முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

மணத்தக்காளி கீரை சாம்பார்

Cooking time in minutes: 
20
Ingredients: 

மணத்தக்காளி கீரை சாம்பார் செய்யத் தேவையான பொருள்கள்;

  1. மணத்தக்காளி கீரை -  1 கட்டு.
  2. துவரம் பருப்பு - 50 கிராம்.
  3. பாசி பருப்பு -  50 கிராம்.
  4. தேங்காய் சில் - 3.
  5. எண்ணெய் 3 ஸ்பூன்.
  6. கடுகு,உளுந்து 1/2 டீஸ்பூன்.
  7. சீரகம் - 1/4 டீஸ்பூன்.
  8. கடலை பருப்பு - ஒரு டீஸ்பூன்.
  9. பொடியா நறுக்கிய வெங்காயம் -  1.
  10. பச்சை மிளகாய்  - 2.
  11. பொடியா நறுக்கிய தக்காளி - 1.
  12. நெய் - 2 டீஸ்பூன்.
  13. மஞ்சள்தூள் - 1/4 டீஸ்பூன்.
  14. மிளகாய்தூள் - 1/2 டீஸ்பூன்.
  15. மல்லித்தூள் -  1/4 டீஸ்பூன்.
  16. சோம்பு தூள் - 1/4 டீஸ்பூன்.
  17. கசகசா - 1/4 டீஸ்பூன்.
  18. கறிவேப்பிலை  - 10.
  19. உப்பு  - தேவையான அளவு.
Method: 

செய்முறை ;

  1. அடுப்பில் குக்கரை வைத்து சுத்தம் செய்த 50 கிராம் துவரம் பருப்பு, 50 கிராம் பாசி பருப்புயை  போட்டு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி குக்கரை மூடி  3 விசில் வரும்வரை வேக விட்டு இறக்கவும்.
  2. ஒரு மிஸ்சி ஜாரில் 3 தேங்காய் சில்லை போட்டு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி நன்றாக அரைத்து எடுத்து வைத்துக்கொள்ளவும்.
  3. அடுப்பில் கடாய் வைத்து 3 ஸ்பூன் எண்ணெய்யை ஊற்றவும். எண்ணெய் சூடானவுடன்  1/2 டீஸ்பூன் கடுகு, உளுந்து,1/4 டீஸ்பூன் சீரகம், ஒரு டீஸ்பூன் கடலை பருப்பை  போட்டு வதக்கவும்,இதனுடன் பொடியாக நறுக்கிய ஒரு பெரிய  வெங்காயம் மற்றும் 2 பச்சை மிளகாய்யை  போட்டு நன்றாக வதக்கவும்.
  4. பொடியா நறுக்கிய ஒரு தக்காளி,சுத்தம் செய்த ஒரு கட்டு மணத்தக்காளி கீரையை போட்டு,ஒரு டீஸ்பூன் நெய் ஊற்றி நன்றாக வதக்கவும்.
  5. இதனுடன் 1/4 டீஸ்பூன் மஞ்சள்தூள்,1/2 டீஸ்பூன் மிளகாய்தூள் 1/4 டீஸ்பூன் மல்லித்தூள் 1/4 டீஸ்பூன் சோம்பு தூள், மற்றும்  தேவையான அளவு உப்பு போட்டு  வதக்கவும்.
  6. இதனுடன் 1/4 டீஸ்பூன் கசகசா போட்டு ஒரு கப் தண்ணிர் ஊற்றி குக்கரை மூடி10 நிமிடம்  வேக வைக்கவும்.
  7. 10 நிமிடம் ஆகி விட்டது குக்கர் முடியை திறந்து மிக்சியில அரைத்து வைத்துள்ள தேங்காய் விழுதை போட்டு கலந்து விடவும்.
  8. இதனுடன் குக்கரில் வேக வைத்த பருப்புயை  போட்டு,தேவையான அளவு உப்பு போட்டு 5 நிமிடம் சாம்பாரை கொதிக்க வைக்கவும்.
  9. 5 நிமிடம் ஆகி விட்டது குக்கர் முடியை திறந்து சிறிதளவு நெய் மற்றும்10 கறிவேப்பிலையை போட்டு கலந்து விடவும்.
  10. இப்போது அடுப்பில் இருந்து இறக்கவும்.
  11. சுவையான மணத்தக்காளி கீரை சாம்பார் ரெடி.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 5 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 7 months 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 7 months 3 weeks ago