முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

வெஜிடபிள் மஞ்சூரியன்

Cooking time in minutes: 
30
Ingredients: 

வெஜிடபிள் மஞ்சூரியன் செய்யத்தேவையான பொருட்கள்.

  1. முட்டைகோஸ் - 1/4 கிலோ.
  2. பொடியாக நறுக்கிய வெங்காயத்தாள் - 100 கிராம்.
  3. பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் - 3.
  4. துருவிய கேரட் - 150 கிராம்.
  5. மைதா மாவு - 50 கிராம்.
  6. பொடியாக நறுக்கிய குடைமிளகாய் - 1.
  7. மிளகாய்  தூள் - 2 ஸ்பூன்.
  8. சோம்பு தூள் - 1/2 ஸ்பூன்.
  9. இஞ்சி தூள் - 1/2 ஸ்பூன்.
  10. கார்ன் பிளவர் மாவு - 100 கிராம்.
  11. இஞ்சி - ஒரு துண்டு.
  12. பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம் - 1.
  13. பொடியாக நறுக்கிய தக்காளி - 1.
  14. ரெட் சில்லி சாஸ் - 1 ஸ்பூன்.
  15. கீரின்  சில்லி சாஸ் - 1 ஸ்பூன்.
  16. தக்காளி சாஸ் - 1 ஸ்பூன்.
  17. சோயா சாஸ் - 1 ஸ்பூன்.
  18. வினிகர் - 1 ஸ்பூன்.
  19. மிளகு தூள் - 1 ஸ்பூன்.
  20. எண்ணெய் - 1/2 லிட்டர்.
  21. உப்பு தேவையான - அளவு.
Method: 

செய்முறை ;--  

  1. ஒரு பாத்திரத்தில் பொடியாக நறுக்கிய 1/4 கிலோ முட்டைகோஸ், பொடியாக நறுக்கிய வெங்காயத்தாள் 100 கிராம்,பொடியாக நறுக்கிய 2 பச்சை மிளகாய் மற்றும் தேவையான  அளவு உப்பு போட்டு  நன்றாக கலந்து அதில் உள்ள சாறை பிழிந்து முட்டை கோஸை ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொள்ளவும்.
  2. இதனுடன் 150 கிராம் துருவிய கேரட்,மைதா மாவு 50 கிராம்,பொடியாக நறுக்கிய ½  குடைமிளகாய்,மிளகாய் தூள் ஒரு ஸ்பூன்,சோம்பு  தூள் 1/2 ஸ்பூன்,இஞ்சி தூள் 1/2 ஸ்பூன்,கார்ன் பிளவர் மாவு 50  கிராம் மற்றும் தேவையான  அளவு உப்பு போட்டு  நன்றாக கலந்து விடவும்.
  3. கையில் சிறிதளவு எண்ணெய்யை தேய்த்துக்கொண்டு சிறிதளவு மாவை எடுத்து அதை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி தயார் செய்து வைத்துக்கொள்ளவும்.
  4. அடுப்பில் கடாய் வைத்து 1/2 லிட்டர்  எண்ணெய்யை ஊற்றவும்.
  5. எண்ணெய்  சூடானவுடன் தயார் செய்து வைத்துள்ள உருண்டைகளை ஓவ்வொன்றாக எண்ணெயில் போட்டு பொரிக்கவும்.
  6. திருப்பி திருப்பி போட்டு நன்றாக பொறித்து எடுத்து வைத்துக்கொள்ளவும்.
  7. அடுப்பில் கடாய் வைத்து 2 ஸ்பூன்  எண்ணெய்யை ஊற்றவும்.
  8. எண்ணெய் சூடானவுடன் பொடியாக நறுக்கிய ஒரு பச்சை மிளகாய் மற்றும் ஒரு துண்டு இஞ்சி போட்டு நன்றாக வதக்கவும்.
  9. இதனுடன் பொடியாக நறுக்கிய ஒரு பெரிய வெங்காயம் மற்றும் பொடியாக நறுக்கிய ஒரு தக்காளியை போட்டு  நன்றாக வதக்கவும்.
  10. இதனுடன் பொடியாக நறுக்கிய ½  குடைமிளகாய் மற்றும் பொடியாக நறுக்கிய சிறிதளவு வெங்காயத்தாள் போட்டு நன்றாக வதக்கவும்.
  11. இதனுடன் ஒரு ஸ்பூன் ரெட் சில்லி சாஸ்,ஒரு ஸ்பூன் கீரின்  சில்லி சாஸ்,ஒரு ஸ்பூன் தக்காளி சாஸ் ஒரு ஸ்பூன் சோயா சாஸ்,ஒரு ஸ்பூன்,மிளகாய் தூள் ஒரு ஸ்பூன்,மிளகு தூள் ஒரு ஸ்பூன் மற்றும் தேவையான  அளவு உப்பு போட்டு  கலந்து விடவும்.
  12. இதனுடன் 50 கிராம் கார்ன் பிளவர் மாவை தண்ணீரில் போட்டு கரைத்து ஊற்றி கலந்து விடவும்.
  13. இதனுடன் 2 டம்ளர் தண்ணீரை ஊற்றி கலந்து விடவும்.
  14. இதனுடன் எண்ணெயில் பொறித்து வைத்துள்ள உருண்டைகளை ஓவ்வொன்றாக போட்டு கலந்து விடவும்.
  15. இப்போது அடுப்பில் இருந்து இறக்கி விடலாம்.
  16. சுவையான வெஜிடபிள் மஞ்சூரியன் ரெடி.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 14 hours ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 14 hours ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 6 months 16 hours ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 16 hours ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 8 months 14 hours ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 8 months 14 hours ago