முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

பெண்கள் கருப்பை - சுகப்பிரசவம் - சித்த மருத்துவ குறிப்புக்கள் | Siddha Medicine Tips

Image Unavailable

  1. கருப்பை பலமடைய ;--சதகுப்பை,கருஞ்சீரகம்,மரமஞ்சள் ஆகியவற்றை சம அளவு எடுத்து  நன்றாக அரைத்து இதனுடன் தேவையான அளவு பனைவெல்லம் சேர்த்து கலந்து  வைத்துக்கொண்டு இந்தகலவையை காலை,மாலை 5 கிராம் சாப்பிட்டு வந்தால் பலனடையலாம்.
  2. கருவுற்ற தாய்மார்கள் ;-- சாப்பிட சிறந்த பழம் மாம்பழம்.
  3. சுகப்பிரசவம் ஆக ;-- ஆப்பிள்பழம்,தேன்,ரோஜாஇதழ்,குங்குமப்பூ,மற்றும் ஏலக்காய் ஆகியவற்றை எடுத்து அரைத்து 2 கிராம் அளவுக்கு  சாப்பிடலாம்.
  4. கர்ப்பாயாச கோளாறு நீங்க ;-- சிறுகுறிஞ்சா  இலை, மற்றும் களாஇலையை எடுத்து நன்றாக அரைத்து வெறும் வயிற்றில் குடிக்கவும்.
  5. கருச்சிதைவு எற்படாமல்  தடுக்க ;-- அசோகப்பட்டை,மாதுளைவேர்,மாதுளை தோல்,ஆகியவற்றை பொடி செய்து 3 சிட்டிகை 3 வேளை சாப்பிடலாம்.
  6. கருப்பை குறைபாடுகள் நீங்க ;-- பருத்தி இலை சாறை தேனுடன் கலந்து சாப்பிடலாம்.
  7. குழந்தையின்மை நீங்க ;-- பெண்கள் வேப்பம் பூவு டன் மிளகு சேர்த்து பவுடராக்கி சப்ப்பிட்டு வரலாம்.
  8. கர்பப்பை புழு நீங்க ;-- மாதவிடாய் முதல் 3 நாட்கள் வெள்ளறுகு சமூலத்தை அரைத்து 2 கிராம் அளவு சாப்பிடலாம்.
  9. குழந்தை சிகப்பாக பிறக்க ;-- கர்ப்பிணிப் பெண்கள் வெற்றிலை பாக்குடன் குங்குமப்பூவை சேர்த்து சாப்பிடலாம்.
  10. பிள்ளை பேரு உண்டாக ;-- மாதுளை வேர் பட்டை விதை பொடி 3 கிராம் அளவுக்கு காலை,மாலை வெந்நீரில் சாப்பிட்டு வரவும்.
  11. கர்ப்பப்பை நோய்கள் தீர ;-- கொடி வேலி வேர் பட்டையை அரைத்து பாலில் கலந்து காலை,மாலை 21 நாட்கள் சாப்பிடலாம்.
  12. பெரும்பாடு தீர கர்பப்பை பலப்பட ;-- வெட்சிபூவை அரைத்து அதனுடன் அருகம்புல் சாறு கலந்து குடிக்க பெரும்பாடு தீரும் கர்பப்பை பலப்படும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்