முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கு: ப.சிதம்பரத்திற்கு சி.பி.ஐ. காவல் மேலும் ஒரு நாள் நீட்டிப்பு

திங்கட்கிழமை, 2 செப்டம்பர் 2019      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி : ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கில் ப.சிதம்பரத்தின் சிபிஐ காவல் நேற்றுடன் முடிவடைந்த நிலையில், அவருக்கு காவல் மேலும் நீட்டிக்கப்பட்டுள்ளது.

ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள ப.சிதம்பரத்தை கடந்த 21 -ம் தேதி கைது செய்த சிபிஐ காவலில் எடுத்து விசாரித்து வருகிறது. ப.சிதம்பரத்தின் சிபிஐ காவல் நேற்றுடன் முடிவடைந்த நிலையில், நேற்று சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றத்தில் சிதம்பரம் ஆஜர்படுத்தப்பட்டார்.

ப.சிதம்பரத்தை காவலில் வைத்து விசாரிக்க கூடுதலாக ஒரு நாள் அவகாசம் அளிக்க வேண்டும் என்று சிபிஐ தரப்பில் முறையிடப்பட்டது. சிபிஐயின் கோரிக்கையை ஏற்ற நீதிமன்றம், ப. சிதம்பரத்திற்கு மேலும் ஒரு நாள் காவலை நீட்டித்து உத்தரவிட்டது

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து