முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

வாழைக்காய் தேங்காய்பால் குழம்பு 

Cooking time in minutes: 
30
Ingredients: 

வாழைக்காய் தேங்காய்பால் குழம்பு செய்யத் தேவையான பொருள்கள்;

 

  1. வாழைக்காய் - 3.
  2. பச்சை மிளகாய் - 3
  3. பூண்டு - 3 பல்.
  4. புளி - (நெல்லிக்காய் அளவு)
  5. உளுந்தம் பருப்பு - 1 ஸ்பூன். 
  6. வெங்காயம் - 50 கிராம். 
  7. மல்லித்தூள் - 1 ஸ்பூன்.
  8. மஞ்சள் தூள் - 1/2 ஸ்பூன். 
  9. பொடியாக நறுக்கிய தேங்காய் - 1 கப்.
  10. கடுகு உளுந்து  - 1 ஸ்பூன். 
  11. எண்ணெய்  - தேவையான அளவு.
  12. கறிவேப்பிலை – சிறிதளவு. 
Method: 

செய்முறை ;

  1. ஒரு பாத்திரத்தில் நெல்லிக்காய் அளவு புளியை போட்டு  தேவையான அளவு தண்ணீர் ஊற்றி புளிக் கரைசலை தயார் செய்து வைத்துக் கொள்ளவும்.
  2. மிக்சி ஜாரில் ஒரு கப் தேங்காய்யை போட்டு ஒரு டம்ளர் தண்ணீர் ஊற்றி நன்றாக அரைத்து வடிகட்டி 2 கப் தேங்காய்பாலை தயார் செய்து வைத்துக்கொள்ளவும்.
  3. அடுப்பில் கடாய் வைத்து ஒரு ஸ்பூன் உளுந்தம்பருப்பை போட்டு நன்றாக வறுத்து சிறிது நேரம் ஆறிய பின்னர் அதை மிஸ்சி ஜாரில் போட்டு பொடியாக அரைத்துவைத்துக்கொள்ளவும்.
  4. அடுப்பில் கடாய் வைத்து 4 ஸ்பூன் எண்ணெய்யை ஊற்றவும், 
  5. எண்ணெய் சூடானவுடன் 1/2 ஸ்பூன் கடுகு மற்றும் உளுந்தம்பருப்பை போட்டு நன்றாக வதக்கவும்.
  6. இதனுடன் வெங்காயம் 50 கிராம், நீளமா நறுக்கிய பச்சை மிளகாய் 3,நீளமா நறுக்கிய பூண்டு 4 பல், ஒரு ஸ்பூன் மல்லித்தூள்,1/2 டீஸ்பூன் மஞ்சள்தூள் மற்றும் நறுக்கிய 3 வாழைக்காய்யை  போட்டு வதக்கவும்.
  7. கரைத்து வைத்துள்ள 1/2 கப் புளி கரைசலையும் ஊற்றி கலந்து விட்டு, உளுந்தம் பருப்பு பொடியை தூவி விட்டு ,தேவையான அளவு உப்பு போட்டு இதனுடன் தேங்காய்ப்பாலை ஊற்றி கலந்து விட்டு 3 நிமிடம் மூடி வைத்து மூடி வாழைக்காய்யை வேக விடவும்.
  8. இப்போது முடியை திறந்து பார்க்கலாம்,வாழைக்காய் நன்றாக வெந்துள்ளது,இதில் மேலும் ஒரு கப் தேங்காய்ப்பாலை ஊற்றி சிறிது நேரம் குழம்பை கொதிக்க வைக்கவும்.
  9. சிறிதளவு கறிவேப்பிலையை தூவி விடவும்.
  10. இப்போது அடுப்பில் இருந்து இறக்கி விடலாம்.
  11. சுவையான வாழைக்காய் தேங்காய்பால் குழம்பு ரெடி.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 8 hours ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 8 hours ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 6 months 10 hours ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 10 hours ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 8 months 8 hours ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 8 months 8 hours ago