முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

துப்பாக்கி சுடும் போட்டியில் வெண்கலப்பதக்கம் வென்ற தூத்துக்குடி வீரர்:கலெக்டர் என்.வெங்கடேஷ் வாழ்த்து

புதன்கிழமை, 19 ஜூலை 2017      தூத்துக்குடி
Image Unavailable

சென்னை, ஆவடி காவல்துறை மைதானத்தில் நடைபெற்ற ஆண்களுக்கான 50 மீட்டர் துப்பாக்கி சுடும் போட்டியில் வெண்கலப்பதக்கம் வென்ற தூத்துக்குடி துப்பாக்கி சுடுவோர் சங்கத்தை சேர்ந்த திருகே.பர்னபாஸ் தூத்துக்குடி கலெக்டர் என்.வெங்கடேஷ் அவர்களிடம்  வாழ்த்து பெற்றார்.

 வாழ்த்து

தூத்துக்குடி மாவட்ட துப்பாக்கி சுடுவோர் சங்கம் 1998 செப்டம்பர் -6 அன்று அப்போதைய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜாங்கிட்  தொடங்கப்பட்டது. இதன் தலைவராக கலெக்டர் அவர்களும், துணை தலைவராக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மற்றும் மாவட்ட வருவாய் அலுவலர் ஆகியோர்களும் உள்ளனர். இச்சங்கத்தின் தூத்துக்குடி, திருநெல்வேலி, விருதுநகர், கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களைச்சார்ந்த ஆண்கள் 150 பேரும், பெண்கள் 12 பேரும், மாணவ-மாணவியர்கள் 24 பேரும் உறுப்பினராக உள்ளனர்.தற்போது சென்னை ஆவடி காவல்துறை மைதனாத்தில் நடைபெற்ற 43வது மாநில துப்பாக்கி சுடுதல் சாம்பியன் போட்டி 20 பிரிவுகளில் மொத்தம் 90 போட்டிகள் நடைபெற்றது. இதில் தூத்துக்குடி துப்பாக்கி சுடுவோர் சங்கத்தின் சார்பாக 13 பேர் இப்போட்டிகளில் கலந்து கொண்டனர். இதில் தூத்துக்குடி துப்பாக்கி சுடுவோர் சங்கத்தை சார்ந்த கே.பர்னபாஸ் அவர்கள்  ஆண்களுக்கான 50 மீட்டர் Small bore / Standard Rifle (Prone) event for Veterans  (60 வயதிற்கு மேற்பட்ட) பிரிவில் பங்கேற்று வெண்கலப்பதக்கம் வென்றார்.வெண்கலப்பதக்கம் வென்ற கே.பர்னபாஸ் தூத்துக்குடி கலெக்டர் (ம) மாவட்ட துப்பாக்கி சுடுவோர் சங்கத்தலைவருமான என்.வெங்கடேஷ் அவர்களிடம் பதக்கத்தை காண்பித்து வாழ்த்து பெற்றார்.மேலும் கே.பர்னபாஸ் என்பவர் கடந்த 2014 ஆண்டில் நடைபெற்ற போட்டியில் வெண்கலப்பதக்கமும், 2015,2016 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற போட்டிகளில் வெள்ளிப்பதக்கங்களும் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.இந்நிகழ்வில்; தூத்துக்குடி சார் ஆட்சியர் தீபக் ஜேக்கப், துப்பாக்கி சுடுதல் சங்க சேர்மன் டி.உதயசங்கர், துப்பாக்கி சுடுதல் சங்க துணை செயலாளர் மேத்யூஸ், நிர்வாக குழு உறுப்பினர் டாக்டர்.பேட்டர்சான்எட்வர்ட் உட்பட தூத்துக்குடி துப்பாக்கி சுடுவோர் சங்க நிர்வாகிகள் பலர்  கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து