முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

சில சுவாரிஸ்யமான தகவல்கள்

சங்கடத்தில் பேஸ்புக்

சட்டத்திற்கு எதிராக மற்றொரு நிறுவனத்தின் விஆர் (விர்சுவல் ரியாலிட்டி)எனப்படும் மெய் நிகர் தொழில்நுட்பத்தை ஃபேஸ்புக் நிறுவனம் பயன்படுத்தியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதற்காக ஃபேஸ்புக் நிறுவனத்திற்கு 50 கோடி டாலர்கள் அபராதம் விதித்து அமெரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மகிழ்ச்சி தரும்

கோபம், வெறுப்பு உணர்ச்சியும்கூட மகிழ்ச்சி தரும் என்று ஒரு புதிய ஆய்வில் தெரியவந்துள்ளது. அமெரிக்கா, பிரேசில், ஜெர்மனி, சீனா, இஸ்ரேல், கானா, போலந்து, சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த 2, 300 மாணவர்களிடம் நடத்தப்பட்ட ஆய்வில் இது தெரியவந்துள்ளது. தாங்கள் விரும்பியதற்கு நிகராக அனுபவிக்கும் உணர்ச்சிகள் இருந்தால் மக்களின் வாழ்க்கை திருப்தியுடன் இருக்கும் என ஆராய்ச்சியாளர்கள் கண்டு பிடித்துள்ளனர்.

ட்ரோன் ஆம்புலன்ஸ்

அமெரிக்கா டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள அக்ரோ நிறுவனம் ஒன்று பறக்கும் ஆம்புலன்சை உருவாக்கியுள்ளது. நோயாளியையும், உடன் ஒரு மருத்துவ உதவியாளரையும் சுமந்துக்கொண்டு பறக்கும் வகையில் இந்த ஆம்புலன்ஸ் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. இதன் உள்ளே லைவ் கேமரா வசதியும், ஆடியோ கனெக்‌ஷனும் இருப்பதால், மருத்துவமனைக்கு வந்து சேர்வதற்குள் நோயாளியின் நிலைமையை ஆராய்ந்து, தகுந்த மருத்துவ ஆலோசனைகளை உதவியாளருக்கு கொடுக்க முடியும். இந்த ட்ரோன், மணிக்கு 100 கிலோ மீட்டர் வேகத்தில் பறக்கும். அவசர காலத்தில் சிட்டாய் பறக்கும் இந்த ட்ரோனுக்கு ஓட்டுனர் இல்லை மற்றொரு ஆச்சரியம். ஜி.பி.எஸ் வைத்து லொகேஷனை அடையாளம் கண்டு, தானாக பறந்து செல்கிறது. இதன் விலை சுமார் ஆறு கோடியாம்.

பல்துலக்க காகித கேப்ஸ்யூல்

பல் துலக்கும் பற்பசை பிளாஸ்டிக் டியூப்களில் அடைக்கப்பட்டு வருகிறது. பிளாஸ்டிக்கால் இன்றைக்கு உலகமே தத்தளித்து வருகிறது. எனவே இதற்கு மாற்றாக கனடாவைச் சேர்ந்த மைக் மெடிகாஃப் (mike medicoff) மற்றும் டாமியென் வின்ஸ் (damien vince) ஆகிய இருவர் காகித கேப்ஸ்யூல்களை கண்டு பிடித்துள்ளனர். காகிதத்தால் ஆன இதில் பற்பசை நிரப்பப்பட்டிருக்கும். அதை வாயில் போட்டு ஒரு கடி... அவ்வளவுதான் கேப்ஸ்யூல் கரைந்து விடும்.. பற்பசை வாயில் நிரம்ப.. ஃப்ரெஷ்ஷால் பல் துலக்க வேண்டியதுதான்... வெகு விரைவில் இந்தியாவுக்கு வரும்.. இனி பற்பசைக்கான பிளாஸ்டிக் தேவையில்லை..

கப்பல் சுரங்கம்

நார்வேயில் கடும்பாறைகளாலான தீபகற்பத்தின் அடியில் உலகின் முதல் கப்பல் சுரங்கம் உருவாக்கப்பட இருக்கிறது. 118 அடி அகலம் மற்றும் 162 அடி உயரம், 5,610 அடி ஆழத்தில் உருவாக்கப்படும் இந்த கப்பல் சுரங்கம் வழியாக, 20,000 டன் எடையுள்ள கப்பல்கள் வரை செல்ல முடியும். இதற்காக சுமார் 80 லட்சம் டன் கற்பாறை வெடிவைத்து தகர்க்கப்படவுள்ளது.

16-ம் நூற்றாண்டிலேயே....

எமோஜிக்கள் எனப்படும் முகபாவனைகளை ஜப்பான் பொறியாளர்கள் கடந்த 1999ம் ஆண்டு உருவாக்கினர். இந்தநிலையில், கடந்த 1635ம் ஆண்டிலேயே எமோஜிக்களின் பயன்பாடு இருந்தது தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஸ்லோவாகியா நாட்டில் உள்ள ஸ்ட்ராசோவ் மவுண்டெயின்ஸ் எனும் கிராமத்தில் சுமார் நானூறு ஆண்டுகள் பழமையான எமொஜி பயன்பாடு கண்டறியப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 4 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 4 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 5 months 4 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 4 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 7 months 4 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 7 months 4 weeks ago