்டலம் குறித்த பல்வேறு உண்மைகளை 15 ஆம் நூற்றாண்டிலேயே உலகுக்கு அளித்தவர். இதற்காக வாடிகன் திருச்சபையால் விசாரணைக்கு உள்படுத்தப்பட்டு வீட்டு சிறையில் அடைக்கப்பட்டார். மன உளைச்சல் மற்றும் கண்பார்வை இழந்து 1642 ஆம் ஆண்டு அவரது வீட்டிலேயே உயிரிழந்தார். அதன் பின்னர் 100 ஆண்டுகள் கழித்து 1737 இல்  அவரது உடல் தோண்டி எடுக்கப்பட்டு, சாண்டா குரோஸ் தேவாலயத்தில் அமைக்கப்பட்ட நினைவு மண்டபத்தில் மீண்டும் அடக்கம் செய்யப்பட்டது. அப்போது ஆண்டன் பிரான்செஸ்கோ என்பவர் கலிலியோவின் வலது கை நடுவிரலை எடுத்து பத்திரப்படுத்தினார். அந்த விரல் பதப்படுத்தப்பட்டு, இத்தாலியின் புளோரன்ஸ் அருங்காட்சியகத்தில் தற்போதும் பாதுகாக்கப்பட்டு வருகிறது.

ரோபோ டீச்சர்

குழந்தை உருவம் கொண்ட இந்த காஸ்பர் ரோபோ, ஆட்டிசம் என்னும் மனவளர்ச்சி குன்றிய குழந்தைகளுக்கும், மன இருக்கத்தில் இருக்கும் சாதாரண குழந்தைகளுக்கும் சிகிச்சை அளிக்கிறது. லண்டனைச் சேர்ந்த பிரபல மருத்துவர் பென் ராபின்ஸ், இந்த ரோபோவை உருவாக்கியுள்ளா‌ர்.

களையெடுக்கும் ரோபோ

தோட்டங்களில் வளரும் களைகளை கொல்லக்கூடிய புதிய ரோபோ ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. டெர்டில் என பெயரிடப்பட்டுள்ள இந்த ரோபோ முற்றிலும் சூரிய மின்சக்தியில் செயற்படக்கூடியது. இதை பயன்படுத்தி களைகளை கொல்ல முடிவதால் எதிர்காலத்தில் கிருமிநாசினிகள் பயன்படுத்த வேண்டிய அவசியம் இருக்காது என இதை வடிவமைத்த குழுவினர் தெரிவித்துள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 5 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 7 months 2 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 7 months 2 weeks ago