முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

நெத்திலி மீன் கருவாட்டு குழம்பு 

Cooking time in minutes: 
30
Ingredients: 

நெத்திலி மீன் கருவாட்டுக் குழம்பு செய்யத் தேவையான பொருள்கள்;

  1. நெத்திலி மீன் - 100 கிராம்.
  2. தேங்காய் - சில் 2.
  3. சீரகம் - 1 டேபிள் ஸ்பூன். 
  4. சோம்பு - 1 டேபிள் ஸ்பூன்.
  5. நல்லெண்ணெய் - 3 ஸ்பூன்.
  6. வெந்தயம் - 1/2 டீஸ்பூன். 
  7. சோம்பு – 1.1/2 டீஸ்பூன். 
  8. கடுகு - 1/2 டீஸ்பூன். 
  9. பச்சை மிளகாய் - 2.
  10. கருவேபிள்ளை - 20 இலைகள்.
  11. மல்லி இலை - சிறிதளவு.
  12. பொடியாக நறுக்கிய வெங்காயம் - 100 கிராம். 
  13. பூண்டு - 10 பல்.
  14. பொடியாக நறுக்கிய தக்காளி - 1.1/2.
  15. மிளகாய்தூள் - 1 டேபில் ஸ்பூன்.
  16. மல்லிதூள் - 2 டேபில் ஸ்பூன்.
  17. மஞ்சள்தூள் - 1/4 ஸ்பூன்.
  18. புளி - நெல்லிக்காய் அளவு.
  19. உப்பு - தேவையான அளவு.
Method: 

செய்முறை ;

  1. 100 கிராம் நெத்திலி மீனை எடுத்து சுத்தம் செய்து ஒரு பாத்திரத்தில் எடுத்து வைத்துக்கொள்ளவும்.
  2. ஒரு பாத்திரத்தில் நெல்லிக்காய் அளவு புளியை போட்டு  தேவையான அளவு தண்ணீர் ஊற்றி புளிக் கரைசலை தயார் செய்து வைத்துக் கொள்ளவும்.
  3. மிக்சிஜாரில்  தேங்காய்  சில் 2, ஒரு டேபிள் ஸ்பூன் சீரகம், ஒரு டேபிள் ஸ்பூன் சோம்பு போட்டு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி நன்றாக  அரைத்துக்கொள்ளவும்.
  4. அடுப்பில் கடாய் வைத்து 3 ஸ்பூன் நல்லெண்ணெய்  ஊற்றவும்,
  5. எண்ணெய் சூடானவுடன் 1/2 டீஸ்பூன் வெந்தையம்,1/2 டீஸ்பூன் சோம்பு,1/2 டீஸ்பூன் கடுகு,பச்சை மிளகாய் 2, கருவேபிள்ளை இலைகள் 20, பொடியாக நறுக்கிய  வெங்காயம் 100 கிராம்,பூண்டு 10 பல்  போட்டு நன்றாக வதக்கவும்.
  6. இதனுடன் பொடியாக நறுக்கிய 1. 1/2 தக்காளி, ஒரு டேபில் ஸ்பூன் மிளகாய்தூள் 2 டேபில் ஸ்பூன் மல்லிதூள்,1/4 டீஸ்பூன் மஞ்சள்தூள் மற்றும் சுத்தம் செய்த நெத்திலி மீன் 100 கிராம் போட்டு கிளறி விடவும்,.
  7. இதனுடன்  2  டம்ளர் அளவு தண்ணீர் ஊற்றி சிறிதளவு மல்லி இலை
  8. மற்றும் தேவையான அளவு உப்பு போட்டு கரைத்து வைத்துள்ள புளி கரைசலையும் ஊற்றி கலந்து விட்டு 10 நிமிடம் குழம்பை கொதிக்க வைக்கவும். ,
  9. இப்போது அடுப்பில் இருந்து இறக்கி விடலாம்.
  10. சுவையான நெத்திலி மீன் கருவாட்டு குழம்பு ரெடி.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 8 hours ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 8 hours ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 6 months 10 hours ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 10 hours ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 8 months 8 hours ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 8 months 8 hours ago