முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மாற்றுத் திறனாளிகளுக்கான அடையாள அட்டை வழங்குவது தொடர்பான பயிற்சி கருத்தருங்கு: கலெக்டர் இல.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார்

செவ்வாய்க்கிழமை, 25 ஏப்ரல் 2017      விழுப்புரம்
Image Unavailable

 

விழுப்புரம் மாவட்டம் மாற்றுத் திறனாளிகளுக்கான தனிப்பட்ட அடையாள அட்டை இணையதளம் மூலமாக வழங்குவதற்கான பயிற்சி கருத்தருங்கத்தை கலெக்டர் இல.சுப்பிரமணியன் தொடக்கிவைத்தார்.

 

 

அலுவலர்களுக்கு பயிற்சி

விழுப்புரம் மாவட்டம் தெய்வானை அம்மாள் மகளிர் கலை கல்லூhயில் நடந்த மாற்றுத் திறனாளிகளுக்கான தனிப்பட்ட அடையாள அட்டை வழங்குவதற்கான பயிற்சி, விழுப்புரம், கடலூர், திருவண்ணாமலை ஆகிய மூன்று மாவட்டங்களை சார்ந்த, மருத்துவ கல்லூரி மற்றும் அரசு மருத்துவ மனையை சார்ந்த சிறப்பு மருத்துவ அலுவலர்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகள் விவரங்கள் பதிவேற்றம் செய்யும் தொண்டு நிறுவனங்கள், இசேவை மைய அலுவலர்கள், அனைவருக்கும் கல்வி இயக்கம், தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்கம், புதுவாழ்வு திட்ட அலுவலர்களுக்கு பயிற்சி வழங்கப்பட்டது.

இப்பயிற்சியில், மாற்றுத் திறனாளிகள் தங்களது விவரங்கள் மற்றும் சான்றுகள் பதிவேற்றம் செய்யும் வழிமுறைகளும், பதிவேற்றம் செய்யப்பட்ட மாற்றுத் திறனாளிகளுக்கு, மாற்றுத் திறனாளிகளுக்கான இணையதள மருத்துவ சான்றுகள் வழங்கி, மாற்றுத் திறனாளிகளுக்கான தனிப்பட்ட அடையாள அட்டை வழங்குவதற்கான பயிற்சி; வழங்கப்பட்டது. மாற்றுத் திறனாளிகளுக்கான தனிப்பட்ட அடையாள அட்டை வழங்குவதன் மூலம் மாவட்ட அளவில் மாற்றுத் திறனாளிகள் விவரங்களும், இணையதளம் மூலமாக எளிதாக தேவையான உதவிகள் பெற விண்ணப்பிக்கும் வசதிகளும், மாற்றுத் திறனாளிகள் சான்றுகள் தவறவிட்டாலும், இணையதளம் மூலமாக நகல் பெறும் வசதிகளும், தகுதியுடைய மாற்றுத் திறனாளிகள் கண்டறிந்து தேவையான உதவிகள் செய்வதற்கு வசதியாகவும், இரட்டிப்பு விண்ணம் செய்வதை தடுத்திடவும் பெறும் உதவியாக இருக்கும்.இப்பயிற்சியினை விழுப்புரம் கலெக்டர் இல.சுப்பிரமணியன்; குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்தார்.

பலர் பங்கேற்பு

 இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் சி.ராஜசேகரன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) அனுசுயாதேவி, விழுப்புரம் அரசு மருத்துவ கல்லூரி முதல்வர் டாக்டர்.வனிதாமணி, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர், ய.தே.ஸ்ரீநாத், கடலூர் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் பாலாஜீ, திருவண்ணாமலை மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் ஜான்சி, அரசு அலுவலர்கள், மாற்றுதிறனாளிகள் தொண்டு நிறுவனம் மற்றும் பலர் கலந்துக்கொண்டனர்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்