முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

சில சுவாரிஸ்யமான தகவல்கள்

ஸ்மார்ட் ரெயில் !

சீனாவில் சாலையில் வரையப்பட்டுள்ள கோட்டின் மீது மணிக்கு 70 கி.மீ. வரை வேகத்தில் செல்லும் உலகின் முதல் ஸ்மார்ட் ரெயில் தனது சோதனை ஓட்டத்தை வெற்றிகரமாக முடித்து பயணத்தை தொடங்கி உள்ளது. ஏ.ஆர்.டி. என்று அழைக்கப்படும் இந்த ரெயில் மூன்று பெட்டிகளை கொண்டுள்ளது. இதில் 300 பேர் பயணம் செய்யலாம். மற்ற ரெயில் அல்லது டிராம் போக்குவரத்திற்கு ஆகும் செலவை விட குறைந்த அளவான தொகையே இதற்கு செலவாகிறது. தற்சமயம் ஹூனான் மாகாணம் சுஜோவ் நகரில் நான்கு நிலையங்களை கொண்ட 3.1 கி.மீ. தொலைவிற்கு மட்டுமே அறிமுகப்படுத்தப்பட்டு, ரெயில் இயக்கப்படுகிறது. அடுத்த ஆண்டு முதல் முக்கிய சாலைகளில் இயங்கத் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அகத்தியர் அருவி

திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரத்தில் மேற்குத் தொடர்ச்சி மலைத்தொடரில் அமைந்துள்ள அருவி அகத்தியர் அருவி. சுமார் 25 அடி உயரத்தில் இருந்து விழும் இந்த அருவியில் ஆண்டு முழுமைக்கும் தண்ணீர் வருவதால், இது வற்றாத ஜீவநதி என்னும் பெயரை பெறுகிறது. இதிலிருந்து உருவாவதுதான் தாமிரபரணி நதி.

மாரடைப்பிலிருந்து விடுதலை

இருதய பிரச்னைகளை கண்டறிய சோனோகிராம் உள்ளிட்ட கருவிகள் தற்போது மருத்துமனைகளில் பயன்படுத்தப்படுகின்றன. வயர்களும், டிஜிட்டல் திரைகளும், அதன் ஒலியையும் பார்த்தாலே, கேட்டாலே நன்றாக இருப்பவர்களுக்கும் இதயம் சரியில்லையோ என்று அச்சப்பட வைக்கும் மிகப் பெரியதாக இருக்கும். போதாதென்று அவற்றை கையாள தனி குளிரூட்டப்பட்ட அறைகள் அல்லது தனி லேப்கள் என அதை விவரித்துக் கொண்டே போகலாம். இதற்கெல்லாம் விடிவு காலம் இல்லையா என்று ஏங்குபவர்களுக்காகவே வந்து விட்டது கையடக்க சோனோகிராம் கருவி. அதன் பெயர் கேப்ஷன் ஏஐ. ஆண்டுதோறும் இதய நோயால் 14 லட்சம் பேர் இறப்பதாக புள்ளி விபரங்கள் சொல்கின்றன. இனி இதை எங்கும் எடுத்து செல்லலாம் என்பதால் மாரடைப்புக்கு குட்பை.

