முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

மட்டன் சாப்ஸ்

Cooking time in minutes: 
30
Ingredients: 

 

மட்டன் சாப்ஸ் செய்யத் தேவையான பொருள்கள்; 

  1. மட்டன் – 1/2 கிலோ.
  2. பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம் - 200 கிராம்.
  3. பொடியாக நறுக்கிய தக்காளி – 2.
  4. முந்திரி பருப்பு - 5.
  5. இஞ்சி – 25 கிராம்.
  6. பூண்டு – 25 கிராம்.
  7. நல்லெண்னை – 5 ஸ்பூன்.
  8. தேங்காய் - 1.
  9. சோம்பு- 1 டேபிள் ஸ்பூன்.
  10. சீரகம் – 1/2 டேபிள் ஸ்பூன்.
  11. கல்பாசி - 2.
  12. அன்னாசிப்பூ - 1.
  13. பட்டை 10 கிராம்.
  14. கிராம்பு - 3.
  15. கசகசாய் - 1ஸ்பூன்.
  16. கறிவேப்பிலை - சிறிதளவு.
  17. காஸ்மீரி மிளகாய் தூள் - 3 டேபிள் ஸ்பூன்.
  18. இஞ்சி பூண்டு விழுது  -  3 ஸ்பூன்.
  19. மஞ்சள் தூள் - 1/2 டேபிள் ஸ்பூன்.
  20. மல்லி தூள் - 3 டேபிள் ஸ்பூன்.
  21. உப்பு -  தேவையான அளவு .

 

 

Method: 

 

செய்முறை ; 

  1. பொடியாக நறுக்கிய பூண்டு 25 கிராம் மற்றும் பொடியாக நறுக்கிய இஞ்சி 25 கிராம் எடுத்து மிக்சியில் போட்டு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி நன்றாக அரைத்துக்கொள்ளவும்.
  2. சோம்பு ஒரு டேபிள் ஸ்பூன்,சீரகம் 1/2 டேபிள் ஸ்பூன்,கல்பாசி 2, அன்னாசிப்பூ1,பட்டை 10 கிராம்,கிராம்பு 3, தேங்காய் 2 சில்,கசகசாய் ஒரு ஸ்பூன் மற்றும் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி நன்றாக அரைத்துக்கொள்ளவும்.
  3. 1/2 மூடி தேங்காய்யை எடுத்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி மிக்சியில் நன்றாக அரைத்து வடிகட்டி தேங்காய் பாலை தயார் செய்து  வைத்துக்கொள்ளவும்.
  4. அடுப்பில் கிடாய் வைத்து 4 டேபிள் ஸ்பூன் நல்லெண்ணெய் ஊற்றவும்.
  5. எண்ணெய் சூடானவுடன் கருவேப்பிலை சிறிதளவு போட்டு வதக்கவும்.
  6. இஞ்சி பூண்டு விழுது  3 ஸ்பூன் மற்றும் பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம் 200 கிராம் போட்டு பொன்னிறமாக வதக்கவும்.
  7. இதனுடன் முந்திரி பருப்பு 5,பொடியாக நறுக்கிய தக்காளி 2, சுத்தம் செய்த மட்டன் 1/2 கிலோ போட்டு நன்றாக  வதக்கவும்.
  8. காஸ்மீரி மிளகாய் தூள் 3 டேபிள் ஸ்பூன்,மஞ்சள் தூள் 1/2 டேபிள் ஸ்பூன்,மல்லி தூள் 3 டேபிள் ஸ்பூன், மற்றும் தேவையான அளவு உப்புபோட்டு நன்றாக கிளறிவிடவும்.
  9. மிக்சியில் அரைத்து வைத்துள்ள மசாலா கலவை  மற்றும் இஞ்சி பூண்டு விழுதை ஊற்றி கலந்து விடவும்.
  10. இதனுடன் மிக்சியில் அரைத்து வைத்துள்ள தேங்காய் பால் மற்றும் ஒரு டேபிள் ஸ்பூன் நல்லெண்ணெய் ஊற்றி கலந்து விட்டு 5 விசில் வரும் வரை நன்றாக வேக வைத்து இறக்கவும்.
  11. சுவையான மட்டன் சாப்ஸ் ரெடி.  

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 1 day ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 1 day ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 6 months 1 day ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 1 day ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 8 months 1 day ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 8 months 1 day ago