முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காவிரி நதிநீர் வழக்கில் ஏப்ரல் மாதம் இறுதித் தீர்ப்பு : சுப்ரீம் கோர்ட் அறிவிப்பு

செவ்வாய்க்கிழமை, 7 பெப்ரவரி 2017      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி  - தமிழகம், கர்நாடக மாநிலம் இடையேயான காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பான வழக்கின் இறுதித் தீர்ப்பு ஏப்ரல் மாதத்தில் வழங்கப்படும் என சுப்ரீம் கோர்ட் அறிவித்துள்ளது.

தமிழகம் மேல்முறையீடு
தமிழ்நாடு, கர்நாடக மாநிலம் இடையே உள்ள காவிரி நதிநீர் பங்கீட்டில் உள்ள சிக்கலை தீர்ப்பதற்காக தமிழக அரசு சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. நடுவர் மன்ற தீர்ப்புக்கு எதிராக தமிழகம், கர்நாடகம், கேரளா ஆகிய மாநிலங்கள் சார்பாக மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளன. இவ்வழக்குகள்  பல கட்டமாக விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு அவ்வப்போது தேவையான தீர்ப்பை சுப்ரீம் கோர்ட் அளித்துவந்தது.

இறுதித் தீர்ப்பு
இந்நிலையில், இவ்வழக்கின் இறுதிக்கட்ட விசாரணையை வரும் மார்ச் 21-ம் தேதிக்கு ஒத்திவைத்த நீதிபதிகள், மார்ச் 21 முதல் ஏப்ரல் 11 வரை தினமும் இவ்வழக்கு மீது விசாரணை செய்யப்படும் என தெரிவித்துள்ளனர். விசாரணை முடிவுற்ற தினத்திலிருந்து மூன்று வாரத்தில் இறுதித் தீர்ப்பு அளிக்கப்படும் எனவும் நீதிபதிகள் தெரிவித்தனர். இறுதித் தீர்ப்பு தமிழகத்திற்கு சாதகமாக வரும் பட்சத்தில், டெல்டா விவசாயிகள் குறுவை சாகுபடியை மகிழ்ச்சியுடன் எதிர்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்