முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

உருளைக்கிழங்கு கேரட் ஆம்லெட்

Cooking time in minutes: 
20
Ingredients: 

உருளைக்கிழங்கு கேரட் ஆம்லெட் செய்யத் தேவையான பொருட்கள்.

  1. முட்டை - 6.
  2. உருளைக்கிழங்கு - 3.
  3. கேரட் - 6.
  4. பொடியாக நறுக்கிய வெங்காயத்தாள் 2.
  5. மிளகு தூள் -1 ஸ்பூன்.
  6. துளசி இலை -1/2 ஸ்பூன்.
  7. நெய் - 2 ஸ்பூன்.
  8. எண்ணெய் - 2 ஸ்பூன்.
  9. கொத்தமல்லி - ஒரு கப்.
  10. உப்பு - தேவையான அளவு.
Method: 

செய்முறை ;--

  1. ஒரு தட்டில் 6 கேரட்டை எடுத்து துருவி வைத்துக்கொள்ளவும்.
  2. அடுப்பில் கடாயை வைத்து 2 ஸ்பூன் நெய் ஊற்றவும்.
  3. நெய் சூடானவுடன் துருவி வைத்துள்ள கேரட்டைபோட்டு நன்றாக வதக்கி வைத்துக்கொள்ளவும்
  4. இரண்டு பாத்திரத்தை எடுத்து கொள்ளவும்.
  5. ஒரு பாத்திரத்தில் முட்டையை உடைத்து வெள்ளை கருவை மட்டும் ஊற்றி கொள்ளவும்,இன்னொரு பாத்திரத்தில் முட்டையின் மஞ்சள் கருவை மட்டும் ஊற்றவும்,இப்படி 6 முட்டைகளையும் 2 பாத்திரத்தில் வைத்துக்கொள்ளவும்.
  6. முட்டையின் மஞ்சள் கரு உள்ள பாத்திரத்தில் தேவையான அளவு உப்பு,மிளகு தூள் ஒரு ஸ்பூன், காய வைக்கப்பட்ட துளசி இலை 1/2 ஸ்பூன்,பொடியாக நறுக்கிய 2 வெங்காயத்தாள்  போட்டு நன்றாக கலந்து வைத்துக்கொள்ளவும்.
  7. ஒரு தட்டில் 3 உருளைக்கிழங்கை எடுத்து அதை தோல் சீவி சிப்ஸ் போல் சிறிது தடிமனாக நறுக்கி வைத்துக்கொள்ளவும்.
  8. அடுப்பில் கடாய் வைத்து 2  ஸ்பூன் எண்ணெய்யை ஊற்றவும்.
  9. எண்ணெய் சூடானவுடன் நறுக்கி வைத்துள்ள உருளைக்கிழங்கு ஒன்றை நடுவில் வைத்து அதை சுற்றி ஒவ்வொன்றாக தோசை போல் உருளைக்கிழங்கை வைத்து நன்றாக வேக வைக்கவும்.
  10. கலந்து வைத்துள்ள முட்டையின் மஞ்சள் கரு கலவையை உருளைக்கிழங்கின் மேல் ஊற்றி பரப்பி விட்டு கடாயை மூடி போட்டு மூடி நன்றாக வேக வைக்கவும்.
  11. கலந்து வைத்துள்ள முட்டையின் வெள்ளை கரு உள்ள பாத்திரத்திலும் தேவையான அளவு உப்பு போட்டு நுரை வரும் வரை நன்றாக கலந்து வதக்கி வைத்துள்ள கேரட் மற்றும் ஒரு கப் கொத்தமல்லியை போட்டு நன்றாக கலந்து கடாயில் இந்த கலவையையும் ஊற்றி பரப்பி விட்டு கடாயை மூடி போட்டு மூடி நன்றாக வேக வைக்கவும்.
  12. சிறிது நேரம் கழித்து அடுப்பில் இருந்து இறக்கி,ஆம்லெட்டை ஒரு தட்டில் எடுத்துக்கொண்டு தேவையான  அளவு வெட்டி பரிமாறவும்.
  13. சுவையான உருளைக்கிழங்கு கேரட் ஆம்லெட் ரெடி.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 2 hours ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 2 hours ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 6 months 4 hours ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 4 hours ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 8 months 2 hours ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 8 months 2 hours ago