முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

வாழைப்பூ கோலா உருண்டை

Cooking time in minutes: 
20
Ingredients: 

வாழைப்பூ கோலா உருண்டை செய்யத் தேவையான பொருள்கள்;

  1. வாழைப்பூ - 1.
  2. தேங்காய் சில் - 1.
  3. சோம்பு - ஓரு டீஸ்பூன்.
  4. ஊற வைத்த கடலைப்பருப்பு - 150 கிராம்.
  5. பொடியா நறுக்கிய பெரிய வெங்காயம் - 1.
  6. பொடியா நறுக்கிய கறிவேப்பிலை - சிறிதளவு.
  7. பொடியா நறுக்கிய மல்லி இலை  - சிறதளவு.
  8. பொடியா நறுக்கிய பூண்டு  4 பல்.
  9. மஞ்சள்தூள் - 1/4 டீஸ்பூன்.
  10. மிளகாய்தூள் - 2 டீஸ்பூன்.
  11. அரிசி மாவு - 2 டீஸ்பூன்.
  12. கான்பிளவர் மாவு - 2 டீஸ்பூன்.
  13. உப்பு - தேவையான அளவு.
  14. எண்ணெய் - 1/2 லிட்டர்
Method: 

 

  1. அடுப்பில் கடாய்  வைத்து  சுத்தம் செய்த ஒரு வாழைப்பூவை  போட்டு ஒரு டம்ளர் தண்ணீர் ஊற்றி கடாய்யை மூடி 5 நிமிடம் வேக வைத்து நன்றாக ஆரிய பின்னர் வாழைப்பூவை பொடியாக நறுக்கி வைத்துக்கொள்ளவும்.
  2. மிக்சி ஜாரில் ஒரு தேங்காய் சில்லை போட்டு நன்றாக அரைத்து வைத்துக்கொள்ளவும்.
  3. மிக்சி ஜாரில் ஓரு டீஸ்பூன் சோம்பு, 150 கிராம் ஊற வைத்த கடலைப்பருப்பை போட்டு நன்றாக அரைத்து வைத்துக்கொள்ளவும்.
  4. ஒரு பாத்திரத்துல வேகவைத்து நறுக்கி வைத்துள்ள வாழைப்பூ,மிக்சி ஜாரில் அரைத்த கடலை பருப்பு மாவு மற்றும் தேங்காய் விழுதை போடவும்.
  5. இதனுடன் பொடியாக நறுக்கிய ஓரு பெரிய வெங்காயம்,பொடியாக நறுக்கிய கறிவேப்பிலை சிறிதளவு,பொடியாக நறுக்கிய மல்லி இலை சிறதளவு,பொடியாக நறுக்கிய 4 பல் பூண்டு,1/4 டீஸ்பூன் மஞ்சள்தூள்,2 டீஸ்பூன் மிளகாய்தூள்,2 டீஸ்பூன் அரிசி மாவு,2 டீஸ்பூன் கான்பிளவர் மாவு மற்றும் தேவையான அளவு உப்பு போட்டு நன்றாக கலந்து விட்டு மாவை சிறு சிறு உருண்டையாக உருட்டி வைத்துக்கொள்ளவும்.
  6. அடுப்பில் கடாய் வைத்து ரிபைன்ட் ஆயில் 500 மில்லி ஊற்றவும். எண்ணெய் சூடானவுடன் தயார் செய்து வைத்துள்ள மாவு உருண்டைகளை  ஒவ்வொன்றாக எண்ணெயில் போட்டு குறைவான தணலில் வறுக்கவும். 
  7. திருப்பி போட்டு வறுக்கவும். நன்றாக பொரிந்து விட்டது எடுத்து விடலாம்.
  8. சுவையான வாழைப்பூ கோலா உருண்டை ரெடி.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 20 hours ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 20 hours ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 6 months 22 hours ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 22 hours ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 8 months 20 hours ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 8 months 20 hours ago