முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

நெல்லிக்காய் பாயசம்.

Cooking time in minutes: 
30
Ingredients: 

நெல்லிக்காய் பாயசம் செய்யத் தேவையான பொருள்கள்;

  1. பொடியாக நறுக்கிய நெல்லிக்காய் - 1 கப். 
  2. சர்க்கரை – 1 கப்.  
  3. துளசி - 20 இலை.
  4. தேங்காய் - 1 கப்.
  5. நெய் - 2 ஸ்பூன்.
  6. முந்திரி பருப்பு - 20.
  7. திராட்சை - 20.
  8. மில்க் மெயிட் - 200 கிராம். 
  9. குங்குமப்பூ - 20 கிராம். 
  10. உப்பு - 1 சிட்டிகை.
Method: 

செய்முறை ;

  1. அடுப்பில் கடாய் வைத்து பொடியாக நறுக்கிய ஒருகப் நெல்லிக்காயை போட்டு 2  கப் தண்ணீர்  மற்றும் ஒரு ஸ்பூன் சர்க்கரையை போட்டு கலந்து விட்டு  நன்றாக வேக வைத்து நெல்லிக்காயை வடிகட்டி தனியாக எடுத்து வைத்துக்கொள்ளவும்.
  2. மிக்சி ஜாரில் 1 கப் தேங்காய்யை போட்டு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி நன்றாக அரைத்து வடிகட்டி தேங்காய்பாலை தயார் செய்து அதை ஒரு பாத்திரத்தில் எடுத்து வைத்துக்கொள்ளவும்.
  3. அடுப்பில் கடாய் வைத்து 20 துளசி இலையை போட்டு வதக்கி வைத்துக்கொள்ளவும்.
  4. அடுப்பில் கிடாய் வைத்து 2  ஸ்பூன் நெய் ஊற்றவும்,நெய் சூடானவுடன் 20 முந்திரி பருப்பு  மற்றும் 20 திராட்சையை போட்டு பொன்னிறமாக  வறுத்து   ஒரு தட்டில் எடுத்து வைத்துக்கொள்ளவும்.
  5. அடுப்பில் கிடாய் வைத்து 2 டம்ளர் தண்ணீர் ஊற்றி 3/4 கப் சர்க்கரை மற்றும் ஒரு சிட்டிகை உப்பு போட்டு கலந்து விட்டு 5 நிமிடம் கொதிக்க வைத்து சர்க்கரை பாகை தயார் செயது வேக வைத்த நெல்லிக்காய் போட்டு கிளறி விட்டு 10 நிமிடம் முடி வைக்கவும்.
  6. முடியை திறந்து இதில் 200 கிராம் மில்க் மெயிட் ,வதக்கிய துளசி 20  மற்றும் 20 கிராம் குங்குமப்பூவை  போட்டு கலந்து விடவும்.
  7. இதனுடன் தயார் செய்து வைத்துள்ள தேங்காய் பால், வறுத்த முந்திரி பருப்பு, திராட்சை,  மற்றும் ஏலக்காய் பொடியை போட்டு கிளறி விடவும்.
  8. இப்போது அடுப்பில் இருந்து இறக்கி விடலாம்.
  9. சுவையான நெல்லிக்காய் பாயசம் ரெடி.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 3 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 4 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 6 months 4 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 4 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 8 months 4 days ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 8 months 4 days ago