முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

காலிப்ளவ்ர் மன்சூரியன்

Cooking time in minutes: 
30
Ingredients: 

காலிப்ளவ்ர் மன்சூரியன் செய்யத் தேவையான பொருள்கள்;

 

பொடியா நறுக்கிய காலிப்ளவ்ர் -1.

மைதாமாவு  -  3 ஸ்பூன்.

கான்பிளவர் மாவு  -  3 ஸ்பூன்.

அரிசிமாவு  - 2 ஸ்பூன்.

இஞ்சி-பூண்டு விழுது  - 1/2 ஸ்பூன்.

மிளகாய்தூள் - 1 ஸ்பூன்.

சோயா சாய் -  1 ஸ்பூன்.

மஞ்சள்தூள்  - 1/4 டீஸ்பூன்.

எண்ணெய் - 1/2 லிட்டர்.

பூண்டு  - 4  பல்.

இஞ்சி -  1  துண்டு.

நறுக்கிய பெரிய வெங்காயம் -  2.

முந்திரிபருப்பு  - 10.   

ரெட் சில்லி சாஸ் - 1  டீஸ்பூன்.

தக்காளி சாஸ்  - 1 டீஸ்பூன்.

மிளகாய்தூள் - 1 டீஸ்பூன்

கிரின் சில்லிசாஸ்  -  1 டீஸ்பூன்

மஞ்சள்தூள்  -  1/4 டீஸ்பூன்.

சோயா சாஸ்  - 2 டேபிள் ஸ்பூன்.

பொடியா நறுக்கிய குடைமிளகாய்  -  1.

உப்பு - தேவையான அளவு.

Method: 

செய்முறை ;

அடுப்புல் கடாய் வைத்து சிறிதளவு தண்ணீர் மற்றும்  தேவையான அளவு உப்பு போட்டு காலிபிளவரை துண்டு துண்டாக வெட்டி போட்டு வேக வைத்து வடிகட்டி எடுத்து வைத்துக்கொள்ளவும்.

ஒரு பாத்திரத்தில் 3 ஸ்பூன் மைதாமாவு,3 ஸ்பூன் கான்பிளவர் மாவு,2 ஸ்பூன் அரிசிமாவு,இஞ்சி பூண்டு விழுது 1/2 ஸ்பூன், ஒரு ஸ்பூன் மிளகாய்தூள், ஒரு ஸ்பூன் சோயா சாய் தேவையான அளவு உப்பு,

1/4 டீஸ்பூன் மஞ்சள்தூள்,3 ஸ்பூன் எண்ணெய், பொடியா நறுக்கிய பூண்டு பல் 4,பொடியா நறுக்கிய இஞ்சி ஒரு துண்டு,பொடியா நறுக்கிய பெரிய வெங்காயம் 1,வேக வைத்த காலிபிளவரை போட்டு, தேவையான அளவு தண்ணீர் ஊற்றி கலந்து விட்டு 1/2 மணி நேரம் ஊற வைக்கவும்.

அடுப்பில் கடாய் வைத்து 500 மில்லி ரிபைன்ட்  ஆயில் ஊற்றவும்.

எண்ணெய் சூடானவுடன் மசாலா கலந்து ஊற வைத்த காலிபிளவரை எடுத்து ஒவ்வொன்றாக எண்ணெயில் போட்டு வறுக்கவும்.

திருப்பி போட்டு  வறுக்கவும்.  பொரிந்து விட்டது எடுத்து விடலாம்.

2 நிமிடம் கழித்து மீண்டும்  எண்ணெயில போட்டு நன்றாக வறுத்து  எடுத்துவைத்துக்கொள்ளவும்.

அடுப்பில் கடாய் வைத்து 3 ஸ்பூன்  ரிபைன்ட்  ஆயில் ஊற்றவும்.

எண்ணெய் சூடானவுடன், பொடியா நறுக்கிய பூண்டு 4 பல்,பொடியா நறுக்கிய இஞ்சி ஒரு துண்டு,பொடியா நறுக்கிய ஒரு பெரிய வெங்காயம் போட்டு பொன்னிறமாக  வரும் வரை நன்றாக வதக்கவும். 

இதனுடன் தூள் செய்த  முந்திரிபருப்பு  10, ஒரு டீஸ்பூன் ரெட் சில்லி சாஸ், ஒரு டீஸ்பூன் தக்காளி சாஸ், ஒரு டீஸ்பூன் மிளகாய்தூள், ஒரு டீஸ்பூன் கிரின் சில்லிசாஸ்,1/4 டீஸ்பூன் மஞ்சள்தூள்,2 டேபிள் ஸ்பூன் சோயா சாஸ்,பொடியா நறுக்கிய ஒரு குடைமிளகாய், நறுக்கிய ஒரு பெரியவெங்காயம்  தேவையான அளவு உப்பு மற்றும் எண்ணெயில பொறித்த காலிப்ளவ்ர் ஆகியவற்றை போட்டு நன்றாக வதக்கவும்.

இப்போது அடுப்பில் இருந்து இறக்கி விடலாம்.

சுவையான காலிப்ளவ்ர் மன்சூரியன் ரெடி.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 3 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 4 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 6 months 4 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 4 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 8 months 4 days ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 8 months 4 days ago