முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

சில சுவாரிஸ்யமான தகவல்கள்

அந்த 6 மணி நேரம் ....

அதிகபட்சமாக தினசரி 8 மணி நேரம் நன்றாக அயர்ந்து தூங்கினால் உடலுக்கு நல்லது என்ற பொதுவான கருத்து உள்ளது. தற்போது குறைந்தது தினந்தோறும் 6 மணி நேரத்துக்கு குறையாமல் தூங்க வேண்டும்.  இல்லாவிடில் உடலில் பலவிதமான நோய்கள் ஏற்பட்டு உயிரிழப்பு அபாயம் உருவாகுமாம். இதுகுறித்து சமீபத்தில் ஆய்வு மேற் கொள்ளப்பட்டது. அதில் 6 மணி நேரத்துக்கு குறைவாக தூங்கியவர்கள் நீரிழிவு, அதிகபட்ச ரத்த அழுத்தம் மற்றும் உடல் பருமன் நோய்கள் ஏற்படுகிறதாம். அதன் மூலம் 2 மடங்கு உயிரிழப்பு அபாயம் உருவாகும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது. தூக்கம் குறைவதால் இருதய நோய்கள், பக்க வாதம், மூளையில் பாதிப்பு போன்றவையும் உருவாகும். எனவே நாள் ஒன்றுக்கு குறைந்தது 6 மணி நேரமாவது தூங்க வேண்டும் என நிபுணர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

பூமியை தொடர்ந்து ...

பூமியை அடுத்து உயிரினங்கள் வாழ ஏற்றதாக கருதப்படும் செவ்வாய் கிரகத்தில் விவசாயம் செய்வது தொடர்பாக விஞ்ஞானிகள் ஆய்வு நடத்தினர். அதிக ஒளி உமிழும் விளக்குகள் மூலம் செவ்வாய் கிரகத்தின் வெப்பநிலையையும், அங்கு இருப்பது போன்ற கார்பன் டை ஆக்ஸைடு உள்ளிட்ட வளிமண்டல சூழலையும் உருவாக்கி உருளைக்கிழங்கை விளையவைத்துள்ளனர்.

தரையிலும் தண்டவாளத்திலும் ஓடும் பேருந்து முதன்முறையாக அறிமுகம்

ஜப்பான் நாட்டில் முதன் முறையாக தரையிலும் தண்டவாளத்திலும் ஓடும் பேருந்து அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஜப்பான் நாட்டைச் சேர்ந்த ஒரு நிறுவனம் இதற்காக பிரத்யேக வடிவில் வாகனங்களை வடிவமைத்துள்ளது. இந்த ரயில் பஸ் பேருந்து சேவை கடந்த மாதம் ஜப்பானில் உள்ள கையோ நகரில் தொடங்கப்பட்டது. சாலையில் ஓடும் போது ரப்பர் டயரிலும், தண்டவாளத்தில் ஓடும் போது இரும்பு சக்கரத்திலும் ஓடும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த இரு சக்கரங்களின் செயல்பாடுகளையும் 15 விநாடிகளுக்குள் மாற்றிக் கொள்ளலாம் என்பது கூடுதல் சிறப்பு.

பைலட் இல்லாமல் பறக்கும் ஹெலிகாப்டர் அமெரிக்கா முதன்முறையாக சாதனை

ஆள் இல்லாத விமானங்களையும், பைலட் இல்லாத விமானங்களையும் தற்போது நாம் கேள்வி பட்டு வருகிறோம். தற்போது காரிலும் ஆட்டோ பைலட் எனப்படும் தானியங்கி கார்கள் வந்து விட்டன. ஆனால் மிகவும் சிக்கலான செயல்பாடுகளை கொண்ட ஹெலிகாப்டர்களை பைலட் இல்லாமல் ஓட்ட முடியுமா என்ற கேள்வி எழுவது இயல்புதான். ஆனால் தற்போது முடியும் என அமெரிக்கா நிரூபித்துள்ளது. பிளாக் ஹாக் ரக ஹெலிகாப்டர்களை முழுக்க முழுக்க பைலட்டே இல்லாமல் ஆட்டானமஸ் முறையில் இயங்கும் வரையில் வடிவமைத்துள்ளது அமெரிக்க ராணுவம். இதற்கான முதல் சோதனை ஓட்டம் கடந்த 5 ஆம் தேதியும் பின்னர் கடந்த 7 தேதியும் நிகழ்த்தி பார்க்கப்பட்டன. இதில் இந்த பைலட் இல்லா ஹெலிகாப்டர் மிகச் சரியாக மேலெழுந்து சென்று பறந்து. மிகச் சரியாக தரையில் வந்து லேண்ட் ஆனது.  இனி வருங்காலத்தில் ஆட்டோ பைலட் கார்களை போல ஆட்டோ பைலட் ஹெலிகாப்டர்களும் வானில் வலம் வருவதை பார்க்கும் காலம் வெகு தொலைவில் இல்லை.

உணவில் கவனம்

காரமான உணவுகள், இரைப்பையில் அமில சுரப்பை அதிகரித்து உடலை பரபரப்புடன் இருக்க செய்வதால் கோபத்தை ஏற்படுத்தும். எண்ணெயில் பொரித்த உணவுகளை உட்கொள்வது, காபி அல்லது டீயை ஒரு நாளில் அதிகளவு பருகுதல், பிஸ்கட், சிப்ஸ், சூயிங் கம் மற்றும் செயற்கை சுவையூட்டிகள், ஆல்கஹால் ஆகியவை கோபத்தை ஏற்படுத்தும்.

பறவைகள் சிறுநீர் கழிப்பதில்லை என்பது உங்களுக்கு தெரியுமா?

பாலூட்டிகளை போல அல்லாமல், பெரும்பாலான பறவைகளுக்கு சிறுநீர் பைகள் கிடையாது. கழிவுகளை வெளியேற்ற சிறுநீரை வெளியேற்றுவதை காட்டிலும் குழம்பு வடிவிலான எச்சத்தை அவை கழிவாக வெளியேற்றி விடுகின்றன. அதே நேரத்தில் தீக்கோழிகள் மற்ற பறவைகளிடமிருந்து சற்றே மாறுபடுகின்றன. அவைகளுக்கும் சிறு நீர் பைகள் இல்லை என்ற போதிலும், பாலூட்டி விலங்கினங்களைப் போலவே தீக்கோழியும் சிறுநீரையும், எச்சத்தையும் முற்றிலும் தனித்தனியாக பிரித்து வெளியேற்றுகின்றன என்பது ஆச்சரியம் தானே..

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 14 hours ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 14 hours ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 6 months 16 hours ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 16 hours ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 8 months 14 hours ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 8 months 14 hours ago