முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பா.ஜ.க.வில் இணைந்தார் பிரபல மலையாள நடிகர் சுரேஷ் கோபி

புதன்கிழமை, 19 அக்டோபர் 2016      சினிமா
Image Unavailable

கொச்சி : பிரபல மலையாள நடிகர் சுரேஷ் கோபி பா.ஜ.க.வில் இணைந்தார்.

மாநிலங்களவை  உறுப்பினரும், மலையாள நடிகருமான சுரேஷ் கோபி பா.ஜ.க.,வில் இணைந்தார். கேரளாவில் நடந்த சட்டமன்ற தேர்தலின் போது பா.ஜ.க கட்சியின் சார்பாக பிரச்சாரம் செய்த எம்.பி.சுரேஷ் கோபி தற்போது அதிகாரப்பூர்வமாக பாரதிய ஜனதா கட்சியில் இணைந்துள்ளார்.

இந்தாண்டு ஏப்ரல் மாதம் சுரேஷ் கோபியை கலைத்துறை சார்பில் மாநிலங்களவை உறுப்பினராக மத்திய அரசு நியமித்தது. மலையாள சினிமாவில் மாநிலங்களவைக்கு தேர்வு செய்யப்பட்ட முதல் எம்.பி. என்ற பெருமைக்குரியவர் சுரேஷ் கோபி என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது பா.ஜ.க.,வில் இணைந்துள்ள சுரேஷ் கோபி, மத்திய சினிமா வளர்ச்சி கழகத்தின் தலைவராகவும் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்