முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

சில சுவாரிஸ்யமான தகவல்கள்

டிஜிட்டல் ஆபத்து

டிஜிட்டல் டெக்னாலஜி பெற்றோர் மற்றும் குழந்தைகளுக்கிடையேயான உறவில் மாற்றத்தை ஏற்படுத்துவதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. தினசரி செயல்பாடுகளில் அல்லது குழந்தைகளிடம் பேசும் போது நாம் ஸ்மார்ட் போனை பயன்படுத்தினால், குழந்தைகள் அதிக சென்ஸ்டிவ், அதிக கோபம், தீவிர செயல்கள் மற்றும் புலம்பல் போன்றவற்றிக்கு உள்ளாகுகிறார்களாம்.

உதவும் தொழில்நுட்பம்

வாட்ஸ் அப் செயலியில் உள்ள பாதுகாப்பு அம்சங்கள் தீவிரவாதிகளின் தகவல் தொடர்புக்கு உதவுவதாக தெரியவந்துள்ளது. வாட்ஸ் அப் செயலி மூலம் அனுப்பப்படும் தகவல்கள் என்க்ரிப்டட் எனப்படும் தொழில்நுட்பம் மூலம் பாதுகாக்கப்படுவதால், தகவல்களை அனுப்புவர் மற்றும் பெறுபவர் தவிர வேறு யாரும் ஹேக் செய்ய முடியாது.

இலக்கியத்தில் அதிக நோபல் பரிசு பெற்ற நாடு எது தெரியுமா?

இலக்கியத்துக்காக வழங்கப்படும் நோபல் பரிசுதான் உலகிலேயே மிகவும் உயர்ந்த விருதாக கருதப்படுகிறது.  அதில் அதிகமான விருதுகளை குவித்த நாடு பிரான்ஸ். 1901 முதல் 15 பேர் இலக்கியத்துக்காக இதுவரை நோபல் பரிசு வென்றுள்ளனர். அந்த ஆண்டில் முதன்முறையாக நோபல் பரிசு பெற்று சாதனை பட்டியலை தொடங்கி வைத்தவர் பிரெஞ்சு கவிஞர் Sully Prudhomme. அவரை தொடர்ந்து ரெனே தெகார்த்தே, வால்டேர், சார்லஸ் பொதேலர் என பலர் நோபல் பரிசுகளை வென்றுள்ளனர்.

களிமண் வீரர்களின் அணிவரிசை எங்குள்ளது தெரியுமா?

சீனாவில் உள்ள சாங்ஷி மாகாணத்தில் 1974 இல் தொல்லியல் ஆய்வாளர்கள் தடயம் ஒன்றை கண்டறிந்தனர். அங்கு தோண்டிய போது சுமார் 8 ஆயிரம் களிமண் வீரர்களின் அணிவகுப்பு சிலைகளாக வடிக்கப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. டெரகோட்டா ஆர்மி என அழைக்கப்படும் இந்த இடம் சுமார 98 சதுர கிமீ பரப்பளவில் உள்ளது. கின் வம்சத்தின் முதல் பேரரசரான கின் ஷி ஹூவாங் ஆட்சி காலத்தில் அதாவது சுமார் கிபி 246 இல் போரில் இறந்த வீரர்களின் நினைவாக இது அமைக்கப்பட்டது கண்டு பிடிக்கப்பட்டு, தற்போது வரை இது பாதுகாக்கப்பட்டு வருகிறது.

வேகம் அதிவேகம்

ஃபாரடே நிருவனத்தின் இந்த அதிவேக காருக்கு FF 91 என்று பெயரிடப்பட்டுள்ளது. இதில் சக்தி வாய்ந்த 1050 ஹார்ஸ்பவர் என்ற என்ஜின்கள் பொருத்தப்படவுள்ளது. இதனால், இந்த காரானது, 2.40 வினாடிகளில் 0-100கி.மீ. வேகத்தை தொட்டுவிடும். 375 மைல்களை அசத்தலாக இது கடக்க கூடியது. இந்த மாடல் கார்களில் முகம் மூலம் அடையாளம் காணும் (face recognition)ஆப் பொருத்தப்பட்டுள்ளது.

உலகின் மிகப்பெரிய பல்லிகள் வசிக்கும் கொமோடோ தீவு

இந்தோனேசியாவில் 350 கி.மீ. பரப்பளவு கொண்ட தீவுதான் கொமோடோ தீவு. இத்தீவில் உலகின் மிகப்பெரிய பல்லி இனமான கொமோடோ டிராகன் என்ற ராட்சத உயிரினங்கள் வாழ்ந்து வருகின்றன. இந்த டிராகன் விலங்குகள் கொமோடோ தீவில்தான் முதன்முதலில் கண்டுபிடிக்கப்பட்டது. அதனால்தான் இந்த டிராகனுக்கு கொமோடோ டிராகன் எனப் பெயரிடப்பட்டது. சமீபகாலமாக கொமோடோ தீவிற்கு அருகிலுள்ள ரின்கா தீவிலும் இந்த உயிரினம் அதிகமான எண்ணிக்கையில் வளர ஆரம்பித்துள்ளன. இந்த உயிரினங்கள் 10 அடி நீளம் வரை வளரக்கூடியது. சிறுவர்களை அதிவேகமாக வேட்டையாடி உண்ணும் திறன் படைத்தது. அதனால் இந்த இரு தீவுகளிலும் மக்கள் வசிப்பதை முற்றிலுமாகத் தவிர்த்து விட்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 4 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 4 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 5 months 4 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 4 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 7 months 4 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 7 months 4 weeks ago