முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

சில சுவாரிஸ்யமான தகவல்கள்

குறட்டை விடும் பறவை எது தெரியுமா?

அலகின் நுனியில் நாசித் துவாரங்களை கொண்ட ஒரே பறவை கிவி. இது தரையில் உள்ள புழுக்கள் மற்றும் பூச்சிகள் போன்ற உணவுக்காக மோப்பம் பிடிக்க உதவுகிறது. அதன் நாசியைத் துடைக்க அடிக்கடி குறட்டை விடுகின்றது. இது ஒரு கோழி இனம். இது பல வித்தியாசமான பன்புகள் கொண்டது. இவை நியூசிலாந்து அதை சுற்றி உள்ள சிறிய நாடுகளின் காடுகளில் வாழ்கின்றன. இப் பறவை 30 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு நியூசிலாந்தில் தோன்றியது. இவைகளால் பறக்க முடியாது என்பது இதன் சிறப்பம்சமாகும். நியூசிலாந்தின் தேசிய சின்னமாக கிவி இடம் பெற்றுள்ளது. தற்போது அழியும் தருவாயில் இருப்பதாக பட்டியலிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மடக்கும் பைக்

டீசல் மற்றும் பெட்ரோல் வாகனங்களுக்கு மாற்றாக மின்சாரத்தில் இயங்கும் வாகனத்தை தயாரிக்க ஆர்வம் பெருகியுள்ள நிலையில், கச்சிதமான எலெக்ட்ரிக் பைக்கினை ஷென்ஷென் எனும் சீன நிறுவனம் தயாரித்துள்ளது. ஸ்மாசர்க்கிள் எஸ் 1 என்று பெயரிடப்பட்டுள்ள இந்த எலெக்ட்ரிக் பைக் சுமார் 7 கிலோ எடை கொண்டது. மணிக்கு 20 கி.மீ. வேகத்தில் செல்லும் திறன் பெற்றது. இந்த எலெக்ட்ரிக் பைக்கை 5 எளிய முறைகளைப் பயன்படுத்தி மடித்து நமது கைப்பைக்குள் வைத்துக்கொள்ளலாம் என்பது இதன் கூடுதம் சிறபம்சம். 36 வோல்ட் பேட்டரியில் இயங்கும் இந்த எலெக்ட்ரிக் பைக், இரண்டரை மணி நேரத்தில் முழுவதும் சார்ஜ் ஆகிவிடுமாம். ஸ்மார்ட் போன் மூலம் கட்டுப்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள ஸ்மாசர்க்கிள் எஸ் 1 எலெக்ட்ரிக் பைக், 100 கிலோ எடை வரை தாங்குமாம்.  

சிறப்பாக செயல்பட...

அமெரிக்காவை சேர்ந்த குழந்தைகள் நல நிபுணர் ஒருவரால் 1046 குழந்தைகளிடம் நடத்தப்பட்ட ஆய்வில், குறைந்த நேரம் தூங்கும் குழந்தைகளுக்கு நரம்பு பாதிப்பு நோய் ஏற்படும் அபாயம் இருப்பதும் கண்டறியப்பட்டுள்ளது. எனவே, பள்ளிக்கு செல்வதற்கு முன்பும், பள்ளியில் படிக்கும் போதும் குழந்தைகளை அதிக நேரம் தூங்க வைக்க வேண்டுமாம்

அச்சம் தவிர்

இந்தியாவில் பிறந்து உலக நாடுகளை குறிப்பாக ஆங்கிலம் பேசும் மக்களை தனது பேச்சால் ஈர்த்தவர் விவேகானந்தர்.  ஆங்கிலத்தில் சரளமாக பேசும் வல்லமையை பெற்றவராக இருந்த போதும் அவர் தனது பள்ளி, கல்லூரி தேர்வுகளில் ஆங்கிப்பாடத்தில் சராசரியாக 45 , 50 என்ற மதிப்பெண்களை தான் எடுத்தார்.

உலகின் மிக பழமையான ஒயின் பாட்டில் அண்மையில் கண்டுபிடிப்பு

மேலைநாடுகளில் ஒயினை தயாரிப்பதும், அவற்றை நூறாண்டுகளாக, தலைமுறை தலைமுறையாக பாதுகாப்பதும் வழக்கம். அண்மையில் ரோமை சேர்ந்த செல்வந்தர் ஒருவரின் கல்லறை ஜெர்மனியில் அமைந்துள்ளது. அதில்தான் உலகிலேயே மிகவும் பழமையான ஒயின் பாட்டில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த ஒயின் 4 நூற்றாண்டைச் சேர்ந்ததாக இருக்கலாம் என நம்பப்படுகிறது. கிட்டத்தட்ட 1650 ஆண்டுகள் பழமையானதாகும். ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக திறக்கப்படாமல் இருப்பதால் திறந்தால் என்ன ஆகும் என்றோ, தற்போது அது நச்சுத் தன்மைய உடையதாகவோ மாறியிருக்கக் கூடும் என்றும் அஞ்சப்படுகிறது. இருந்த போதிலும் திறக்கப்படாத பாட்டிலில் அடைக்கப்பட்ட மிக பழமையான ஒயினாக இது கருதப்படுகிறது.

ஆய்வகத்தில் தயாரான செயற்கை வைரங்கள்

நகைகள் என்றாலே உலகம் முழுவதும் முன்னணியில் இருப்பது தங்கம், வைரம், பிளாட்டினம் நகைகள்தான். இவற்றில் பெரும்பாலும் இவை அனைத்தும் இயற்கை முறையில் சுரங்கங்களில் வெட்டி எடுக்கப்பட்டு சந்தைப்படுத்தப்பட்டு வருகின்றன. தங்கத்தை செயற்கையாக ஆய்வகத்தில் உற்பத்தி செய்வது பெரும் செலவு பிடிக்கும் காரியம் என்பதால் யாரும் இதுவரை அதில் ஈடுபடவில்லை. வைரத்தில் இதுவரை செயற்கை வைரம் என கூறப்பட்டவை அனைத்தும் விலை மலிவான வைரமாகவே இருந்து வந்தது. ஆனால் முதன்முறையாக இயற்கை வைரத்துக்கு இணையாக மதிப்புள்ள செயற்கை வைரத்தை நகை உற்பத்தி நிறுவனம் ஒன்று தனது ஆய்வகத்தில் தயாரித்துள்ளது. உலகின் மிகப் பெரிய ஜூவல்லரி பிராண்டான பந்தோரா முதன்முறையாக தனது ஆய்வகத்தில் தயார் செய்த செயற்கை வைரத்தை விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது. இதன் மற்றொரு பிராண்டான பந்தோரா பிரில்லியன்ஸ் ஏற்கனவே பிரிட்டனில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.  தற்போது இதன் புதிய முயற்சி 2022 இல்  உலக சந்தையில் எதிரொலிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 10 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 4 days ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 4 days ago