முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வீரமே வாகை சூடும் – விமர்சனம்

ஞாயிற்றுக்கிழமை, 6 பெப்ரவரி 2022      சினிமா
Image Unavailable

Source: provided

விஷால் தயாரித்து நடித்துள்ள படம் வீரமே வாகை சூடும். காவல்துறையில் எஸ்.ஐக்கான தேர்வு எழுதிவிட்டுக் காத்திருப்பவர்  நாயகன் விஷால். கல்லூரிக்குச் செல்லும் அவரது தங்கை ரவீனா ரவுடிகளால் கொல்லப்படுகிறாள். ஆலைக் கழிவுகளால் ஆபத்து என போராடும் குமரவேலுவும் கொல்லப்படுகிறார். மற்றொரு கல்லூரி மாணவியின் அந்தரங்க வீடியோவை வைத்து மிரட்டும் ரவுடிக் குத்பல். இப்படி மூன்று க்ரைம் சம்பவங்களை ஒன்றோடு ஒன்று முடிச்சுப்போட்டு க்ளைமாக்ஸில் முடிச்சுகளை அவிழ்க்கிறார் அறிமுக இயக்குநர் து.ப சரவணன். வழக்கமான தனது ஆக்‌ஷன் படங்களுக்கே உரிய துடிப்புடன் நடித்திருக்கிறார் விஷால். அவரின் நண்பன் தளபதியாக யோகிபாபு வழக்கம் போல சில இடங்களில் சிரிக்க வைக்கிறார். வில்லன்களின் அறிமுகத்துடன் இருள் கவ்விய அந்த துவக்கக்காட்சியே த்ரில்லிங் ஆக்கிவிடுகிறது படம். திசை திருப்பப்பட்ட தனது நெருக்கமானவர்களின் படுகொலைப் பின்னணி பற்றி அறிந்துகொள்ள தனி மனிதனாக விஷாலின் ட்ரேஸ் அண்ட் சேசிங் காட்சிகள் புல்லட் வேகத்தில் சீறிப்பாய்கிறது.  ரவீனா ரவி, கவிதா பாரதி, மாரிமுத்து, ஜார்ஜ் மரியன் ஆகியோரின் நடிப்பு அருமை. யுவனின் பின்னணி இசையும் கவின் ராஜின் ஒளிப்பதிவும் மிரள வைக்கின்றன. தலைப்புக்கேற்றார்போல படத்தில் வெற்றி வாகை சூடுகிறவர் ஸ்டண்ட் மாஸ்டர்தான். சண்டைக்காட்சிகள் படத்தில் ப்ளஸ். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து