முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ரயில்வே என் குழந்தை போன்றது; ஆலோசனைகளை வழங்கத் தயார் : ஒடிசா ரயில் விபத்து பகுதியில் மம்தா பேட்டி

சனிக்கிழமை, 3 ஜூன் 2023      இந்தியா
Mamata 2023-06-03

Source: provided

புவனேஸ்வர் :  "ரயில்வே என் குழந்தையைப் போன்றது. ரயில்வே குடும்பத்தைச் சேர்ந்த நான், எனது ஆலோசனைகள் வழங்கத் தயாராக இருக்கிறேன்" என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
ஒடிசா மாநிலம் பாலசோர் பகுதியில், ஷாலிமர் - சென்னை சென்ட்ரல் கோரமண்டல் எக்ஸ்பிரஸ், யஷ்வந்த்பூர் - ஹவுரா அதிவிரைவு ரயில், ஒரு சரக்கு ரயில் ஆகியவை மோதி பெரும் விபத்து நிகழ்ந்தது. இந்த விபத்து வெள்ளிக்கிழமை இரவு 7 மணிக்கு நிகழ்ந்தது. இந்த கோர விபத்தில் 250-க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். 1000-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
இந்த நிலையில் மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி ரயில் விபத்து நடந்த பகுதிக்கு சனிக்கிழமை நேரில் சென்று விபத்துக்குள்ளான ரயில் பெட்டிகளைப் பார்வையிட்டார். மேலும், விபத்து எவ்வாறு நிகழ்ந்தது என்பது குறித்து அங்கிருந்த அதிகாரிகளிடம் விசாரித்தார். அதனைத் தொடர்ந்து ரயில்வே அமைச்சர் அஸ்வின் வைஷ்ணவ் மற்றும் மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதானைச் சந்தித்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மம்தா பானர்ஜி, "நான் ரயில்வே அமைச்சர் மற்றும் பாஜக எம்பிகளுடன் இங்கு நிற்கிறேன். உயிரிழந்தவர்களுக்கு ரயில்வே சார்பில் 10 லட்சம் ரூபாய் இழப்பீடாக வழங்கப்பட இருக்கிறது. மேற்கு வங்கத்தைச் சேர்ந்த உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு எங்கள் மாநில அரசு 5 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கும். அதேபோல் பணிகள் முடியும் வரை ரயில்வேக்கும் ஒடிசா மாநில அரசுக்கும் எங்கள் அரசு முழு ஒத்துழைப்பு வழங்கும். நாங்கள் நேற்று முன்தினம் 40 ஆம்புலன்ஸ்களை அனுப்பினோம். நேற்று 70 ஆம்புலன்ஸ்களையும் 40 மருத்துவர்களையும் அனுப்பி உள்ளோம்.
இந்த விபத்தில் எத்தனை பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறித்து அறிய தெளிவான விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும். தீவிரமாக காயமடைந்தவர்களுக்கு இங்கு சிகிச்சை அளிக்க முடியவில்லையென்றால், அவர்களை மேற்கு வங்கத்திற்கு அழைத்துச் சென்று சிகிச்சையளிக்கத் தயாராக இருக்கிறேன். தற்போதெல்லாம் ரயில்வே ப்டஜெட் தாக்கல் செய்யப்படுவதில்லை. ரயில்வே துறை என்னுடைய குழந்தை போன்றது. ரயில்வே குடும்பத்தைச் சேர்ந்தவள் என்ற முறையில் நான் என்னுடைய ஆலோசனைகளை வழங்கத் தயாராக இருக்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 6 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 8 months 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 8 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து