முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

கால் வலி,மூட்டு வலி குணமாக எளிய மருத்துவம்

  1. நமது உடலில் நீர் சத்து,சர்க்கரை சத்து,மற்றும் உப்பு சத்து குறைவதால் கால் வலி,மூட்டு வலி வருகிறது.
  2. வாத நீர் இருந்தாலும் மூட்டு வலி வரும்.தேவையான அளவு நீர் அருந்தி சிறுநீர் நன்கு பிரிந்தால் இந்த நோய் வருவதை தடுக்க முடியும்.
  3. வாத நீர் மூட்டுக்களில் உள்ள சவ்வுகளை தாக்கி வலிகளை ஏற்படுத்துகிறது.
  4. பெண்களுக்கு மாதவிடாய் முடிந்த பின்னர் கால்சியம் சத்து குறைவதால் முட்டு வலி வருகிறது.
  5. ஆண்களுக்கு உடல்பருமன் காரணமாக உடலின் மொத்த எடையும் கால் பகுதி தாங்குவதால் எளிதில் முட்டுவலி வருகிறது.
  6. உணவு எடுத்துக்கொண்ட பின் சரியாக நீர் அருந்த வில்லையெனில் நீர் சத்து குறைந்து மூட்டுகளில் வலி ஏற்படுகிறது.
  7. ஒரு சிலர் சர்க்கரை சத்து கூடிவிடும் எனக்கருதி குறைவாக உணவை உண்பதால் சர்க்கரை மற்றும் உப்பு சத்து குறைந்து மூட்டு வலி ஏற்படுகிறது.
  8. பெண்களை பொறுத்த வரை சரியான சாப்பாடு மற்றும் சரியான அளவு நீர் அருந்தாத காரணத்தினாலும்,சாப்பாட்டை நேரம் தவறி உண்பதாலும் கால் வலி,மூட்டு வலி  வர வாய்ப்பு அதிகமாக உள்ளது.
  9. நாம் அன்றாடம் பயன் படுத்தும் எண்ணெய்களை பயன் படுத்தி  இந்த வலிகளை சுலபமாக குணப்படுத்தலாம்.
  10. நல்லெண்ணெய் 100 மில்லி,கடுகு எண்ணெய் 100 மில்லி மற்றும் வேப்ப எண்ணெய் 50 மில்லி,எடுத்து கலந்து நன்றாக சூடு படுத்தி, ஆறிய பின்னர் கட்டி சூடம் சிறிதளவு போட்டு கலந்து,இந்த எண்ணெய்யை வலி உள்ள இடத்தில் பூசிவந்தால் வலி சரியாகும்.
  11. நீர் தன்மை கூடுவதால் கால் வீக்கம் ஏற்படுகிறது.உணவுக்காட்டுப்பாடு இல்லை என்றாலும்,அதிக நேரம் பேருந்து பயணத்தின் போதும் கால் வீக்கம் ஏற்படும்.கால் வீக்கம்,கால் வலி மற்றும் மூட்டு வலி ஆகியவற்றிற்கு  இந்த எண்ணெய் தடவ சரியாகும். 
  12. இந்த எண்ணெயை தொடர்ந்து 15 நாட்கள் தடவி வர வலி குறையத்தொடங்கும்,வலி குறைந்தாலும் இந்த எண்ணெய்  தொடர்ந்து பயன்படுத்தி வந்தால் எதிர் காலத்தில் கால் வலி மற்றும் மூட்டு வலி வருவதை தடுக்கலாம்.
  13. சுண்ணாம்பு சத்து அதிகம் உள்ள வாழைத்தண்டு மற்றும் அரைக்கீரையை ஒரு நாள் விட்டு ஒரு நாள் உண்பதால் கால் வலி மற்றும் மூட்டு வலி வராமல் தடுக்க முடியும்.
  14. தண்டுக்கீரை மற்றும் சுண்டக்கடலையில் கால்சியம் சத்து அதிகமாக உள்ளது,இதை உணவில் அடிக்கடி சேர்த்து வர எலும்புகள் பலமடைந்து முட்டு வலிகள் குறையும். 
  15. வெற்றிலை மற்றும் பாக்கை சுண்ணாம்புடன் சேர்த்து சாப்பிட்டு வர மூட்டு வலி குணமாகும்.
  16. சாப்பிட்ட உடன் நீர் அருந்தக்கூடாது, சாப்பிட்டு 20நிமிடம் கழித்து 200 மில்லி  மற்றும் தேவைப்படும்போது எல்லாம் தண்ணீரை உடனே அருந்த வேண்டும்.
  17. நவதானிங்களை பயன்படுத்தி செய்யப்படும் தோசையை சாப்பிவதன் மூலம் எல்லா விதமான சத்துக்களும் உடலுக்கு கிடைப்பதால் கால் வலி மற்றும் மூட்டு வலி குறையும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 4 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 4 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 5 months 4 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 4 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 7 months 4 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 7 months 4 weeks ago