பாகிஸ்தான் வெள்ளத்தில் இந்திய வகை டால்பின்

அழியும் உயிரினங்களில் ஒன்றாக பன்னாட்டு வன விலங்கு சம்மேளனம் இந்திய வகை டால்பின்களை பட்டியலிட்டுள்ளது. இவை இந்தியா, பாகிஸ்தான் பிராந்தியங்களில் உள்ள நன்னீர் நிலைகளில் வாழக்கூடியவை. டால்பின்கள் மனிதர்களோடு நெருக்கமாக பழகக் கூடியவை என்பது நாம் நன்கு அறிந்ததே. இந்த இந்திய வகை டால்பின்களை, கங்கை நதி டால்பின்கள் என குறிப்பிடுகின்றனர். சிந்து, கங்கை, பிரம்மபுத்ரா போன்ற ஆழமும் நீளமும் மிக்க நதிகளில் இவை காணப்படும். தற்போது இந்தியாவில் அருகிவிட்ட இவை அண்டை நாடான பாகிஸ்தானில் பாயும் சிந்து நதி, வங்க தேசத்தில் பாயும் பிரம்மபுத்ர தீரங்களில் இருப்பதாக சொல்லப்படுகிறது. இந்தியாவில் கடந்த 1801 இல் இது அதிகாரப்பூர்வமாக கண்டறியப்பட்டது. தற்போது அருகி வரும் இந்த டால்பின்கள் குறைபார்வை உடையவை என்றும் சொல்லப்படுகிறது. எப்போதும் தனித்து திரிபவை. குட்டி போட்டால் குட்டிகளோடு சிறிது காலம் சேர்ந்து சுற்றும். வளர்ந்ததும் மீண்டும் தனித்தனிதான். பாகிஸ்தானில் சிந்து நதியில் தத்தளித்த டால்பினை ஆர்வலர்கள் மீட்டு பாதுகாப்பாக ஆழமான பகுதியில் கொண்டு நீந்த விட்டனர். தற்போது இந்த செய்தி மிகுந்த ஆச்சரியத்துடன் ஆர்வலர்களால் பகிரப்பட்டு வருகிறது.

பாஸ்போர்ட் என்ற சொல் எப்படி வந்தது

பாஸ்போர்ட் என்ற வார்த்தை பைபிளில் இருந்து உருவானதாக வரலாறு ஒன்று கூறுகிறது. ஆனால், கிறிஸ்துவுக்கு முன்பும் இந்த வழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது. அதாவது 450 பி.சி. காலத்தில் பெர்சியாவில் ஆட்சி செய்த மன்னர் ஒருவர், அவரது அரசவையில் பணியாற்றிய அதிகாரிகள், நாட்டின் எல்லையில் உள்ள ஆற்றைக் கடந்து செல்வதற்கு ஒரு அனுமதிச்சீட்டு கொடுப்பதை வழக்கமாக வைத்திருந்தாராம். இருப்பினும், 15ஆம் நூற்றாண்டில் தான் பாஸ்போர்ட் என்ற வார்த்தை உருவானதாக தெரிகிறது. அப்போது பாஸர் (வழிபோக்கர்) + போர்ட் (துறைமுகத்தை கடக்க இருப்பவர்) என்ற கூட்டுச் சொற்கள் சேர்ந்த பாஸ்போர்ட் என்றானதாம்.

இன்ஃப்ராரெட் வைபை

உலகில் தற்சமயம் பயன்படுத்தப்படும் வைபை வேகத்தை விட 300 மடங்கு வேகமாக இண்டர்நெட் வேகம் வழங்கும் புதிய தொழில்நுட்பத்தை டட்சு ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். மின்சார கதிர்களை பயன்படுத்தி வயர்லெஸ் முறையில் தகவல்களை பரிமாற்றம் செய்யும் புதிய வழிமுறையை கண்டறியப்பட்டுள்ளது. ஒவ்வொரு கதிர்களும் அதிவேக திறன் கொண்ட சேனல் போன்று வேலை செய்கிறது. இந்த கதிர்கள் அனைத்தும் ஆப்டிக்கல் ஃபைபர் போன்று வேலை செய்கிறது. புதிய வயர்லெஸ் வழிமுறைகளின் முதற்கட்ட சோதனைகளில் நொடிக்கு 112 ஜிபி வேகத்தை வழங்குகிறது.   இந்த வேகம் கொண்டு மூன்று எச்டி திரைப்படங்களை ஒரே நொடியில் முழுமையாக டவுன்லோடு செய்ய முடியுமாம்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 4 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 4 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 6 months 4 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 4 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 8 months 4 days ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 8 months 4 days ago