முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

பிளம் கேக்

Cooking time in minutes: 
50
Ingredients: 

பிளம் கேக் (5 கிலோ) செய்யத் தேவையான பொருள்கள்;

  1. சர்க்கரை - 1.1/2 கிலோ.
  2. வெண்ணை - 1.1/2 கிலோ.
  3. முட்டை - 30.
  4. மைதா  - 1.1/2 கிலோ.
  5. டிரைபுருட்ஸ்  - 3 கிலோ (பாதம்,பிஸ்தா,முந்திரி,வால்நட்,ஸ்டராபெர்ரி,பிளாக்பெர்ரி,ப்ளுபெர்ரி)
  6. தேன் - 300 மில்லி.
  7. கொக்கோ தூள் - 70 கிராம்.
  8. பேக்கிங் பவுடர் - 30 கிராம்.
  9. கரம் மசாலா - 20 கிராம்.
  10. மில்க் மெய்டு - 300 மில்லி.
  11. நெய் -  300 மில்லி.
  12. கருப்பு சிரப் - 400 மில்லி.
  13. மிக்ஸ்ட் புரூட் ஜாம் - 300.
  14. வெண்ணிலா எசன்ஸ் – 10 மில்லி.
  15. பாதம் பருப்பு (தோல் உரித்து,பிரித்தது) - 100 கிராம்.

Method: 

செய்முறை ;

  1. கேக் மாவுகளை கலக்கும் பிளண்டர் இயந்திரத்தில் 1.1/2 கிலோ வெண்ணையை போட்டு 10 நிமிடம் ஓட விடவும்.
  2. சர்க்கரை 1.1/2 கிலோ போட்டு 10 நிமிடம் ஓட விடவும்.
  3. ஒரு பாத்திரத்தில்  30 முட்டைகளை உடைத்து வைத்து கொண்டு முட்டை வாசனை வராமல் இருக்க அதில் 10 மில்லி வெண்ணிலா எசன்ஸ் ஊற்றி கலந்து விடவும்.
  4. முதலில் 15 முட்டைகளை கேக் மாவுகளை  கலக்கும் இயந்திரத்தில் ஊற்றி ஓட விட்டு 2 நிமிடம் கழித்து  மீதியுள்ள 15 முட்டைகளையும் ஊற்றி,3 நிமிடம் குறைவான வேகத்தில் இயந்திரத்தை ஓட விடவும்.
  5. ஒரு பாத்திரத்தில் மைதா 1.1/2 கிலோ, பேக்கிங் பவுடர் 30 கிராம்,கொக்கோ தூள் 70 கிராம், போட்டு நன்றாக கலந்து விடவும்.
  6. இந்த கலவையை கேக் மாவுகளை  கலக்கும் இயந்திரத்தில் போட்டு,5 நிமிடம் இயந்திரத்தை ஓட விடவும்.
  7. ஓடும் இயந்திரத்தில் கட்டியாக மாவு கலவை தேங்கி இருந்தால் இயந்திரத்தை நிறுத்தி கையால் மாவு கட்டிகளை கரைத்து விடவும்.
  8. ஒரு பாத்திரத்தில் தேன் 300 மில்லி,மில்க் மெய்டு 300 மில்லி, நெய் 300 மில்லி,மிக்ஸ்ட்,கருப்பு சிரப் 400 மில்லி புரூட் ஜாம் 300 கிராம்,கரம் மசாலா 20 கிராம் போட்டு நன்றாக கலந்து விடவும்.
  9. இந்த கலவையையும் கேக் மாவுகளை  கலக்கும் இயந்திரத்தில் போட்டு,5 நிமிடம் இயந்திரத்தை ஓட விடவும்.
  10. ஊற வைத்த பாதம்,பிஸ்தா,முந்திரி,வால்நட்,ஸ்டராபெர்ரி,பிளாக்பெர்ரி,ப்ளுபெர்ரி போன்ற பழங்கள் 3 கிலோவை இயந்திரத்தில் போட்டு இயந்திரத்தை 5 நிமிடம் குறைவான வேகத்தில் ஓட விடவும்.
  11. கேக் மாவு நன்றாக தயாராகி விட்டது,ஒரு கிலோ என்ற அளவில் 5 பாத்திரத்தில் வைத்து குக்கர்,  மைக்ரோ ஓவன் அல்லது கேக் அவனில் வைத்து 45 நிமிடம் சூடு படுத்தி பின் வெளியே எடுத்து பரிமாறவும். 
  12. சுவையான பிளம் கேக் ரெடி.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 14 hours ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 14 hours ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 6 months 16 hours ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 16 hours ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 8 months 14 hours ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 8 months 14 hours ago