முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

முட்டை பிங்கர்ஸ்

Cooking time in minutes: 
20
Ingredients: 

 

முட்டை பிங்கர்ஸ் செய்யத் தேவையான பொருட்கள்.

  1. முட்டை    19.
  2. ஈஸ்ட்  - 1/4 ஸ்பூன்.
  3. மிளகு தூள் - 1/4 ஸ்பூன்.
  4. மிளகாய் தூள்  - 1 ஸ்பூன்.
  5. மைதா மாவு - 1/2 கப்.
  6. கார்ன் பிளார் மாவு- 1/4 கப். 
  7. சில்லி பவுடர்  - 1 ஸ்பூன்.
  8. பிரட் கிரம்ஸ் - 200 கிராம்.
  9. மஞ்சள் தூள் - 1 ஸ்பூன்.
  10. எண்ணெய் - 1/2 லிட்டர்.
  11. உப்பு - தேவையான  அளவு.

 

Method: 

 

செய்முறை ;--

  1. ஒரு பாத்திரத்தில் 15 முட்டைகளை உடைத்து ஊற்றவும்.
  2. இதனுடன் 1/4 ஸ்பூன் ஈஸ்ட்,மிளகு தூள் 1/4 ஸ்பூன்,மிளகாய் தூள் ஒரு ஸ்பூன் மற்றும் தேவையான அளவு உப்பு போட்டு நன்றாக கலந்து வைத்துக்கொள்ளவும்.
  3. அடுப்பில் கடாய் வைத்து ஒரு ஸ்பூன் எண்ணெய்யை ஊற்றவும்.
  4. எண்ணெய்  சூடானவுடன் தயார் செய்து வைத்துள்ள  முட்டைக்கலவையை ஊற்றி மூடி போட்டு மூடி 10 நிமிடங்கள் வேக வைத்து முட்டையை ஒரு தட்டில் எடுத்துக்கொண்டு சிறிது நேரம் ஆறவைத்து முட்டையை நீளமாக வெட்டி வைத்துக்கொள்ளவும்.
  5. ஒரு தட்டில் மைதா மாவு 1/2 கப்,கார்ன் பிளார் மாவு 1/4 கப்,சில்லி பவுடர் 1 ஸ்பூன் மற்றும் தேவையான அளவு உப்பு போட்டு நன்றாக கலந்து வைத்துக்கொள்ளவும்.
  6. ஒரு தட்டில் பிரட் கிரம்ஸ் 200 கிராம்,மஞ்சள் தூள்  ஒரு ஸ்பூன் போட்டு நன்றாக கலந்து வைத்துக்கொள்ளவும்.
  7. ஒரு பாத்திரத்தில் 4 முட்டைகளை உடைத்து ஊற்றி  நன்றாக கலந்து வைத்துக்கொள்ளவும்.
  8. வேக வைத்த முட்டையை,கலக்கி வைத்த முட்டையில் முக்கி எடுத்து பின்னர் அதை மைதா மாவில் பிரட்டி எடுத்து மீண்டும் முட்டையில் முக்கி எடுத்து பின்னர் அதை பிரட் கிரம்ஸில்  பிரட்டி எடுத்து தயார் செய்து வைத்துக்கொள்ளவும்.
  9. இதே போல் மீதம் உள்ள முட்டைகளையும் தயார் செய்து ஒரு தட்டில் எடுத்து வைத்துக்கொள்ளவும்.
  10. அடுப்பில் கடாய்யை வைத்து 1/2 லிட்டர் எண்ணெய்யை ஊற்றவும்.
  11. எண்ணெய்  சூடானவுடன் தயார் செய்து வைத்துள்ள முட்டையை எண்ணெயில் போட்டு பொரிக்கவும்.
  12. திருப்பி திருப்பி போட்டு நன்றாக பொரிக்கவும்.
  13. இப்போது அடுப்பில் இருந்து இறக்கி விடலாம்.
  14. சுவையான முட்டை பிங்கர்ஸ் ரெடி.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 5 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 7 months 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 7 months 3 weeks ago