முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

சில சுவாரிஸ்யமான தகவல்கள்

ஐஸ் வாட்டர்

நம்மில் அதிகம் பேர் சாப்பிட்டு முடித்தவுடன் குளிர்பதனபெட்டியில் வைத்திருக்கும் ஜில் தண்ணீரையே பருகுகின்றனர். இது இதயநோய், புற்றுநோய்க்கு வழிவகுக்கும். சாப்பிட்டு முடித்தவுடன் ஜில் தண்ணீரை குடிப்பதால், நாம் எடுத்துக்கொண்ட உணவில் உள்ள எண்ணெய்த் துகள்களை கெட்டியாக்கி விடுவதால் செரிமானம் ஆவதில் பிரச்சனை மற்றும் உடலில் உள்ள கொழுப்பின் அளவை அதிகரிக்கும்.

நோய் எதிர்ப்பு மருந்து

நோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அதை குணப்படுத்த நேரடி மருந்து மட்டுமல்லாமல் நோய் எதிர்ப்பு சக்தி (ஆன்டிபயாடிக்) மருந்துகளையும் வழங்குவது வழக்கம். இது கிருமிகள், பாக்டீரியாக்களை கொன்று நோயை குணப்படுத்தும். வருங்காலத்தை கருத்தில் கொண்டு விஞ்ஞானிகள் புதிய நோய் எதிர்ப்பு மருந்து ஒன்றை கண்டுபிடித்துள்ளனர். ஏற்கனவே வான்கோமைசின் என்ற நோய் எதிர்ப்பு மருந்து புழக்கத்தில் இருந்தது. அந்த மருந்தால் இப்போது பலன் இல்லை. இதே மருந்தை மேலும் வீரியப்படுத்தும் வகையில் ஆய்வு செய்தனர். அதில் புதிய மருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த மருந்து 1000 மடங்கு சக்தி கொண்டதாக இருக்கிறது. எனவே கிருமிகளால் உருவாகும் அனைத்து நோய்களையும் இது கட்டுப்படுத்துமாம்.

உங்களுக்கு அருகில் ப்ரீ வைபை கிடைக்குமா?

இன்றைக்கு பெருநகரங்களில் பெரும்பாலான வணிக தளங்களில் அனைத்து பரிவர்த்தனைகளும் ஆன்லைன் மூலமாகவே வந்து விட்டன. அதை மேற்கொள்வதற்கு இன்டர்நெட் வசதி அவசியம். வாடிக்கையாளர்களுக்கு சிரமம் இருக்கக் கூடாது என கருதும் கார்ப்பரேட் நிறுவனங்கள் பலவும் இணையதள வசதியையும் இலவசமாகவே அளிக்கின்றன. இவ்வாறு ப்ரீயாக கிடைக்கும் வைபை வசதியை கண்டுபிடிக்க நாம் ஒவ்வொருமுறையும் வைபை ஆப்சனை ஆன் செய்து ஸ்கேன் செய்து..... இனி இந்த கவலை வேண்டாம். ஆப்பிள் மற்றும் ஆன்ட்ராய்டு போன்களில் செயல்படக் கூடிய ஹாட்ஸ்பாட் மேப் எனப்படும் செயலி உங்களுக்கு உதவும். இதை இன்ஸ்டால் செய்து கொண்டால் உங்கள் லோகேஷனை டிடெக்ட் செய்து விட்டு உங்களுக்கு அருகிலேயே எங்கே இலவச வைபை வசதி கிடைக்கும் என்ற தகவலை தெரிவிக்கும். சில இடங்களில் பாஸ்வேர்ட் தேவைப்படுமே என்று கவலைப்படுபவர்களுக்கு அதற்கான தனி பட்டியலையும் இணைத்து காட்டும். இனி எங்கு சென்றாலும் இலவசமாக இன்டர்நெட் வசதியை பெறலாம் ஜாலியாக.

