எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மட்டன் சுக்கா
மட்டன் சுக்கா செய்யத் தேவையான பொருள்கள்;
- மட்டன் -1/4 கிலோ.
- மிளகாய் தூள் - 1 டேபிள் ஸ்பூன்.
- தனியா தூள் - 4 டேபிள் ஸ்பூன்.
- கறி மசால் தூள் - 1 டேபிள் ஸ்பூன்.
- சின்ன வெங்காயம் – 200 கிராம்
- பூண்டு – 6.
- தக்காளி -1
- இஞ்சி – சிறிதளவு.
- புதினா,கருவேப்பிலை,கொத்தமல்லி - சிறிதளவு.
- பச்சை மிளகாய் – 1
- சீரகம் - 50 கிராம்.
- மிளகு - 50 கிராம்.
- தேங்காய் எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்.
- நல்லெண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்.
- மஞ்சள் 2 சிட்டிகை.
- உப்பு - தேவையான அளவு .
செய்முறை ;
- அடுப்பில் குக்கர் வைத்து சுத்தம் செய்த மட்டன் 1/4 கிலோ போட்டு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி 3 விசில் வரும் வரை நன்றாக வேக வைத்துக் கொள்ளவும்.
- 50 கிராம் சீரகத்தை எடுத்து மிக்சியில் போட்டு பொடியாக அரைத்துக்கொள்ளவும்.
- 50 கிராம் மிளகையும் பொடியாக அரைத்துக்கொள்ளவும்.
- சின்ன வெங்காயம் 100 கிராம் எடுத்து மிக்சியில் போட்டு பொடியாக அரைத்துக்கொள்ளவும்.
- சிறிதளவு இஞ்சி மற்றும் பூண்டு 3 பல் இவை இரண்டையும் மிக்சியில் போட்டு நன்றாக அரைத்துக்கொள்ளவும்.
- சிறிதளவு புதினா மற்றும் மல்லியையும் மிக்சியில் போட்டு அரைத்துக்கொள்ளவும்.
- அடுப்பில் கிடாய் வைத்து 2 டேபிள் ஸ்பூன் தேங்காய் எண்ணெய் மற்றும் 2 டேபிள் ஸ்பூன் நல்லெண்ணெய் ஊற்றவும்.
- எண்ணெய் சூடானவுடன் பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம் 200 கிராம்,பச்சை மிளகாய் ஓன்று, மற்றும் கருவேப்பிலை சிறிதளவு போட்டு வதக்கவும்.
- சீரகத்தூள் 1 ஸ்பூன், மிளகுத்தூள் 1 ஸ்பூன் போட்டு வதக்கவும்.
- பொடியாக நறுக்கிய தக்காளி ஒன்றையும் அரைத்து வைத்த இஞ்சி பூண்டு மற்றும் 100 கிராம் சின்னவெங்காய விழுதையும் போட்டு பச்சை வாசனை போகும் வரை நன்றாக வதக்கவும்.
- கறி மசால் தூள் 1 டேபிள் ஸ்பூன்,மிளகாய் தூள் 1 டேபிள் ஸ்பூன்,தனியா தூள் 2 டேபிள் ஸ்பூன் போட்டு வதக்கவும்.
- இதனுடன் 1/4 கிலோ மட்டன் போட்டு நன்றாக வதக்கவும்.
- தேவையான அளவு உப்பு போட்டு ஒரு டம்ளர் தண்ணீர் ஊற்றி கலந்து விட வேண்டும்.
- அரைத்து வைத்த புதினா மற்றும் மல்லி விழுதை போட்டு 5 நிமிடம் மூடி வைத்து வேக விட வேண்டும்.
- 5 நிமிடம் கழித்து பொடியாக நறுக்கிய சிறிதளவு மல்லியை தூவி இறக்கி விடவும்.
- சுவையான மட்டன் சுக்கா ரெடி.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
அரசியல்
இந்தியா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்2 months 1 day ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்2 months 6 days ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.2 months 3 weeks ago |
-
கோலி சிக்சர்: வீடியோ வைரல்
24 Nov 2024இந்தியா - ஆஸ்திரேலியா இடையிலான பார்டர் - கவாஸ்கர் கோப்பை தொடரின் முதல் டெஸ்ட் போட்டி பெர்த் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.
-
அதிக முறை 150 ரன்கள் எடுத்து சச்சின் சாதனையை சமன் செய்தார் ஜெய்ஸ்வால்
24 Nov 2024பெர்த்:
-
5000 ரன்கள் மற்றும் 100 விக்கெட்டுகள்: டி20 கிரிக்கெட் போட்டியில் ஹர்திக் பாண்ட்யா சாதனை
24 Nov 2024இந்தூர்: 5000 ரன்கள் மற்றும் 100 விக்கெட்டுகளை டி20 கிரிக்கெட் போட்டிகளில் முதல் இந்திய வீரராக மாபெரும் ஹர்திக் பாண்ட்யா சாதனை படைத்துள்ளார்.
-
ஐ.பி.எல். வரலாற்றில் முதல் முறை: ரூ.27 கோடிக்கு ரிஷப் பண்ட் ஏலம் ஷ்ரேயாஸ் அய்யர் ரூ .26.75 கோடிக்கு பஞ்சாப் எடுத்தது
24 Nov 2024துபாய்: ஐபிஎல் வரலாற்றில் அதிக தொகையாக ரூ.27 கோடிக்கு ரிஷப் பண்டை ஏலத்தில் எடுத்தது லக்னோ அணி.ரூ .20.75 கோடிக்கு லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் இறுதியாக ஏலம் எடுத்த நிலையில், ஆர்டிஎம் கார்டை பயன்படுத்தியத
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 25-11-2024.
25 Nov 2024 -
நிறங்கள் மூன்று விமர்சனம்
25 Nov 2024துருவங்கள் பதினாறு படம் மூலம் திரையுலகை திரும்பிப் பார்க்க வைத்த இயக்குநர் கார்த்திக் நரேன் அதன் பிறகு அவர் இயக்கத்தில் வெளியான மாறன் மற்றும் மாபியா சாப்டர் ஒன் ஆகிய பட
-
லைன்மேன் விமர்சனம்
25 Nov 2024மின்சாரம் மற்றும் பொறியியல் கண்டுபிடிப்புகளை கையாளும் சுப்பையா மற்றும் அவரது மகன் செந்தில் ஆகியோரின் வாழ்க்கையை பற்றி பேசுகிறது இப்படம்.,
-
ஜீப்ரா விமர்சனம்
25 Nov 2024தெலுங்கில் தயாரிக்கப்பட்டு பல்வேறு மொழிகளில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியாகி இருக்கும் படம் ஜீப்ரா.
-
தங்கம் விலை குறைவு
25 Nov 2024