முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

ஆப்பிள் பான் கேக்

Cooking time in minutes: 
20
Ingredients: 

ஆப்பிள் பான் கேக் செய்யத் தேவையான பொருட்கள்.

  1. நீளமாக நறுக்கிய ஆப்பிள் - 3.
  2. முட்டை –  2.  
  3. சர்க்கரை – 3 ஸ்பூன்.
  4. வெண்ணிலா சுகர் - 1/2 ஸ்பூன்.
  5. வெண்ணிலா எசன்ஸ் - ஒரு ஸ்பூன்.
  6. வெஜிடபிள் ஆயில் - ஒரு ஸ்பூன்.  
  7. தயிர் - 50 கிராம்.
  8. பேக்கிங் பவுடர் - 1/2 ஸ்பூன்.
  9. மைதாமாவு – 200 கிராம்.
  10. பட்டர் - 50 கிராம்.
  11. பட்டை தூள் - ஒரு ஸ்பூன்.
  12. உப்பு - ஒரு சிட்டிகை.
Method: 

செய்முறை ;--

  1. ஒரு பௌலில்  2 முட்டையை உடைத்து ஊற்றி நன்றாக கலந்து வைத்துக்கொள்ளவும்.
  2. இதனுடன் ஒரு சிட்டிகை உப்பு,சர்க்கரை ஒரு ஸ்பூன்,வெண்ணிலா சுகர் 1/2 ஸ்பூன்,வெண்ணிலா எசன்ஸ் ஒரு ஸ்பூன்,வெஜிடபிள் ஆயில் ஒரு ஸ்பூன்,தயிர் 50 கிராம் ஊற்றி நன்றாக கலந்து வைத்துக்கொள்ளவும்.
  3. இதனுடன் 1/2 ஸ்பூன் பேக்கிங் பவுடர் மற்றும் 200 கிராம் மைதாமாவை போட்டு நன்றாக கலந்து தனியாக எடுத்து வைத்துக்கொள்ளவும்.
  4. அடுப்பில் கடாயை வைத்து 50 கிராம் பட்டரை போட்டு பரப்பி விடவும்.
  5. பட்டர் உருகியதும், 2 ஸ்பூன் சர்க்கரையை போட்டு கலந்து விடவும்.
  6. இதனுடன் நீளமாக நறுக்கிய 3 ஆப்பிளை போட்டு கலந்து விடவும்.
  7. இதனுடன் ஒரு ஸ்பூன் பட்டை தூளை போட்டு கலந்து விட்டு தயார் செய்து வைத்துள்ள முட்டை, தயிர்,மைதாமாவு கலந்த கலவையை ஊற்றி பரப்பி விட்டு கடாயை மூடி போட்டு மூடி 10 நிமிடம்  நன்றாக வேக வைக்கவும்.
  8. 10 நிமிடம் கழித்து கடாயின் மூடியை திறந்து ஆப்பிள் பான் கேக்கை திருப்பி போட்டு 5 நிமிடம்  நன்றாக வேக வைக்கவும்.
  9. 5 நிமிடம் கழித்து கடாயின் மூடியை திறந்து ஆப்பிள் பான் கேக்கை அடுப்பில் இருந்து  இறக்கி தேவையான அளவு வெட்டி பரிமாறவும்.
  10. சுவையான ஆப்பிள் பான் கேக் ரெடி.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்