முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு ஓய்வூதியத்திற்கான ஆணைகளை கலெக்டர் வழங்கினார்

செவ்வாய்க்கிழமை, 6 ஜூன் 2017      திருவள்ளூர்
Image Unavailable

 

திருவள்ளுர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட கலெக்டர் எ.சுந்தரவல்லி தலைமையில் நடைபெற்றது.

கோரிக்கை மனுக்கள்

 இக்கூட்டத்தில் பொது மக்களின் கோரிக்கை மனுக்களை மாவட்ட கலெக்டர் பெற்றுக் கொண்டார். மேலும், இக்கூட்டத்திற்கு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து வருகை புரிந்த பொதுமக்கள் தங்களது தனிப்பட்ட குறைகளை நிவர்த்தி செய்யவும், உதவிகள் வழங்கிடவும் கோரி மனுக்களை அளித்தனர். இதில் நிலம் சம்பந்தமாக 72 மனுக்களும், சமூக பாதுகாப்பு திட்டம் 30 மனுக்களும், சான்றிதழ் 2 மனுக்களும், ஆதிதிராவிடர் ஃ பிற்படுத்தப்பட்டோர் நலம் 8 மனுக்களும், வேலைவாய்ப்பு 24 மனுக்களும், சட்டம் மற்றும் ஒழுங்கு 6 மனுக்களும், ஊரக ஃ நகர்ப்புற வளர்ச்சி 15 மனுக்களும், கடனுதவி 7 மனுக்களும், அடிப்படை வசதி ஃ போக்குவரத்து ஃ சுகாதாரம் 2 மனுக்களும், இதரதுறை 51 மனுக்களும், சமூக நலத்திட்டம் 7 மனுக்களும், குடும்ப அட்டை 1 மனுவும், கல்வி 3 மனுக்களும், பேரிடர்கள் 1 மனுவும் என மொத்தம் 229 மனுக்கள் பெறப்பட்டது.

இம்மனுக்களின் மீது உரிய நடவடிக்கை மேற்கொண்டு, தகுதியுள்ள பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கிட துறை அலுவலர்களுக்கு உத்திரவிட்டார். இக்கூட்டத்தில் 3 நபர்களுக்கு மாற்றுத்திறனாளிகளுக்கான மாதம் ரூ.1000-க்கான ஓய்வூதிய ஆணைகளை மாவட்ட கலெக்டர் எ.சுந்தரவல்லி வழங்கினார்.

இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் கே.முத்து,மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் ஜெயசந்திரன், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்;) செ.மணிலா மற்றும் அரசு அலுவலர்கள் உடன் இருந்தனர்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து