மணப்பெண் ரோபோ

சீனாவில் பொறியாளர் ஒருவர் பெண் தேடித் கிடைக்காததால் ரோபோவை மணமுடித்துள்ளார். ஹவாய் நிறுவனத்தில் பணிபுரியும் கணினிப் பொறியாளரான ஜெங் ஜியாஜியா என்பவர் யிங்யிங் எனும் பெண் ரோபோவை திருமணம் செய்துகொண்டார். இவர்களின் திருமண நிகழ்ச்சியில் அவரின் தாய் மற்றும் நண்பர்களும் கலந்து கொண்டனர். திருமணத்தில் யிங்யிங் ரோபோவின் மீது பாரம்பரிய சிவப்பு துப்பட்டா கொண்டு அலங்கரிக்கப்பட்டு பாரம்பரிய முறைப்படி நடைபெற்றது. 35 வருடங்களுக்கு பிறகு ரோபோவை மனிதர்கள் மணமுடிப்பது இயல்பாகிவிடும் என ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். திருமணமாகாத விரக்தியில் இளைஞர் ஒருவர் ரோபோவை கரம்பிடித்த நிகழ்வு சீன ம‌க்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

புதுமையான உணவு

பின்லாந்தில் உள்ள வி.டி.டி. தொழில் நுட்ப ஆராய்ச்சி மையம், லபீர்னந்தா தொழில் நுட்ப பல்கலைக்கழக விஞ்ஞானிகள், காற்றில் இருந்து கார்பன்டை ஆக்சைடை பிரித்து எடுத்து அதிலிருந்து புரோடீன் பவுடர் தயாரித்துள்ளனர். இதை மனிதர்கள்,  விலங்குகள் உணவு பொருளாக பயன்படுத்த முடியுமாம். இந்த புரோடீன் பவுடரை மின்சாரத்துடன் சேர்த்து எங்கு பயன்படுத்தினாலும் அது உணவுப் பொருளாக கார்பன்டை ஆக்சைடு மற்றும் மின்சாரத்துடன் சேர்ந்து தயாரிக்கப்படும் புரோடீன் பவுடர் 10 மடங்கு அதிக ஒளிச்சேர்க்கையை ஏற்படுத்தி காய்கள் மற்றும் பழங்கள் உள்ளிட்ட உணவு பயிர்களின் மகசூலை அதிகரிக்கும் என விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.

செவ்வாய் கிரகத்தில் தண்ணீர்

செவ்வாய் கிரகத்தில் ஆண்டின் சில நாட்கள் மட்டும் உப்பு நீர் உருவாவதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது. என்ன மக்களே.. கேட்கவே ஆச்சரியமாக இருக்கிறதா.. இது தொடர்பாக நாசா வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில், செவ்வாயின் மேற்பரப்பில் நடுவில் அமர்ந்திருக்கும் ஒரு பாறை குளிர்காலத்தில் நிழலை உருவாக்குகிறது. குளிர்காலத்தில் அந்த நிழல் பகுதியில் பனி குவிகிறது. அதில் சூரிய ஒளி படும்போது ​​பனி திடீரென்று வெப்பமடைகிறது. அதன் விரிவான ஆய்வுகளில், கிரகத்தில் காலையில் மைனஸ் 128 டிகிரி செல்சியஸ் இருந்த வெப்பநிலை மதியத்துக்குள் மைனஸ் 10 டிகிரி செல்சியஸாக மாறுகிறது. இது ஒரு நாளில் சில மணி நேரத்தில் ஏற்படும் மிகப் பெரிய மாறுதலாகும். ஆனால், குறுகிய காலத்தில், உறைபனி அனைத்தும் கரைந்து வளிமண்டலத்திற்கு செல்வதில்லை. இதனால், அப்பகுதியில் இருக்கும் நீரானது உப்பு கரைசலாக இருக்கலாம். ஏனென்றால் உப்பு நிறைந்த தரையில், பனி மைனஸ் 10 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் உருகிவிடும். பனி அனைத்தும் திரவமாக அல்லது நீராவியாக மாறும் வரை உப்புநீர் இருக்கிறது. இந்த நிகழ்வு நடந்து முடிந்து, அடுத்த செவ்வாய் ஆண்டில் (687 நாட்கள்), இதே செயல்முறை மீண்டும் நிகழ்கிறது என்கிறது அந்த அறிக்கை. ஆச்சரியமாக உள்ளதல்லவா...

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 10 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 4 days ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 4 days ago