முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டிரைவிங் லைசென்ஸை புதுப்பிக்க தவறினால் அபராதம் என்ற அரசாணை ரத்து: ஐகோர்ட் உத்தரவு

செவ்வாய்க்கிழமை, 4 ஏப்ரல் 2017      சென்னை

ஓட்டுநர் உரிமத்தை புதுப்பிக்க தவறினால் அபராதம் என்ற மத்திய அரசின் ஆணையை சென்னை ஐகோர்ட் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.

மத்திய அரசு

ஓட்டுநர் உரிமம் பெறுவது மற்றும் உரிமத்தை புதுப்பிப்பதற்கான கட்டணங்களை 4 மடங்கு மத்திய அரசு உயர்த்தியது. அனைத்து விதமான வாகனங்களுக்கும் தனிநபர் ஓட்டுநர் உரிமம் பெறுவதற்கான கட்டணங்களை தற்போதுள்ள சுமார் 320 ரூபாய் என்ற அளவில் இருந்து ரூ.1,200 ஆக மத்திய அரசு உயர்த்தியது.இந்நிலையில், ஓட்டுநர் உரிமத்தை புதுப்பிக்க தவறினால் அபராதம் என்ற மத்திய அரசின் ஆணையை சென்னை ஐகோர்ட் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.மத்திய அரசின் புதிய விதிகளை எதிர்த்து லாரி உரிமையாளர்கள் சங்கம், ஓட்டுநர் பயிற்சி பள்ளிகள் தொடர்ந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. எந்த வித அதிகாரமும் இன்றி புதிய விதிகள் கொண்டு வரப்பட்டுள்ளன என்று வழக்கை விசாரித்த நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.முன்னதாக, ஓட்டுநர் உரிம கட்டணங்களை அதிகரிக்கும் வகையில், மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகத்தின் மோட்டார் வாகன சட்டத்தில் மத்திய அரசு திருத்தம் கொண்டுவந்தது. கடந்த 2001-2002-ம் ஆண்டில் கடைசியாக ஓட்டுநர் உரிமத்திற்கான கட்டணம் உயர்த்தப்பட்டது.மேலும், வாகனம் விற்கும் போது ஆட்சேபனையில்லா சான்று தாமதமானால் அபராதம் விதிக்கும் விதி ரத்து செய்யப்பட்டுள்ளது.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 7 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 9 months 2 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 9 months 2 weeks ago